கல்வியில் தற்போதைய சவால்கள் – CURRENT ISSUES IN EDUCATION

கல்வி

கல்வியில் தற்போதைய சவால்கள் (Current issues in education)
சமகாலத்தில் கல்விச் செயன்முறை பல்வேறு மாற்றங்களுக்கு உற்பட்டு வருகின்றன. இதனை விளக்கவும் பல்வேறு புதிய கோட்பாடுகள் உருவாகின்றன. இருப்பினும் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையிலே கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் சமூக நீதியாகும்.கல்விப் புலத்தில் மகிழ்த்தெழும் எழுவினாக்கள் இடர்களையும் தடைகளையும் சவால்களையும் கடக்க வேண்டிய இடைவெளிகளையும் கருத்தாடற் குவிப்புக்கு உள்ளாக்கிய வண்ணமுள்ளன இலங்கையில் கல்வி முறை பல்வேறு புதிய பிரச்சினைப்பாடுகளை எழுப்புகின்றன.

இவை குறித்தான பார்வையினை விடயங்களை கீழ் நோக்கலாம்.கல்வி இடைவிலகல் 1989ஆம் ஆண்டின் யுனெஸ்கோ ஆய்வின் படி ஆசிய நாடுகளில் 54 மில்லியன் பிள்ளைகள் கல்வியை இடையில் விடுவோர் என கண்டறியப்பட்டுள்ளது.இப்பிரச்சினைகளுடன் மாணவர்கள் ஒரே வகுப்பில் திரும்பத் திரும்ப கற்கும் பிரச்சினைகளும் உண்டு. இவை யாவும் கல்வி மூலவளங்கள் விரயமாக்கப்படுவதையும்வகுப்பின் தின வரவு இடாப்பிலிருந்து ஒரு மாணவன் பாடசாலைக்கு சமூகந்தராமையைக் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக குறிப்பிட்ட ஒரு வகுப்பின் மாணவன் கல்வியை இடை நிறுத்தி விட்டாரா என்பதை தீர்மானிப்பது சிரமமாகும்.

இலங்கையில் இடைவிலகலைத் தீர்மானிப்பதற்கு சில சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஒரு மாணவன் மூன்று மாதங்களுக்கு சமுகந்தராவிட்டால் அம் மாணவனின் பெயர் அவ் வகுப்பின் தினவரவு இடாப்பிலிருந்து நீக்கப்பட வேண்டுமென அச்சட்டம் கூறுகின்றது.மாணவர் இடைவிலகலில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் ஒரு மாணவன் தனது பாடசாலைக் காலத்தை பூரணப்படுத்தாமல் இடையில் விட்டுச் செல்வதற்கு அல்லது தொடர்ச்சியாக பாடசாலைக்கு சமூகந்தராமைக்கு பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன அவை.பாலியல் பிரச்சினைகளுக்கு உள்ளாதல்,இளமையில் திருமணம்,பொருளாதார வசதியின்மையும் வறுமையும்,பருவகாலத் தொழில் உற்பத்தி போன்ற செயற்பாடுகளினால் ஒரு மாணவன் தன்னுடைய கல்வி தொடர்பான இடை விலகலை மேற்கொள்கிறான். இவற்றின் நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகளாக தலைமைத்துவ பொறுப்புக்களை ஒப்படைத்தல்,சுகாதார, போசாக்குத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்,உளவியல் ரீதியான தீர்வு நடவடிக்கைகள்,பொருளாதார ரீதியான தீர்வு நடவடிக்கைகள் போன்ற செயற்படுகளை மாணவர்களையும் பெற்றோர்களையும் மையப்படுத்தியதாக செய்யப்படுமாக காணப்பட்டால் மாணவர்களின் இடை விலகலை குறைக்க முடியும் என்பது என்னுடைய தீர்வு.

சமகல்வி சம வாய்ப்பை பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகள்.ஜனநாயக அமைப்பில் ஒவ்வொரு குழந்தையும் முழுமையான ஆளுமை வளர்ச்சி பெற்றிடல் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. எனவே ஒவ்வொருவரும் முழுமையான வளர்ச்சி பெற்றிட கல்வியில் சம வாய்ப்பு அளிக்கப்படும். சமவாய்ப்பு என்பது ஒரே அளவிலான வாய்ப்பு என்று கருதாமல் அவரவர் திறமை மற்றும் ஆற்றலுக்கு ஏற்றப்படி, சம அளவில் வளர்ச்சி பெற்றிட உதவும் வகையில் உரிய வாய்ப்புகளை அரித்திடுவது என்பதாகும். அதாவது ஒடுக்கப்பட்டவர்கள் உடல் ஊனமுற்றவர்கள், சமூகத்தில் நலிந்த பிரிவினர், கல்வியில் பின் தங்கியவர்கள் போன்றோருக்கு கூடுதல் சலுகைகள் அளித்து அவர்களும் மற்றவர்களைப் போல முன்னேற வாய்ப்பளித்தல் என்பதேயாகும். இவற்றை மையப்படுத்திய தானே கல்வியின் சவால்களாக விளங்குவது.பொருத்தமானதமான ஆசிரியர் வளமின்மை,முறையற்ற வளப்பங்கீடு,தொழில்நுட்ப விருத்தி இன்மை,பொருத்தமற்ற கல்வி,தளபாட வசதியின்மை இவ்வாறு கல்வியில் சம வாய்ப்பு அளிக்கப்படாத காரணத்தினால் மாணவர்கள் தற்போது கல்வி ரீதியான பாரிய அளவான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய தேவை காணப்படுகிறது இவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய செயற்பாடுகளாக.சமூக சமவாய்ப்பின்மையை நீக்க உதவும் கல்வி,இலவசக்கல்வி,குழந்தை மையக் கல்வி (Chilid CentredEducation) ,அனைவருக்கும் கட்டாயக் கல்வியளித்தல் போன்ற செயற்பாடு திட்டங்களை ஏற்படுத்துவதனால் கல்வியில் சம வாய்ப்பு ஏற்படுத்தி முறையான கல்வியினை வழங்க முடியும். இதனால் கல்வியின் சமகால பிரச்சனையானது தீர்வினை அடையும்.

ஆரம்ப முன்பள்ளி கல்வியினை பெறுவதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் முன்பள்ளி பாடசாலைகளின் வளப்பற்றாக்குறை கேள்விக்குறியாக்கியுள்ளமை. ஒரு குழந்தையின் கல்வி என்பது ஆரம்பப்பருவத்தை அடிப்படையாகக் கொண்டே தோற்றம் பெறுகிறது. ஆரம்பப் பருவத்தை கொடுக்கப்படுகின்ற தன்மையே எதிர்கால வாழ்க்கை தீர்மானிக்கும் செயற்பாக அமையும் கல்வியில் குறிப்பாக முன்கல்வியை பெறுவது தொடர்பாக பல்வேறுப்பட்ட பிரச்சனைகள் காணப்படுகிறது சமகாலத்தில் அவ்வாறான பிரச்சனைகளாக.வளப்பற்றாக்குறை,தகைமையற்ற முன்பள்ளி ஆசிரியர்கள்,முன்பள்ளிகளுக்கான பொதுக்கலைத்திட்டம் காணப்படாமை,முன்பள்ளியின் முறையற்ற நிர்வாகம். போன்ற பிரச்சினைகள் ஆனது தற்கால முன் பள்ளியில் காணப்படும் பிரச்சினையாக காணப்படுகிறது இவற்றினை நிவர்த்தி செய்வதற்கான எம்மிடம் உள்ள கருத்துக்களாக.முள்பள்னிக் கல்விக்கான நியாயமான வாய்ப்பை உறுதிப்படுத்துதல்,இலங்கையிலுள்ள சிறுவர்கள் அனைவருக்கும் உயர் தரமான முன்பள்ளிக் கல்விக்கான வாய்ப்புகள் இருப்பதனை உறுதிப்படுத்துவதற்கு முன்பள்ளி கல்வி சட்டம்த்த. அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல்,முன்பள்ளி வயதுகளில் பிள்ளைகளின் கற்றல் மற்றும் விருத்தியில் சகல குடும்பங்களும் சமுதாயங்களும் முன்னாரம்பக்கல்வியில் செயலூக்கமுள்ள பங்கேற்பவர்களாகவும் ஒத்துழைப்பவர்களாக இருப்பதோடு முன்ளாரம்பக் கல்வி நிகழ்ச்சி திட்டங்கள் மற்றும் குடும்ப நடைமுறைகளைப் பலப்படுத்த ஒன்றாகப் பணியாற்றுதல் வேண்டும் போன்ற தீர்வு செயற்பாடுகளை முன் பள்ளியை மையப்படுத்தி தாக செய்யப்படும்போது முன் பள்ளியில் காணப்படும் கல்வி சமகால ரீதியான சவால்கள் தீர்வினை மையப்படுத்தியதாக காணப்படும் அத்தோடு முறையான கல்வியும் முன்பள்ளியில் வழங்கப்படும்.

பல்கலைக்கழகங்களின் தரமேம்பாட்டு பிரச்சினைகள். ஒரு பிள்ளைக்கு உயர்கல்வினை வழங்கும் நிறுவனங்களின் முதன்மையானதாக காணப்படுவது பல்கலைக்கழகம் ஆகும். இப் பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி சமகாலத்தில் கல்வியில் பல்வேறுப்பட்ட சவால்கள் ஏற்பட்டுள்ளன அவ்வாறான சவால்களால் முறையான கல்வியினை பெற முடியாத நிலையானது மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளனர் அத்தகைய சவால்களாக.தகுதியுடைய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நியமனத்தில் பிரச்சனைகள் காணப்படுகிறது,வன்செயலும் விரயமும்,பல்கலைக்கழகக் கல்வியின் தராதரமும் பொருத்தப்பாடும் தொடபான பிரச்சனைகள்,கற்கை நெறிகள்,தொழிற் துறைசார் பாடங்களுக்கு முன்னுரிமை இன்மையால் வேலைப் பிரச்சினைகள் பல்கலைக்கழக தரத்தை குறைத்துள்ளமை. இவ்வாறான பிரச்சினைகளானது சமகால பல்கலைக்கழக கல்வியில் காணப்படுவதாக காணப்படுகிறது. முறையான கல்வினை முறையாக கற்ற ஆசிரியரிடம் கற்றாள் கல்வியானது மாணவனுக்கு எக்காலத்திலும் உதவக்கூடிய வண்ணம் காணப்படும். அந்த வகையில் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு நடவடிக்கை எடுத்து நோக்கும்போது.தொழில் கல்வி வாய்ப்பை விரிவுபடுத்தல்,பல்கலைக்கழகங்கள் தமக்குள்ளும் ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுடனும் தொடர்புகளை விரிவுபடுத்தல்,பல்கலைக்கழக கல்வி உறுதிப்பாட்டினை மேம்படுத்தல்,திறமையான மாணவர்களினை உள்வாங்கல் போன்ற பிரிவினை மேற்கொள்ளும் போது பல்கலைக்கழகத்தில் சமகால கல்வியில் பிரச்சனைகள் ஆனது திர்வினை மையப்படுத்தியதாக செயல்படும் அதேவேளை மாணவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்குவதற்கு ஏற்புடையதாகவும் இவை அமையும்.

இவ்வாறாக சமகால உலகிலும் சமகால இலங்கையிலும் கல்வியை மையப்படுத்திய சவால்களாக காணப்படுகிறது. இவ்வாறான சவால்கள் காரணமாக முறையான கல்வியினை மாணவர் பெற முடியாத நிலையினால் அவர்களுடைய எதிர்காலமானது ஒரு முறையற்ற நிலைக்கு செல்லுவதற்கு காரணமாக அமைகிறது. ஆகவே மேற்கு குறிப்பிடப்பட்ட விடயங்களில் சவால்களும் அதற்கான தீர்வு திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறாக இலங்கையின் கல்வி சீர்திருத்தமான அமையப்பெற்றால் உலக தரத்தில் இலங்கையின் கல்வி தரமானது முதன்மை அடையும் என்பது எவ்வித ஜயமும் இல்லை.

யோகராஜ் சனோஜன்
2ம் வருட சிறப்பு கற்கை மாணவன்
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்

2 thoughts on “கல்வியில் தற்போதைய சவால்கள் – CURRENT ISSUES IN EDUCATION

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *