சமூகமயமாக்கலில் பிள்ளைக்கான வெகுமதியும் தண்டனையும் சமூகமயமாக்கலில் பிள்ளைக்கான வெகுமதியும், தண்டனையும்
- “எல்லா சோற்றையும் சாப்பிட்டால் சொக்லேட் ஒன்று தருவேன்7
- “புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் சைக்கிள் வாங்கித் தருவேன்”, “லெப்டொப் ஒன்று வாங்கித்தருவேன், “கேம் (Game) விளையாட ஸ்மார்ட் போன் (Smart Phone) ஒன்று கிடைக்கும்”
- “வகுப்பில் முதலாம் பிள்ளையாக வந்தால், அப்பா எனக்கு ஒரு சோடி காப்பு வாங்கித்தருவதாகச் சொன்னார்.”
- “பேச்சுப்போட்டியில் முதலாவதாக வந்தால், அம்மா எனக்கு ரிமோட் கார் (Remote Car) வாங்கித்தருவதாகச் சொன்னார்.’
- “நடனப்போட்டியில் முதலாவதாக வந்தால், அம்மா ஒரு மேக்கப் செட் (Make up set) வாங்கித்தருவார்.”
- “கணிதப் பாடத்தில் அதிகூடிய புள்ளிகள் எடுத்தால், அப்பா என்னை சுற்றுலா அழைத்துச்செல்வார்.”
பிள்ளைகளைக் கொண்டு சில விடயங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக பெற்றோர்கள் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது சரியா? பிழையா? பெற்றோர்களின் இவ்வாறான செயற்பாடுகளால் பிள்ளைகளின் எதிர் காலத்திற்கு என்ன நடக்கும்? இவ்வாறான பரிசில்கள் வழங்குவதன் மூலம், அவர்களுக்கு வேண்டிய விடயங்களை பிள்ளைகளைக்கொண்டு செய்விப்பது, அவற்றால் ஏற்படும் பாதிப்புக்கள் அறியாமல் செய்யும் செயல்களாகும். இவ்வாறான பழக்கங்களுக்கு அடிமையான பிள்ளைகளின் முழு எதிர்காலமும் பாதிக்கப்பட்ட பல உதாரணங்கள் உள்ளன. பரிசில்கள் கிடைக்காத எந்தவொரு செயலையும் செய்வதற்கு சில மாணவர்கள் முன்வருவதில்லை. பெற்றோர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாமல் போன சில பிள்ளைகள் இறுதியில் பரிசில்களும் கிடைக்காமல் இக்கட்டான நிலையை அடைகின்றனர். உதாரணமாக, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தால் பரிசில்களை வாங்கித்தருவதாகக் கூறி ஆசை காட்டும் பெற்றோர் மத்தியில், சித்தியடையாமல் போகும் பிள்ளைகளின் நிலை என்ன? பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைக்கும்
பெற்றோரின் செயல்களால், உளத்தாக்கங்களுக்கு ஆளாகி, தற்கொலைகளில் முடிவடைகின்றன,மற்றும் சில பிள்ளைகள் மனநோய்க்கு ஆளாகின்றனர்.
பிள்ளைகளுக்கு “பரிசில்களே வழங்கக் கூடாது” என்பது இதன் பொருள் அல்ல. பிள்ளைகளின் வெற்றிகளைப் பெறும் போது எமது இலக்கை அடைய வைப்பதற்காக இடையிடையே பரிசில்கள் வழங்குவது தப்பில்லை. எனினும் தொடர்ந்து எல்லாவற்றிற்கும் பரிசில்கள் வழங்குவது அவ்வளவு பொருத்தமான விடயமும் அல்ல. சில வேளை படிப்படியாக பிரிசில்களை அதிகரிக்க வேண்டி ஏற்படலாம். கடைசியில் இளைஞரானவுடன் அவர் கேட்கின்ற எல்லாவற்றையும் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படும். பிள்ளையால் அடைய முடியாத இலக்குகளுக்காக பரிசில்கள் வழங்குவேன் எனக் கூறுவது தவறு. இது பொருத்தமற்ற செயலாகும். இறுதியில் அது பிள்ளையின் எதிர்காலத்தைப் பாதிப்பதாக அமையும்.
படிக்கின்ற பிள்ளைகளுக்கு பொருட்களை பரிசாக வழங்குவதற்குப் பதிலாக வாழ்த்துதல், ஊக்குவித்தல், அன்பு காட்டுதல் போன்றவை பெறுமதிமிக்க பரிசில்களாகும். இவற்றின் மூலம் நல்ல பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம். நல்ல வேலைகளைச் செய்யும் போது பரிசில் வழங்குவதைவிட அதனைப் பாராட்டுதல். வாழ்த்துதல் போன்றவை மேலும் நல்ல வேலைகளைச் செய்ய ஊக்குவிக்கும். எனினும் இங்கு ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய ஒரு முக்கிய விடயம் உண்டு. மற்றப்பிள்ளைகளுடன் ஒப்பிட்டு, மற்றவர்களுக்கு மனத்தாக்கம் ஏற்படக்கூடியவகையில், பாராட்டுதலோ, பரிசில்கள் வழங்குவதோ கூடாது. அவ்வாறான செயல்கள் மற்றப் பிள்ளைகளிடம் இருக்கும் ஆற்றலை மழுங்கடிக்கச் செய்யும். பிள்ளைப்பருவத்திலே சகல பிள்ளைகளும் பாராட்டுக்களை, வாழ்த்துக்களை, அன்பை, எதிர்பார்ப்பார்கள். அவரவர் திறமைக்கேற்ப அவர்கள் நல்ல செயல்களை செய்யும்போது பாராட்டுக்கள் வழங்கப்பட வேண்டும்.
பரிசில்களைப் போன்றே அடிக்கடி தண்டனை வழங்கக்கூடாது. மிகச் சிறிய வயதிலே உடல் ரீதியான தண்டனைகள் வழங்குவது பொருத்தமானதல்ல. பல பெற்றோர்கள் பிள்ளைகளது தவறுகளைத் தடுப்பதற்காக பிள்ளைகளால் தாங்க முடியாதளவு தண்டனைகளை வழங்குவர். குறிப்பாக அதிகாரக் குழந்தை வளர்ப்பைக் கடைப்பிடிக்கும் பெற்றோர்கள் இவ்வாறு நடந்துகொள்வார்கள். சிறிய குற்றத்திற்கும் பாரிய தண்டனைகளை வழங்கிவிடுவார்கள்.
இதனால் குழந்தைகள் எதிர்ப்பைக் காட்டுபவர்களாக மாறிவிடுவதுடன், குழப்படி, கட்டுக்கடங்காமல் போதல் என்ற நிலைக்குள்ளாகுவர்.மேலும், சினம், ஆக்ரோஷம், ஒதுங்கி வாழுதல் போன்ற விளைவுகள் ஏற்படும். இவ்வயதுப் பிள்ளைகள் பிழைகள் செய்வது தெரிந்து கொண்டால், சில பிள்ளைகள் தமது அம்மா, அப்பா, தம்பி, தங்கை போன்றவர்களைக் கூட அடிப்பார்கள். விளையாட்டுப் பொருட்களை உடைப்பார்கள். பால் போத்தலை வீசி எறிவார்கள். செய்ய வேண்டாம். எனக் கூறும் விடயங்களையே செய்வார்கள். எந்தவொரு விடயங்களையும் அவர்கள் வேண்டும் என்று செய்வதில்லை. வளர்ச்சியுடன் இவை படிப்படியாக குறைவடையும்.
உடல் ரீதியான தண்டனைகள் மட்டுமல்ல,
- சோறு சாப்பிடாமல் விட்டால் இருட்டறையில் வைத்துப் பூட்டுவேன்.
- முற்றத்திற்கு இறங்கினால் காலை சுடுவேன்.
- மண்ணில் விளையாடினால் கையை வெட்டுவேன்.
- தங்கச்சிக்கு அடித்தால் பிரம்படி கிடைக்கும்.
இது போன்றவையும் தண்டனைதான்.
பிள்ளைகள் செயற்பாடுடையவர்கள். அவர்களுக்கு சுதத்திரம் தேவை. அவர்களின் தேவைகளை
வளர்ந்தவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களின் மூளை ஒன்றும் பதியப்படாத இறுவட்டு (டிஸ்க்)
போன்றது. அவற்றில் பதிவதற்கு விடயங்கள் தேவை. அவற்றை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பிள்ளைகளை அவர்களுடைய உலகத்தில் வாழவிடாமல் தண்டனை வழங்கி கட்டுப்படுத்தி வைப்பது அசாதாரணமானது. பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவார்களானால், தண்டனை தேவைப்படாது. அறிந்து அவற்றை பெற்றோர்கள்
ஒரு பிள்ளையின் வளர்ப்பு விடயத்தில், அப்பிள்ளையின் வளர்ச்சி மற்றும் விருத்தி தொடர்பாக முழுமையான அறிவைப் பெற்றிருப்பது பெற்றோரின் தலையாயக் கடமையாகும். வளர்ச்சி என்பது, ஒரு குழந்தையின் பௌதீக ரீதியான உடல் நிறை, நிறைக்கேற்ற உயரம், தலையின் சுற்றளவு என்பன தொடர்பிலும், உளவியல் ரீதியில்
அவர்கள் கற்றுக்கொள்கின்ற திறன்கள், உணர்ச்சிகளைக் கையாளும் திறமைகள், தேர்ச்சிகள் மூலம் பெற்றுக்கொண்ட விடயங்கள் போன்றவற்றின் ஊடாகக் கணிக்கப்படுகின்றது. விருத்தி எனும்போது. ஒரு குழந்தை தனது வயது நிலைக்கேற்ப வெளிப்படுத்துகின்ற நடத்தைகள் மற்றும் மனவெழுச்சி வெளிப்பாடுகள் போன்றனவற்றைக் குறிக்கும். இது சீரானதாக அமைதல் வேண்டும்.
அடுத்து. குழந்தையின் வளர்ப்பில் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் விளக்கம் பெறவேண்டிய மிக முக்கியமான அம்சம்தான், ஒரு குழந்தையின் வளர்ச்சிப் பருவங்கள் பற்றி அறிந்து கொள்வதுடன், அதில் இடம்பெறும் விருத்திகள் தொடர்பாகவும் விளங்கிக் கொள்ளல் வேண்டும்.
அவ்வாறில்லாவிட்டால், முறையற்ற நடவடிக்கைகளை குழந்தை வளர்ப்பில் அறியாமல் கடைப்பிடித்து, பிறழ்வான, சமூகத்திற்கு உதவாத, ஆரோக்கியமற்ற குழந்தைகளை விளைவாகப் பெறவேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்படுவதனை தவிர்க்க முடியாது போய்விடும். அந்தவகையில், ஒரு பிள்ளையின் பிறப்பிலிருந்து கட்டிளமைப்பருவம் வரை வித்தியாசங்களையும் அறிந்து கொள்வதானது, அப்பிள்ளையை உந்துதலளிக்கின்றது. இடம்பெறும் மாற்றங்களையும் முறையாக வளர்ப்பதற்கு
இன்பம் அனுபவிப்பதே குழந்தைகளின் குறிக்கோள் என்றும். இதற்குத் தடை ஏற்படும் போது எழுகின்ற ஊக்கல், ஒடுக்கப்பட்டுப் பிறழ்வான நடத்தைகளிலும், ஆளுமைச் சீர்கேடுகளிலும் முடிவடைகின்றன என பிராய்யிட் கூறுகின்றார். பிள்ளையின் பாலியல் ஆசைகளே பெரும்பாலும் நனவிலி உள்ளத்துள் ஒடுக்கப்டுகின்றன.
பிள்ளையின் பாலியல் தொடர்பான வளர்ச்சியில் சிக்மன்ட் பிராய்யிட் பின்வரும் நிலைகள் பற்றிக்கூறுகின்றார். அவை, வாய் நிலை 0 – 1 வயது, குதநிலை 1 – 3வயது, பாலுறுப்பு நிலை 3 5
வயது, மறைநிலை 5 -12 வயது என்பனவாகும்.
வாய் நிலைப்பருவமானது, இப்பருவம் பிறப்பு முதல் ஒருவயது வரையாகும்.
(0-1) இப்பருவத்தில் வாய், குழந்தை வெளி உலகுடன் தொடர்ப்புகொள்ளும்
முக்கிய உறுப்பாகவும் உள்ளது. வாயினால் பிள்ளை பெறும் உணர்ச்சிகளுள்
பாலியல் இன்பம் முக்கியமானது. முலைப்பாலூட்டப்படும் பொழுது வாய்
மூலமும், தாய்முலை மூலமும் பிள்ளை இன்பத்தைப் பெறுகிறது. இவ்வின்பம் மறுக்கப்படுமிடத்து எதிர்காலத்தில், விரல் சூப்புதல், புகைத்தல் போன்ற பிறழ்வான நடத்தைகளில் ஈடுபடுகிறது.
குதநிலைப் பருவம் ஒரு வயது முதல் மூன்று வயதுவரையாகும். (1-3) பிள்ளையின் வாழ்வில் மலசலங் கழித்தல் முக்கியமானது. அது பிள்ளைக்கு காமக் கிளர்ச்சிக்குரிய இன்பத்தினைத் தருகின்றது. பிள்ளை விரும்பிய நேரத்தில், விரும்பிய இடத்தில் மலசலங் கழிக்கும் போதும், அதை அளையும் போதும், இன்பம் அடைகின்றது. இதற்காகப் பிள்ளையைப் பயமுறுத்தவோ, தண்டிக்கவோ கூடாது.
பாலுறுப்பு நிலைப் பருவம், மூன்று முதல் ஐந்து வயது வரையாகும். (3-5) இப் பருவத்தில் பிள்ளை பாலுறுப்புகளைக் கையாளுவதன் மூலமும், ஆடையின்றி விளையாடுவதன் மூலமும் காமக்கிளர்ச்சி அடைந்து இன்பம் பெறுகின்றது. இதற்காக அடிக்கவோ, திட்டவோ கூடாது. அவ்வாறு இவ்வின்பம் மறுக்கப்படுமிடத்து எதிர்காலத்தில் பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றது.
மறைநிலைப் பருவம் ஐந்து முதல் பன்னிரெண்டு வயது வரை (5- 12) இப் பருவத்தில் பிள்ளை பாலியல் தொடர்பான நாட்டங்கள் அற்றதாக இருக்கின்றது.
ஆகவே, விருத்தியைப் பொறுத்தவரையில் ஒரு பிள்ளை, மேலே குறிப்பிட்ட உள-பாலியல் கட்டங்களைக் கடந்து செல்ல நேரிடுவதால், இக்கட்டங்களிலே தண்டனைகளால் கட்டடுப்படுத்தாது. சுதந்திரமாக வளர விடுவது இப்பிள்ளையின் எதிர்காலத்திற்கு நன்மையளிக்கிறது என்றால் அது மறுப்பதற்கில்லை.
இளம் வயதில் சில பிள்ளைகள் பொய் சொல்வார்கள். களவெடுப்பார்கள். புகைப்பிடிப்பார்கள். இவற்றை நிறுத்துவதற்கு பெற்றோர்கள் தண்டனை வழங்குவர். இவ்வாறான நிலைமைக்கு பிள்ளை தள்ளப்படுவதற்கு முன் அவற்றைத் தடுக்கமுடியுமாயின் மிகவும் நல்லது. இவ்வாறான விடயங்களைத் தடுப்பதற்கு பெற்றோரின் முன்மாதிரி மிகவும் அவசியம். பெற்றோர்களின் மனப்பாங்கு பிள்ளைகளிடத்திலே பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
வளர்ப்பு செயல்பாட்டில் தண்டனை என்பது மிக முக்கியமான கூறு அல்ல, இதன் பொருள்
குழந்தைகளில் அவர்களின் நடத்தையின் தவறான தன்மை, குற்ற உணர்வு. அவமானம் மற்றும்
வருத்தம் பற்றிய புரிதலைத் தூண்டுவதாகும். கல்வியின் அளவை சரியாகப்
பயன்படுத்தினால் மட்டுமே இந்த இலக்கு அடையப்படுகிறது. எனவே, ஒரு கல்வி
நிறுவனத்தில் ஒரு குழந்தையின் தண்டனையைப் பயன்படுத்துவதற்கு முன்,
கல்வியாளர் கண்டிப்பாக நிலைமையை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள்.
குழந்தை ஏன் அதைச் செய்தது (யாராவது அவரை வற்புறுத்தியிருக்கலாம்
அல்லது கட்டாயப்படுத்தியிருக்கலாம்). அவர் என்ன நோக்கங்களால்
வழிநடத்தப்பட்டார் (தன்னைத் தற்காத்துக் கொண்டார்) போன்றவை. இந்தக்
கேள்விகளுக்கான பதில்களைப் பொறுத்து, குற்றத்திற்கான பயனுள்ள மற்றும்
பொருத்தமான தண்டனையைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
பிள்ளைகள் செய்கின்ற சில பொருத்தமற்ற செயற்பாடுகளைப் பாராட்டாமல் விடுவது, கணக்கெடுக்காமல் விடுவது அவ்வாறே எமது விருப்பமின்மையை எமது நடத்தையின் மூலம் வெளிக்காட்டுவது போன்ற செயற்பாடுகளின் மூலம் அவற்றை ஊக்குவிக்காமல் இருக்கலாம். இவ்வாறான விடயங்கள் கூட எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியான முறையிலே மேற்கொள்ளக் கூடாது. பிள்ளைகளின் தன்மைக்கேற்ப பிரயோகிக்கப்பட வேண்டும்.
எனவே, பிள்ளை வளர்ப்பானது பெற்றோர்களால் மேற்போன்ற தவறான அணுகுமுறைகள் களையப்பட்டு, முறையாகக் கைக்கொள்ளப்படும் போதுதான் அது சமூகத்தில் சிறந்த பிரஜையாக உருவாகி அதன் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்வதுடன், சமூகத்தில் ஆரோக்கியமான பரம்பரை ஒன்றினைக் கட்டியெழுப்புவதற்கான தொடர்ந்தேர்ச்சியான செயன்முறையில் அதுவும் ஒரு பங்காளியாக தான் தனது வளர்ப்பில் பெற்றோர் மூலமாகப் பெற்ற அறிவையும், அனுபவத்தையும் பயன்படுத்தும். இதனைத் தெளிவாக உணர்ந்து பெற்றோர்கள் தனது பிள்ளைக்கு காத்திரமான வழிகாட்டல்கள் மற்றும் அணுகுமுறைகள் மூலமாக வளர்ப்பதற்கான நடவடிக்கையில் கரிசனை செலுத்துதல் வேண்டும்.
தாய் மற்றும் தந்தை! உங்கள் குழந்தையின் கதைகளில் மிகுந்த கவனத்துடன் இருங்கள், அவருடைய உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் உங்களுக்கு தெரிவிக்க அவர் எடுக்கும் முயற்சிகளை புறக்கணிக்காதீர்கள்! தண்டனைகள் கற்பனையாக கூட மாறட்டும். ஆனால் உணர்ச்சி அனுபவங்கள் உண்மையானவை! குழந்தையுடன் பேசுங்கள், சிக்கல்களின் சிக்கலை பின்னர் அவிழ்ப்பதை விட மொட்டில் உள்ள சிக்கலை அடையாளம் காண்பது நல்லது. பிள்ளைகளுக்கு தண்டனை வழங்குவதை விட, பிழைகளை விளக்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். எனவே தண்டனையும் வெகுமதியும் பொருத்தமானவாறு பிரயோகிக்கப்படுதல் பிள்ளையின் சமூகமயமாக்கலுக்கு முக்கியமான அம்சமாகும்.
இந்துஷா சிவராசா கல்வி, பிள்ளை நலத்துறை, கிழக்குப்பல்கலைக்கழகம்.
பிள்ளை விருத்தி பருவங்கள்
குழந்தை வளர்ச்சியானது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும், இது பல்வேறு கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டமும் அதன் தனித்துவமான குணாதிசயங்களையும், வளர்ச்சிக்கான முக்கிய மைல்கற்களையும் கொண்டுள்ளது.
பொதுவாக, குழந்தை வளர்ச்சியின் முக்கிய பருவங்கள் பின்வருமாறு:
1. புதிதாக பிறந்த குழந்தை (பிறப்பு முதல் 2 மாதங்கள்):
- இந்த கட்டத்தில், குழந்தை அடிப்படை உயிர்வாழ்வு திறன்களை வளர்த்துக் கொள்கிறது, அதாவது உணவு, தூக்கம் மற்றும் வெப்பநிலை கட்டுப்பாடு.
- அவர்கள் தங்கள் கண்களை இணைக்கவும், முகங்களை அடையாளம் காணவும், ஒலிகளுக்கு பதிலளிக்கவும் தொடங்குகிறார்கள்.
- தசை வளர்ச்சியும் ஒருங்கிணைப்பும் மேம்படுகிறது, இது அவர்களை தங்கள் தலையைத் திருப்பவும், கைகளை அசைக்கவும், கால்களை உதைக்கவும் அனுமதிக்கிறது.
2. குழந்தை (2 மாதங்கள் முதல் 12 மாதங்கள்):
- இந்த கட்டத்தில், குழந்தைகள் தங்கள் சுற்றுப்புறங்களை ஆராயத் தொடங்குகிறார்கள்.
- அவர்கள் பொருட்களைப் பிடித்து, உருட்டவும், தங்கள் வாயில் வைக்கவும் தொடங்குகிறார்கள்.
- அவர்கள் முதல் வார்த்தைகளை பேசவும், எளிமையான அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் தொடங்குகிறார்கள்.
- நடக்க கற்றுக்கொள்கிறார்கள்.
3. குறுநடை போடும் குழந்தை (12 மாதங்கள் முதல் 3 வயது வரை):
- இந்த கட்டத்தில், குழந்தைகள் சுதந்திரமாக மாறுகிறார்கள்.
- அவர்கள் நடக்கவும், ஓடவும், ஏறவும், ஏணிகளில் ஏறவும் கற்றுக்கொள்கிறார்கள்.
- அவர்கள் தங்கள் உடைகளை அணிந்து, சாப்பிடுவது போன்ற அன்றாட செயல்களில் சுயாதீனமாக மாறுகிறார்கள்.
- அவர்கள் பேசும் திறன்களை மேம்படுத்துகிறார்கள் மற்றும் எளிய வாக்கியங்களை உருவாக்க முடியும்.
- தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், சமூக விதிகளைக் கற்றுக்கொள்ளவும் தொடங்குகிறார்கள்.
4. பாலர் பள்ளி (3 வயது முதல் 5 வயது வரை):
- இந்த கட்டத்தில், குழந்தைகள் மிகவும் சமூகமாக மாறுகிறார்கள்.
- அவர்கள் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதை விரும்புகிறார்கள் மற்றும் நண்பர்களை உருவாக்குகிறார்கள்.
- கற்பனை விளையாட்டில் ஈடுபடுகிறார்கள் மற்றும் கதைகளைச் சொல்லவும், பாத்திரங்களை ஏற்கவும் விரும்புகிறார்கள்.
- கேள்விகளைக் கேட்கவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக உள்ளனர்.
- அடிப்படை எழுத்தறிவு மற்றும் கணித திறன்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.
5. ஆரம்ப பள்ளி வயது (5 வயது முதல் 12 வயது வரை):
- இந்த கட்டத்தில், குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வியைத் தொடங்குகிறார்கள்.
- அவர்கள் படிக்கவும், எழுதவும், கணக்கிடவும் கற்றுக்கொள்கிறார்கள்.
மனவெழுச்சி என்றால் என்ன
மனவெழுச்சி என்பது உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் நடத்தைகள் ஆகியவற்றின் சிக்கலான கலவையாகும், இது ஒரு குறிப்பிட்ட தூண்டுதலுக்கு பதிலளிக்கும் வகையில் ஏற்படுகிறது. இது உடல் மற்றும் உளவியல் மாற்றங்களை உள்ளடக்கியது, இதில் பின்வருவன அடங்கும்:
- உடல் மாற்றங்கள்: இதய துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாசம் மற்றும் தசை பதற்றம் போன்றவை அதிகரிப்பது.
- உணர்ச்சி மாற்றங்கள்: மகிழ்ச்சி, சோகம், கோபம், பயம் அல்லது ஆச்சரியம் போன்ற தீவிர உணர்ச்சிகளை உணர்தல்.
- எண்ண மாற்றங்கள்: சூழ்நிலையைப் பற்றிய நமது சிந்தனைகள் மற்றும் நம்பிக்கைகள் மாறுவது.
- நடத்தை மாற்றங்கள்: சிரிப்பு, அழுகை, கத்தல், ஓட்டம் அல்லது தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவது.
மனவெழுச்சிகள் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை நம்மை செயல்பட தூண்டலாம், மற்றவர்களுடன் இணைக்க உதவலாம் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை புரிந்துகொள்ள உதவலாம்.
மனவெழுச்சிகளின் வகைகள்:
- நேர்மறை மனவெழுச்சிகள்: மகிழ்ச்சி, உற்சாகம், நன்றியுணர்வு மற்றும் அன்பு போன்றவை.
- எதிர்மறை மனவெழுச்சிகள்: சோகம், கோபம், பயம் மற்றும் வெறுப்பு போன்றவை.
- நடுநிலை மனவெழுச்சிகள்: ஆர்வம், ஆச்சரியம் மற்றும் சலிப்பு போன்றவை.
மனவெழுச்சிகளை நிர்வகித்தல்:
மனவெழுச்சிகளை ஆரோக்கியமான முறையில் நிர்வகிப்பது முக்கியம். இதன் பொருள்:
- நமது உணர்ச்சிகளை அறிந்து கொள்வது: நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப் பற்றி விழிப்புடன் இருப்பது மற்றும் நமது உணர்ச்சிகளுக்கு என்ன காரணம் என்பதை புரிந்துகொள்வது.
- நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது: ஆரோக்கியமான முறையில் நமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது, பேசுவது, எழுதுவது அல்லது உடற்பயிற்சி செய்வது போன்றவை.
- நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது: நமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த கற்றுக்கொள்வது, ஆழமான சுவாசம் அல்லது தியானம் போன்ற நுட்பங்களைப் பயன்படுத்துவது.
குறிப்பு: நீங்கள் உங்கள் மனவெழுச்சிகளை நிர்வகிக்க சிரமப்படுகிறீர்கள் என்றால், தகுதியான மனநல நிபுணரிடம் உதவி பெறுவது முக்கியம்.
மாணவர்களை ஊக்குவிக்கும் கவிதை
மாணவர்களை ஊக்குவிக்கும் கவிதை
எழுந்து நில்லு இளம் வீரனே! உன் இலக்குகளை நோக்கி பயணி தடைகளை கடந்து செல்ல தயங்காதே வெற்றி உனக்கே சொந்தம்
கனவுகளை விடாதே கடின உழைப்பை மேற்கொள் உன் திறமைகளை நம்பு உன்னால் முடியும்
தோல்விகளை வெறுக்காதே அவை வெற்றிக்கு அடிபடைகள் கற்றுக்கொள், வளர் உயரே எழும்பு
நம்பிக்கையுடன் செல் உன் இலக்குகளை அடை உலகத்தை மாற்று ஒரு ஒளியாக திகழ்
நீ தான் எதிர்காலம் நீ தான் நம்பிக்கை உன் கைகளில் தான் நாட்டின் வளர்ச்சி எழுந்து நில், முன்னேறு
இந்த கவிதை உங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்.
மேலும் சில ஊக்கமான வார்த்தைகள்:
- கல்வி என்பது ஒரு ஆயுதம், அது வறுமையை எதிர்த்துப் போராட உதவும்.
- நீங்கள் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு விஷயமும் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.
- தோல்விகள் வெற்றிக்கு stepping stones.
- உங்கள் இலக்குகளை நோக்கி தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
- நம்பிக்கையுடன் இருங்கள், எல்லாம் சாத்தியம்.
மனப்பாங்கு என்றால் என்ன
மனப்பாங்கு என்றால் என்ன?
மனப்பாங்கு என்பது நாம் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய நமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகளின் தொகுப்பாகும். இது நமது அனுபவங்கள், நம்பிக்கைகள் மற்றும் மதிப்புகளால் வடிவமைக்கப்படுகிறது. நமது மனப்பாங்கு நமது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பாதிக்கிறது, அதாவது:
- நமது எண்ணங்கள்: நமது மனப்பாங்கு நமது எண்ணங்களை பாதிக்கிறது. நேர்மறையான மனப்பாங்கு கொண்டவர்கள் நேர்மறையான எண்ணங்களை கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது, அதே சமயம் எதிர்மறையான மனப்பாங்கு கொண்டவர்கள் எதிர்மறையான எண்ணங்களை கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது.
- நமது உணர்ச்சிகள்: நமது மனப்பாங்கு நமது உணர்ச்சிகளை பாதிக்கிறது. நேர்மறையான மனப்பாங்கு கொண்டவர்கள் மகிழ்ச்சி, நன்றியுணர்வு மற்றும் அமைதி போன்ற நேர்மறையான உணர்ச்சிகளை அனுபவிக்க அதிக வாய்ப்புள்ளது, அதே சமயம் எதிர்மறையான மனப்பாங்கு கொண்டவர்கள் சோகம், கோபம் மற்றும் பதட்டம் போன்ற எதிர்மறையான உணர்ச்சிகளை அனுபவிக்க அதிக வாய்ப்புள்ளது.
- நமது நடத்தைகள்: நமது மனப்பாங்கு நமது நடத்தைகளை பாதிக்கிறது. நேர்மறையான மனப்பாங்கு கொண்டவர்கள் ஆரோக்கியமான நடத்தைகளில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது, அதே சமயம் எதிர்மறையான மனப்பாங்கு கொண்டவர்கள் ஆரோக்கியமற்ற நடத்தைகளில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது.
மனப்பாங்கின் வகைகள்:
- நேர்மறையான மனப்பாங்கு: நேர்மறையான மனப்பாங்கு கொண்டவர்கள் வாழ்க்கையின் நல்ல அம்சங்களில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் நம்பிக்கையுடனும், நம்பிக்கையுடனும், நன்றியுடனும் இருக்கிறார்கள். சவால்களை எதிர்கொள்ளும்போது அவர்கள் உறுதியுடனும், நெகிழ்வாகவும் இருக்கிறார்கள்.
- எதிர்மறையான மனப்பாங்கு: எதிர்மறையான மனப்பாங்கு கொண்டவர்கள் வாழ்க்கையின் எதிர்மறையான அம்சங்களில் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் சந்தேகத்திற்குரியவர்களாகவும், பயந்தவர்களாகவும், எரிச்சலடைந்தவர்களாகவும் இருக்கலாம். சவால்களை எதிர்கொள்ளும்போது அவர்கள் தோல்வியடைந்து, சோர்வடைந்து விடலாம்.
- நடுநிலை மனப்பாங்கு: நடுநிலை மனப்பாங்கு கொண்டவர்கள் நேர்மறை மற்றும் எதிர்மறை இரண்டையும் பார்க்கிறார்கள். அவர்கள் யதார்த்தவாதிகளாகவும், சமநிலையுடனும் இருக்கிறார்கள். சவால்களை எதிர்கொள்ளும்போது அவர்கள் அமைதியாகவும், பகுத்தறிவுடனும் இருக்கிறார்கள்.
விருத்தி உளவியல் என்றால் என்ன
விருத்தி உளவியல் என்பது மனிதர்கள் வாழ்நாள் முழுவதும் எவ்வாறு வளர்கிறார்கள் மற்றும் மாறுகிறார்கள் என்பதை ஆராயும் ஒரு துறையாகும். இது குழந்தை வளர்ச்சி, இளமைப் பருவ வளர்ச்சி, வயது வந்தோர் வளர்ச்சி, முதுமை வளர்ச்சி போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கியது.
விருத்தி உளவியலாளர்கள் பல்வேறு கேள்விகளை ஆராய்கிறார்கள், அவற்றுள்:
- குழந்தைகள் எவ்வாறு நடக்கவும், பேசவும், படிக்கவும் கற்றுக்கொள்கிறார்கள்?
- நமது உணர்ச்சிகள், ஆளுமை மற்றும் அறிவாற்றல் திறன்கள் எவ்வாறு வளர்கின்றன?
- சமூக மற்றும் கலாச்சார காரணிகள் எவ்வாறு வளர்ச்சியை பாதிக்கின்றன?
- நாம் வயதாகும்போது எவ்வாறு மாறுகிறோம்?
விருத்தி உளவியல் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படுகிறது,
- கல்வி: ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மாணவர்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் வளர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள விருத்தி உளவியலைப் பயன்படுத்துகிறார்கள்.
- மருத்துவம்: மருத்துவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் மனநோய் மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகளைப் புரிந்துகொண்டு சிகிச்சையளிக்க விருத்தி உளவியலைப் பயன்படுத்துகிறார்கள்.
- சட்டம்: சட்ட அமைப்புகள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுடன் தொடர்புடைய வழக்குகளில் விருத்தி உளவியல் அறிவைப் பயன்படுத்துகின்றன.
- கொள்கை: அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு சேவைகளை வடிவமைக்க விருத்தி உளவியலைப் பயன்படுத்துகின்றன.
விருத்தி உளவியல் என்பது ஒரு சிக்கலான மற்றும் ஈர்க்கக்கூடிய துறையாகும், இது நாம் யார் மற்றும் நாம் எவ்வாறு மாறுகிறோம் என்பதைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்த உதவுகிறது.
தண்டனை கவிதை
தவறு செய்தால் தண்டனை வாழ்க்கையில் இயல்பு நல்ல பாடம் கற்றுக்கொடுக்கும் நம்மை திருத்தி நடத்தும்
சின்ன தவறு பெரிய தண்டனை அனுபவம் கற்றுத் தரும் மனதில் பாடம் பதியும் மீண்டும் தவறு செய்யாமல் இருக்க
தண்டனை கொடுப்பவர்கள் நம் நன்மைக்காகவே கொடுக்கிறார்கள் கோபத்தால் அல்ல நம்மை திருத்தவே
தவறு செய்துவிட்டால் மன்னிப்பு கேட்டுவிடுவோம் மீண்டும் தவறு செய்யாமல் நல்லவர்களாக மாறுவோம்
தண்டனை என்பது ஒரு கசப்பான மருந்து நோயை குணப்படுத்தும் வாழ்க்கையை மேம்படுத்தும்
தவறு செய்யாமல் வாழ்வோம் தண்டனையை தவிர்ப்போம் நல்லவர்களாக மாறி சந்தோஷமாக வாழ்வோம்
These are really enormous ideas in regarding blogging.
You have touched some nice points here. Any way keep up wrinting.
Thankyou What is the dark web
This website really has all the information and
facts I wanted about this subject and didn’t know
who to ask.
Hi What are you asking?