எனது நாடு

கல்வி

எனது நாடு

இலங்கை ஒரு பெருநாட்டு தீவாகும் என்று அறிவித்துக்கொள்ளப்படுகின்றது. இந்து சமுத்திரம் என்பதின் மத்தியில் அமைந்துள்ள நாற்புரமும் கடலால் சூழப்படுகின்றது. இலங்கையில் இயற்கை வளங்கள், வணக்கஸ்தலங்கள், ஏராளமான பிரசித்தி பெற்ற இடங்கள் காணப்படுகின்றன. தேயிலை, இறப்பர், தென்னை போன்ற தாவரச்செய்கைகள் மிகவும் முக்கியமாக காணப்படுகின்றன.

இலங்கையின் பல்வேறு பெயர்கள் என்பவை தம்பன்னி, செரண்டிப், தப்ரபேன், சீல துவீபம், சீலயி, செயிலான், செயிலாவோ, சிலான், சிலோன், ஈழம் ஆகியவை. இலங்கையின் மொத்த பரப்பளவு 65,610 சதுர கிலோமீட்டர் மற்றும் மொத்த நீளம் 433 கிலோமீட்டர் ஆகும். மொத்த அகலம் அந்தத் தாவலமாக 226 கிலோமீட்டர் ஆகும்.

எனது நாடு நாற்புறமும் கடலால் சூழப்பட்டு இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் அழகிய தீவாகும்

இலங்கையின் வரலாற்றை நாம் தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம் போன்ற காவியங்களில் அறியலாம். இலங்கையின் உயரமான மேட்டு நிலமாக ஹற்றனும், உயரமான குன்றாக கொக்காகல குன்றும், உயரமான அணைக்கட்டாக விக்டோரியா அணைக்கட்டும், உயரமான மலையாக பேதுருதாலகால மலையும், உயரமான நீர்வீழ்ச்சியாக பம்பரகந்த நீர்வீழ்ச்சியும் காணப்படுகின்றன.

அழகிய மலைகள், நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த காடுகள் என்பவற்றால் எனது இலங்கை நாடு மேலும் அழகு பெறுகின்றது.

இலங்கையின் தேசிய வனமான சிங்கராஜ வனத்தில் உயர்ந்த தாவரங்கள் மற்றும் அதிசய தாவரங்கள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. இலங்கையின் தேசிய மரமாக நாகமரம், தேசிய மலராக அல்லி மலரும், தேசிய விளையாட்டு கரப்பந்தாட்டமாக காட்டுக்கோழியும் விளங்குகின்றன.

எனது நாடு உயர்ந்த மலைகளிலிருந்து பாய்ந்தோடும் அருவிகளாலும் இயற்கை அழகுடைய கடற்கரைகளாலும் வனப்பு மிக்கதாக காணப்படுகின்றது

எமது நாட்டில் இயற்கை வளங்களான திருகோணமலை துறைமுகம். எழில் கொஞ்சும் இயற்கை வளங்கள் நிறைய உள்ளது

எமது நாடு  இயற்கை வளங்கள் வாய்ந்த நாடு.எங்கள் நாட்டில் ஆசியாக்கண்டத்தின் மிகவும் உயரமான கோபுரம் உள்ளது.என் நாட்டில் தேயிலை,இறப்பர் ஆகிய இரு உற்பத்திகள் நடைபெற்று வருகிறது. எமது நாட்டில் ஒர் இயற்கை துறைமுகம் உள்ளது.எனது நாட்டில் மிகவும் பழமை வாய்ந்த குகை ஓவியங்கள் உள்ளன.

More….

சமயம்

இலங்கை நாட்டில் பன்முக சமயம் காணப்படுகிறது. அதாவது இங்கு இந்து, முஸ்லிம், பௌத்தம், கிறிஸ்தவர் என பல மதத்தவர்கள் பரவி காணப்படுகின்றனர். இவர்களுள் பௌத்த மதத்தவர்களே அதிகமானோராவர்.

அரசாங்கம்

இலங்கையில் சட்டவாக்க அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உரியது ஆகும். இங்கு விகிதாசார தேர்தல் முறைகளான மக்கள் வாக்களிப்பின் மூலம் பாராளுமன்றம் தெரிவு செய்யப்படுகின்றது. நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் மக்களின் வாக்கெடுப்புகளின் மூலமே தெரிவு செய்யப்படுகின்றார்.

பாதுகாப்புத்துறை உட்பட நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் மாத்திரமே உள்ளது. பல கட்சி முறையைக் கொண்ட அரசாங்கம் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை மாத்திரமே தெரிவு செய்யப்படுகிறது.

மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா?

தேசியம்

இலங்கையின் தலைநகராக ஸ்ரீஜெயவர்த்தனபுர கோட்டையும், வர்த்தக தலைநகரமாக கொழும்பு நகரும் காணப்படுகிறது. தேசிய பறவை காட்டுக்கோழி ஆகும். தேசிய விலங்கு மர அணிலாகும். தேசிய மரம் நாகமரம் ஆகும்.

தேசிய மலர் நீலோற்பலம் ஆகும். தேசிய விளையாட்டு கரப்பந்தாட்டம் ஆகும். தேசிய வனம் சிங்கராஜா வனமாகும். மற்றும் இயற்கையாக அமையப்பெற்ற துறைமுகமாக திருகோணமலை துறைமுகம் காணப்படுகிறது.

பொருளாதாரம்

இலங்கை கடலால் சூழப்பட்டுள்ள போதிலும் அதன் மத்தியில் உயர்ந்த மலைத்தொடர்கள் இருக்கின்றன.

இங்குள்ள மலைத்தொடர்களில் பேதுருதாலகால மலையே அதி உயர்ந்த மலையாகும். இம்மலைத் தொடர்களில் இருந்து பல ஆறுகள் உற்பத்தியாகி எமது நாட்டை வளமுறச் செய்கின்றன.

எமது நாட்டில் பாய்ந்து ஓடும் நதிகளில் மகாவலி கங்கை நதியே மிகவும் நீளமான நதியாகும். மற்றும் எமது நாடு ஒரு விவசாய நாடாகும். இங்கு தேயிலை, ரப்பர், தென்னை ஆகிய பொருட்கள் பிரதானமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மிகச்சிறந்த தேயிலை வகைகளில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலையும் ஒன்றாக காணப்படுகிறது.

நமது நாட்டில் கைத்தொழில் வளர்ச்சி பெற்ற நிலையில் காணப்படுகிறது. இதனை பிரதிபலிக்கும் முகமாக சீனித்தொழிற்சாலை, சீமந்துத்தொழிற்சாலை, புடவை ஆலை, இரசாயன பொருள் தொழிற்சாலை, ஒட்டுப்பலகை தொழிற்சாலை ஆகிய கைத்தொழிற் சாலைகள் காணப்படுகின்றன. அத்துடன் இங்கு பல ஆடை கைத்தொழிற்சாலைகளும் தற்காலத்தில் பரவலாக அமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *