கல்விக்கும் சமூகமயமாக்கலுக்கும் உள்ள வித்தியாசம்

கல்வி

கல்விக்கும் சமூகமயமாக்கலுக்கும் உள்ள வித்தியாசம்.


கல்விக்கும் சமூகமயமாக்கலுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால் கல்வி என்பது அறிவு மற்றும் அணுகுமுறைகளைப் பெறுவதற்கான ஒரு செயல்முறையாகும். அதேசமயம் சமூகமயமாக்கல் என்பது சமூகத்தின் விதிமுறைகள், நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் தரநிலைகள் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளும் ஒரு செயல்முறையாகும்.கல்வி என்பது அறிவு மற்றும் மதிப்புகளை, குறிப்பாக பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், கற்பித்தல், கற்றல் மற்றும் விவாதங்கள் போன்ற முறைகளைப் பயன்படுத்தி, சமூகத்தின் தரநிலைகள் மற்றும் நம்பிக்கைகளை உள்வாங்கும் செயல்முறையைக் குறிக்கிறது.


கல்வி என்பது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அறிவு மற்றும் மதிப்புகளைப் பெற்றுக் கொடுக்கும் செயல்முறையாக வரையறுக்கப்படுகிறது. கல்வி எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். ஆயினும் கூட பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற முறையான கல்வி நிறுவனங்களில் முறையான கல்வி வழங்கப்படுகிறது. முறையான கல்வி ஆசிரியர்கள் அல்லது கல்வியாளர்களின் மேற்பார்வையில் நடைபெறுகிறது. பெரும்பாலான நாடுகளில் ஒரு குறிப்பிட்ட வயது வரை முறையான கல்வி கட்டாயமாகும். ஆரம்ப முறையான கல்வியானது பாலர் பள்ளிகள் மற்றும் ஆரம்பப் பள்ளிகளால் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

பெரும்பாலான நாடுகளில், ஆரம்பக் கல்வி , இடைநிலைக் கல்வி மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி ஆகிய நிலைகளில் கல்வி வழங்கப்படுகிறது. முறைசாரா கல்வி,மறுபுறம்,வீடு, பணியிடம், சமூகம் மற்றும் சமூக தொடர்புகள் மூலம் எங்கும் நடைபெறலாம்.
சில நாடுகள் கல்வியை இலவசமாக வழங்குகின்றன, சில நாடுகள் கட்டணக் கல்வியை வழங்குகின்றன. கலாச்சார பாரம்பரியத்தை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்துவது என்று முன்பு கல்வி அறியப்பட்டாலும் தற்போது கல்வி இலக்குகள் மாறிவிட்டன. நவீன கல்வி இலக்குகளில் விமர்சன சிந்தனை, நவீன சமுதாயத்திற்கு தேவையான திறன்கள் மற்றும் தொழில் திறன்கள் ஆகியவை அடங்கும். கல்வியின் தரம் மற்றும் செயல்திறனை அதிகரிக்க கல்வி சீர்திருத்தங்கள் அவ்வப்போது புதுப்பிக்கப்படுகின்றன.


சமூகமயமாக்கல் என்பது சமூகத்தின் தரநிலைகள் மற்றும் கொள்கைகளை உள்வாங்குவதைக் குறிக்கிறது. இந்த செயல்முறை தனிநபர்கள் சமூகத்தில் நன்றாக நடந்து கொள்ள உதவுகிறது. சமூகமயமாக்கலின் இரண்டு அடிப்படை பகுதிகள் உள்ளன: முதன்மை சமூகமயமாக்கல் மற்றும் இரண்டாம் நிலை சமூகமயமாக்கல். முதன்மை சமூகமயமாக்கல் ஒரு நபரின் பிறப்பு முதல் இளமைப் பருவம் வரை நிகழ்கிறது அதே சமயம் இரண்டாம் நிலை சமூகமயமாக்கல் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் நிகழ்கிறது.


மக்கள் தங்கள் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும், சமூகத்தில் வாழவும் சமூக அனுபவம் தேவை. சமூகமயமாக்கல் நிகழும்போது, ஒரு நபர் ஒரு குழு, சமூகம் அல்லது சமூகத்தில் எவ்வாறு உறுப்பினராக வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்கிறார். பொதுவாக, சமூகமயமாக்கல் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் பல இலக்குகளைக் கொண்டுள்ளது.


எடுத்துக்காட்டாக,
குழந்தைகள் தங்கள் வீட்டில் இருப்பது போல் முறைசாரா முறையில் நடந்து கொள்வதற்குப் பதிலாக வகுப்பறை அமைப்பைப் போல முறையான சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இது குழந்தைகளுக்குக் கற்பிக்கிறது. அனைத்து வயதினருக்கும் சமூகமயமாக்கலின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக பள்ளிகளை அடையாளம் காணலாம். எனவே, பள்ளிகளில், மாணவர்கள் பள்ளி மற்றும் சமூகத்திற்கு ஏற்ற நடத்தை விதிமுறைகளைக் கற்றுக்கொள்கிறார்கள்.
கல்விக்கும் சமூகமயமாக்கலுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், கல்வி என்பது அறிவு மற்றும் அணுகுமுறைகளைப் பெறுவதற்கான ஒரு செயல்முறையாகும். அதேசமயம் சமூகமயமாக்கல் என்பது சமூகத்தின் விதிமுறைகள், நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் தரநிலைகள் ஆகியவற்றைக் கற்றுக் கொள்ளும் ஒரு செயல்முறையாகும். மேலும் கல்வி கற்றலுக்கு பொறுப்பான சமூக நிறுவனத்தில் கவனம் செலுத்துகிறது.

ஆனால் சமூகமயமாக்கல் கலாச்சாரம் தன்னை எவ்வாறு அடைகிறது என்பதில் கவனம் செலுத்துகிறது.மேலும் கல்விக்கும் சமூகமயமாக்கலுக்கும் உள்ள மற்றொரு வேறுபாடு என்னவென்றால் கல்வியில் ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி போன்ற நிலைகள் உள்ளன. அதேசமயம் சமூகமயமாக்கல் முதன்மை சமூகமயமாக்கல் மற்றும் இரண்டாம் நிலை சமூகமயமாக்கல் என இரண்டு அடிப்படை பகுதிகளைக் கொண்டுள்ளது. கல்வியின் முறைகள் கற்பித்தல், கற்றல், கலந்துரையாடல் மற்றும் குழு தொடர்புகளை உள்ளடக்கியது. சமூகமயமாக்கல் முறைகள் வெளிப்பாடு, மாடலிங், அடையாளம், நேர்மறை வலுவூட்டல் மற்றும் எதிர்மறை வலுவூட்டல் ஆகும்.


கல்விக்கும் சமூகமயமாக்கலுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், கல்வி என்பது அறிவு மற்றும் மதிப்புகளை, குறிப்பாக பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், கற்பித்தல், கற்றல் மற்றும் விவாதங்கள் போன்ற முறைகளைப் பயன்படுத்தி, சமூகத்தின் தரநிலைகள் மற்றும் நம்பிக்கைகளை உள்வாங்கும் செயல்முறையைக் குறிக்கிறது.

By
யோகேந்திரன் சுயானி
4ம் வருடம் சிறப்பு கற்கை 2017/2018,
கல்வி பிள்ளை நலத்துறை,
கிழக்கு பல்கலைக்கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *