இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலம் கல்விச் சமூகமயமாக்கல்

கல்வி

இணைப்பாடவிதான செயற்பாடுகள் மூலம் கல்விச் சமூகமயமாக்கல்

இணைபாடச்செயற்பாடு என்ற வரையறைக்குள் பாடசாலைக்கலைத்திட்டத்தில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளைத் தவிர்ந்த அனைத்துச் செயற்பாடுகளும் உள்ளடங்குகின்றது. அதாவது இல்ல விளையாட்டுப்போட்டி, கோட்ட, வலய, மாகாண, தேசிய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி, தமிழ்த்தினப்போட்டிகள், ஆங்கில, விஞ்ஞான, கணித வினாடிவினாப் போட்டிகள், வாணிவிழா, மீலாத்விழா ,ஒளிவிழா, ஆசிரியர்தினம், பாடசாலைத்தினம், அறிஞர்களின் நினைவுதினம், கல்விச் சுற்றுலா, சாரணர் நிகழ்வுகள், மாணவர் தலைவர் சின்னம் சூட்டும் நிகழ்வுகள், பாடசாலைக் கண்காட்சி கலைவிழா, வெளிக்களச்செயற்பாடுகள் இசை நாடக நடன சித்திர போட்டிகள் என அனைத்துச் செயற்பாடுகளும் இணைப்பாட விதானச் செயற்பாடுகளில் அடங்கும்.
இவ்வாறான இணைப்பாடச் செயற்பாடுகளில் பாடசாலை மாணவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனால் பிள்ளை தானாகவே சமூகமயமாக்கலுக்கு இட்டுச் செல்லப்படுகின்றது. உதாரணமாக:- இல்ல விளையாட்டுப்போட்டி “விளையாட்டுப் பிள்ளையிடம் நற்பண்புகளை வளர்ப்பதுடன், விட்டுக்கொடுப்பு, வெற்றி தோல்விகளை சமமாக ஏற்றுக் கொள்ளல், தலைமைக்கு கட்டுப்படும் பண்பு விதிகளைக் கடைபிடித்தல், சட்டதிட்டங்களை மீறாமை, உடலைக் கட்டாகப் பேணுதல், வெற்றிக்காகப் போராடும் முயற்சியை வளர்த்தல் போன்ற சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன.


இதனால் எதிர்காலத்தில் வாழ்க்கையில் வரும் தோல்விகளை தாங்கிக் கொள்வதற்கும், தற்கொலை போன்ற விடயங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும் மேலும் குற்றச் செயல்களான கொலை, மதுப்பாவனை போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பதற்கும் விளையாட்டுச் செயற்பாடுகள் உதவுகின்றன. கோட்ட, வலய, மாகாண, தேசிய ரீதியில் விளையாட்டுப் போட்டியில் ஈடுபடும் போது “கிணற்றுத் தவளையாக இல்லாமல்” சமூக விழிப்பு ஏற்பட்டு சமூகமயமாக்கல் தோற்றம் பெறுகின்றது அத்துடன் பிறரின் திறமைகளுடன் ஒப்பிடும்; போது “தான் எந்த நிலையில் உள்ளேன் என்பதையும்” இன்னும் எவற்றை வளர்க்க வேண்டும் என்றும் அறிவதுடன் மத, இன, சாதி, பேதங்களை மதிக்கும் தன்மையும், நட்புறவுடன் செயற்படும் ஆற்றலும் வளர்த்தெடுக்கப்படுகின்றது. உதாரணம்:- பாடசாலைத் தமிழ்த்தினப் போட்டி, ஆங்கில தினப் போட்டி மாணவர்களின் அறிவு மேம்படுவதுடன், போட்டி போட்டு செயற்படும் விதத்தை அறிந்து கொள்ளல், சமூகத்தில் பிற மாணவர்களுடன் சேர்ந்து பழகும் வாய்ப்பு, நட்புறவுகளை வளர்த்துக் கொள்ளல், தோல்வியை ஏற்றுக் கொண்டு வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் பண்பு என சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன.


எதிர்காலத்தில் வாழ்க்கையில் வரும் தோல்விகளை தாங்கிக் கொள்வதற்கும், தற்கொலை போன்ற விடயங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும் மேலும் குற்றச் செயல்களான கொலை, மதுப்பாவனை போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பதற்கும் விளையாட்டுச் செயற்பாடுகளே உதவுகின்றன. உதாரணம்:- மாணவர் தலைவர் பதவிகள் மற்றும் பயிற்சிப் பாசறைகள் தலைமைத்துவப்பண்பு வளர்க்கப்படுவதுடன் வாழ்வில் ஒரு செயலை பொறுப்பெடுத்து சரியாகத் திட்டமிட்டு நடாத்துதல், அதன் போது வரும் முரண்பாடுகளைத் தீர்த்தல், எந்த விடயத்தையும் துணிந்து செய்ய முற்படல், பிறரை தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருத்தல், சமூக சேவைகளில் ஈடுபடல் போன்ற சமூகமயமாக்கல் பண்புகள் வளர்க்கப்படுகின்றன. உதாரணம்:- வாணிவிழா, மீலாத்விழா, ஒளிவிழா மதங்களை மதித்து நடப்பதற்கு இது உறுதுணை புரிகின்றது. மற்றும் சமூகத்தில் இன, மத, ஒற்றுமைக்கும் இது வழி சமைக்கின்றது. இனக்கலவரங்கள் குறைவடைவதற்கும் இதுவே காரணமாகும்.
உதாரணம்:- சுற்றுலா, களப்பயணம் பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தும் பொது பல்வேறு சமூக கலாச்சாரங்களை உணரவும், சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைவது எப்படி என அறிந்து கொள்ளவும் முடிகிறது. குழுச் செயற்பாடுகள போன்றவை மூலம் உளவிருத்தி, தன்னம்பிக்கை தலைமைதாங்கும் பண்பு என்பன வளர்க்கப்பட்டு பின்காலத்தில் சமூகத்தில் செல்லும் பிள்ளைக்கு அவை சமூகத்தில் முன்மாதிரியாக வாழ, சமூகமயமாக்கலுக்கு வித்திடுகின்றது. மேலும் இவ்வாறான செயற்பாடுகள் மூலம் பயந்து பிறருடன் பேசாமல் ஒதுங்கி இருக்கும் பிள்ளை துணிந்து பிறருடன் சகஜமாக பேச முற்படுகின்றது. இணைப்பாடச் செயற்பாடுகள் மாணவனை சமூக மயமாக்கலுக்கு உட்படுத்துவது மட்டுமன்றி பாடசாலை வரவையும் அதிகரித்து கற்றலின் சலிப்புத்தன்மையை குறைக்கின்றது.


இதனால் பிள்ளைக்கு நல்லது எது ? தீயது எது ? என பகுத்துத் தெரிந்து கொள்ளும் “அறிவு” வளர்க்கப்படும். இவ்வாறே நேரடியாகவும் மறைமுகமாவும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் சமூக மயமாக்கலை ஏற்படுத்துகின்றது. பாடசாலையில் ஆசிரியர்களும் அதிபரும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை இணைப்பாடச் செயற்படுகளுக்கும் அளிப்பதன் மூலம் பிள்ளைகளிடத்தில் சமூக மயமாக்கலை ஏற்படுத்தி சமூகத்தில் நாட்டில் நற்பிரஜைகளை உருவாக்கும் தேசிய இலக்கை அடைய முடியும்.


குழந்தையை சமூகத்துக்குறிய வளர்ந்த ஒருவராக்குவதற்கு சமூகத்துக்குறிய வளர்ந்த ஒருவராக்குவதற்கு அப்பிள்ளைக்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய அன்பு செலுத்தக்கூடிய, தண்டனை வழங்கக்கூடிய எல்லா சமூக்க குழுக்களும் சமூகமயமாக்கல் கருவிகள் எனப்படும். இவற்றுல் முதன்மையானது குடும்பமாகும். தனியால் ஒருவர் முதலில் அங்கத்துவம் பெறும் நிறுவனம் குடும்பமாகும். பாடசாலை செல்லும் வயது வரை ஒரு பிள்ளை தனது முழு நாளையும் குடும்பத்திலே கழிக்கின்றது. அதனால் இக்காலப்பகுதியில் அப்பிள்ளை குடும்ப அங்கத்தவரின் உறவின் அடிப்படையிலே சமூக இணக்கம் பெறுகின்றது. வேறு எந்த சமூக நிறுவனங்களை விடவும் குடும்பத்தில் நிலவும் உறவு அந்நியோன்யமானதும், நெருங்கியதுமாகும்.


சிறுபிள்ளையொன்று முதன் முதலில் தன்னுடைய மொழியை கற்றுக்கொள்வது குடும்பத்திலாகும். வீட்டில் மூத்தோரது பேச்சுக்களை கேட்கும் அப்பிள்ளை படிப்படியாக அவற்றை உள்வாங்கிக் கொண்டு விளங்கிக் கொள்வதில் முயற்சிசெய்யும். முதலில் சிறிய சொற்கள் மூலம் சொல்வளத்தை ஆரம்பிக்கும் பிள்ளை படிப்படியாக அதனை விருத்திசெய்து கொள்ளும். இக்காலகட்டத்தில் குழந்தையின் சொற்பிரயோகங்கள் அனைத்துமே தன்னைச் சுற்றியுள்ள குடும்பத்தினரைக் கொண்டே அமையும். இவ்வாறு கற்றுக்கொள்ளும் பிள்ளை சமூகத்துக்கு சென்ற நிலையிலும் அந்தக்குழந்தை தான் அங்கு கற்ற வசனங்களையே பயன்படுத்த முற்படுவதனை அவதானிக்கலாம்.

இதன் போதுதான் நாம் முறண்பட்ட குடும்பங்களில் இருந்துவரும் பிள்ளைகள் தேவையற்ற வசனங்களை பிரயோகிப்பதனையும், அதே நேரம் மகிழ்ச்சியான குடும்பங்களில் இருந்துவரும் குழந்தைகள் நல்ல பண்பாடான சொற்களைப் பிரயோகிப்பதனையும் காணலாம்.
அவ்வாறே பெற்றோர் தொழிலுக்குச் செல்லும் வீடுகளில் குழந்தைகள் தனிமையில் கவனிப்பாறற்று விடப்படுகின்றனர். அவர்கள் பாடசாலைவிட்டு வந்ததும் பெற்றார் வரும்வரையில் தனது நன்பர்களுடன் சுற்றித்திரியமுற்படுகின்றனர். இரவுநேரத்தில் மட்டும் பெற்றோரின் பார்வையில் இருக்க மற்றைய நேரங்களில் வழிகாட்டல் இன்றி செயற்படுகின்றனர். இத்தகைய மாணவர்கள் சமூகத்துக்குச் செல்லும் போது யாருடையவும் கட்டளைகளுக்கு செவிசாய்க்காத நிலைகாணப்படுவதனை அவதானிக்கலாம். அத்துடன் யாரும் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதனை அவர்கள் விரும்பமாட்டார்கள்.


அதேபோன்று சில குடும்பங்களில் பெற்றார் கடுமையானவர்களாக நடந்து கொள்வார்கள். இந்த சூழலில் வாழும் குழந்தை வளரந்து சமூகத்தில் நடமாடும்போதும் இதன் தாக்கத்தை உணர்வார்கள். குறிப்பாக இவர்களிடையே பயந்த சுபாவம் காணப்படுவதுடன் எந்த ஒருவிடயத்தாலும் விரைவில் தாக்கம் அடையக்கூடியவர்களாக இருப்பதனை அவதானிக்களாம். இவர்கள் அவதானமான வேலைகளின் போது பின்நிற்பதனை அவதானிக்களாம். இவர்களால் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. அதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் மனஅழுத்தங்களுக்கு உற்பட்டுள்ளதாகும். இத்தகையவர்கள் பொதுவாக சுயமாக ஒரு இலக்கை உருவாக்கி செயற்பட முடியாதவர்களாக இருப்பார்கள். எப்போதுமே இன்னொருவர் வகுத்துத்தரும் விடயங்களிலே ஈடுபடுவார்கள்.


இதுபோன்று குழந்தைகள் எப்போதும் இன்னொருவரது செயலை பார்த்து பின்பற்றக்கூடியவர்களாவர். வீட்டில் இருக்கும் தாய் தந்தை, சகோதர சகோதரிகள் போன்றொரை பிள்ளை கூடுதலாகப் பின்பற்றும். இதன்போது தாய்தந்தையர் செயற்பாடுகள் குழந்தைகளின் சமூகசெயற்பாடுகளில் கூடிய தாக்கத்தை விளைவிக்கின்றனர். அவர்கள் இருவரும் நடந்துகொள்ளும் முறையினை அவதானிக்கும் குழந்தை அவன் அல்லது அவள் வளர்ந்ததும் தனது கணவருடன், மனைவியருடன் அதே முறையிலேயே நடந்துகொள்ள முற்படுவர். தாய் தந்தையர் சண்டைசச்சரவில் ஈடுபட்டால் இவர்களும் அந்த நிலைக்கு அவசரமாக சென்றுவிடுவதனை அவதானிக்கலாம். இன்று சமூகத்தில் பிரச்சினைக்குறிய குடும்பங்களின் முன் அனுபவங்களை அவதானிக்கும் போது அவர்கள் முறன்பாட்டுக்குள்ளானவர்களாக இருந்துள்ளதை அவதானிக்கலாம்.

ஜயலக்சனா இரகுநாதன்
நான்காம் வருட கல்வியியல் சிறப்புக்கற்கை மாணவி,
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை,
கலை கலாசாரபீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
வந்தாறுமுலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *