Tuesday, November 5, 2024
Homeபொதுஅறிவுஉங்கள் உடலில் வெளிறிய தோல் திட்டுகள் உள்ளதா?

உங்கள் உடலில் வெளிறிய தோல் திட்டுகள் உள்ளதா?

உங்கள் உடலில் வெளிறிய தோல் திட்டுகள் உள்ளதா?

உங்கள் உடலில் வெளிறிய திட்டுக்களை நீங்கள் அவதானித்தால் அது தோலில் ஏற்பட்டுள்ள ஒரு வகை அழற்சி அல்லது வெளிறிய தோல் நிலை என்று நீங்கள் எண்ணக்கூடும் இல்லையா?

இதற்கு காரணம் இலங்கையில் தொழுநோயினால் தோலில் ஏற்படும் திட்டுக்கள் எவ்வாறு இருக்கும் என நாம் அறியாத அளவிற்கு இந்நோய் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை ஆகும் .

ஆனால் துரதிஷ்ட வசமாக அண்மைக்காலங்களில் இலங்கையில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இவ்வாறான தோல் மாற்றங்கள் தொழுநோயினாலும் ஏற்படலாம் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவூட்டுவது அவசியமாகும்.எனினும் உங்கள் உடலின் தோலில் அவ்வாறான ஒரு திட்டு இருப்பதால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

அவ்வாறு அத் திட்டு தொழுநோய் என கண்டறியப்பட்டால் அதற்கான தேவையான சிகிச்சைகளை எவ்வித பிரச்சினையுமின்றி இலங்கையில் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் மிக முக்கியமாக நோய் கண்டறியப்பட்டவுடன் கூடிய விரைவில் அதற்கான சரியான சிகிச்சையினை முழுமையாக பெற வேண்டும்.

அவ்வாறு உங்களுக்கு அல்லது உங்களுடன் நெருக்கமானவர்களுக்கு உடலில் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகள் இருந்தால் ,அத் தோல் திட்டுகள் உள்ள இடத்தை நன்கு வெளிச்சம் உள்ள இடத்தில் தெளிவாக புகைப்படம் எடுத்து , வயது, பால் , நீங்கள் வசிக்கும் பகுதி மற்றும் அத்தோல் திட்டுடன் தொடர்புடைய ஏனைய அறிகுறிகள் (அரிப்பு,வலி ) போன்ற சுருக்கமான விபரங்களை இலங்கை தேசிய வைத்திய சாலையின் மத்திய தொழுநோய் சிகிச்சைநிலையத்தின் 0754088604 என்ற எண்ணுக்கு புலனம்(WhatsApp) மூலம் அனுப்புவதன் மூலம் தொழுநோய் தடுப்பு இயக்கத்தில் உள்ள மருத்துவரிடம் உங்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதலையும் புலனம் (WhatsApp) தொழிநுட்பத்தின் மூலம் பெறுவதற்கான சந்தர்ப்பம் இப்போது உருவாக்கப்பட்டுள்ளது .

தொழு நோயை ஏற்படுத்தும் கிருமி ஒரு வகை பாக்டீரியா ஆகும்.

சிகிச்சை அளிக்கப்படாத / முழுமையாக சிகிச்சைபெறாத பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சுவாச திரவ நீர்த்துணிக்கைகள் மூலம் இன்னொருவருக்கு இந்நோய் பரவலாம்.

இலங்கையில் வருடாந்தம் 1,500 தொழுநோயாளிகள் கண்டறியப்படுகின்றனர், அவர்களில் 40% பேர் மேல் மாகாணத்தில் காணப்படுகின்றனர். அத்துடன் அந் நோயாளர்களில்களில் 15 வீதமானவர்கள் குழந்தைகள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தோலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வெளிறிய தோல் திட்டுகள் அல்லது தோலில் ஏற்படும் சிறு கட்டிகள் அல்லது தடிப்படைந்த நரம்புகள் மற்றும் கை/கால்களில் நீண்ட காலமாக காணப்படும் வலியற்ற ஆறாத காயங்கள் ஆகியவை தொழுநோயின் முக்கிய வெளிப்புற அறிகுறிகளாகும்.

பல்வேறு அங்கவீனங்ககள் மற்றும் நரம்பு சம்பந்தமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழுநோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முழுமையாக எவ்வித பாதிப்புகளுமின்றி குணமாக்க முடியும் என்பதுடன் மற்றவர்களுக்குப் பரவும் தன்மையையும் மிகக் குறுகிய காலத்தில் தடுத்து நிறுத்த முடியும்.

இத் தகவலை மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் தொழுநோய் தொற்றிலிருந்து காப்பாற்றப்படும் அதே வேளை ஒரு குடிமகனாக இலங்கையின் தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் பங்குதாரராகலாம்.

ஒ you noticed spots on your skin?

If you noticed any spots similar to what is shown in the photo, you will often think that it is a minor eczema condition or a fungal skin condition, right?

That’s a fair call! The reason for this is that in Sri Lanka, Leprosy has been controlled to an extent that it was unusual to see these skin lesions caused by leprosy. But with the recent increase in reported cases of leprosy in Sri Lanka, it is necessary to remind ourselves that similar hypopigmented patches can also be caused by leprosy.

So, if you have such a spot or a patch on your body, and if it is diagnosed as leprosy, it is possible to get the necessary treatment in Sri Lanka without any problem. And there is nothing for you to worry as it is completely curable if detected early and referred for tre4atment.

The most important thing here is to seek proper treatment as soon as possible after the diagnosis of the disease.If you or someone close to you has suspicious symptoms, you can easily find out about it and get the advice and guidance you need through WhatsApp from a doctor attached to the anti-leprosy campaign. For that, all what you need to do is take a clear photograph of the suspicious spot or lump taken under a well-lit area, write a brief description including age, gender, the area you live in, the time the spot or spot has been present and other related symptoms (itching, burning, stinging) and send it as a WhatsApp message to 0754088604 – WhatsApp helpline of the Central Leprosy Clinic of the National Hospital.One or more light coloured spots on the skin, patches protruding from the skin, nodules or thickening of the skin, prolonged non-healing wounds on the hands/feet are the main external symptoms of leprosy. Leprosy, which can cause various deformities and neurological effects, can be completely cured if treated in the first place, and it is possible to stop the spread to others in a very short time. The pathogenic bacteria is transmitted to a healthy person through the respiratory droplets of infected people who are in the contagious stage of the disease and do not receive treatment.

About 1,500 leprosy cases are diagnosed in Sri Lanka per year, and 40% of them are found in the Western Province. And we must remember that 15% of patients are children.

Hope this information will help you to protect yourself and your loved ones from the threat of Leprosy and become a champion in this campaign to eliminate leprosy from Sri Lanka.

So, it’s time for you to do your part by taking appropriate action and sharing this information with your friends and loved ones.

தகவல் : Health Promotion Bureau

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

Svetlcov on what is the Voyager 2
M.I Hamdha on 🎨 Art By Aysha Amal