எழுத்தறிவித்தல் புலமைப்பரிசில் திட்டம் – EmpowerED: Breaking Barriers Scholarship Program
மனிதம் – Manitham
மனிதம் அமையமானது திருகோணமலையை அடிப்படையாகக் கொண்ட இலாப நோக்கற்ற ஒரு தொண்டு நிறுவனமாகும். எமது நிறுவனமானது 2019 மார்கழி 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதோடு தரமான கல்விக்கான வாய்ப்புக்களை அனைவருக்கும் பாரபட்சமின்றி வழங்குவதனூடாக சமூகத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல் என்பதை பிரதான நோக்காக கொண்டு செயற்பட்டு வருகிறது.
மனிதம் அமையத்தின் எம்மவர் கல்விக்கான பயணத்தின் புதிய அத்தியாயமாக க.பொ.த உயர்தரம் மற்றும் பல்கலைக்கழக கல்வியை தொடர்வதில் பொருளாதார ரீதியாக இன்னல்களை எதிர்கொள்ளும் மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கும் புலமைப்பரிசில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பப் பின்னணியுடைய, தாய் அல்லது தந்தையை இழந்த, பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் யுத்தம் மற்றும் பிற அனர்த்தங்களால் பாதிப்புற்ற மாணவர்கள் இப்புலமைப்பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
“அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்”
விண்ணப்ப படிவம் | Click Here |
WhatsApp Group | Join Group |
I’m a university student