சமூக நகர்வை உறுதி செய்வதில் பாடசாலை – சமூக உறவின் தாக்கம்
மனித சமூகம் தன்னுடைய தோற்ற காலத்தில் இருந்து பல்வேறு விதமான கட்டங்களில் கடந்து வந்துள்ளான் .அனுபவக் கல்வியைப் பெற்றுக் கொண்டீ வேடுவனாக நாடோடியாக பின் நிலையான குடியேற்றங்களை கொண்ட விவசாய மனிதனாக படிப்படியாக உருவெடுத்து இன்று பரந்த அறிவுடன் கூடிய நவீன மயமாக்கல் சமூகத்தினுள் உள் நுழைந்துள்ளார். இவனது இச் செயற்பாடானது பொதுவாக சமூக நகர்வு என பெயர் கொள்ளப்படுகின்றது. சமூக நகர்வு என்பது ஒரு சமூகம் தான் தற்போதுள்ள நிலைமையில் இருந்து இது ஒரு காரணத்தின் அடிப்படையில் (குடும்பம், கல்வி, வாய்ப்புகள் ,சூழல்) முன்னோக்கி செல்வதையோ அல்லது பின்னடைவை சந்திப்பதையோ நாம் சமூக நகர்வு என கொள்ளலாம்.
இச்சமூக நகர்வானது பிரதானமாக இரு பகுதிகளை கொண்டுள்ளது ஒன்று மேல் நோக்கிய சமூகம் ஆகும். அதாவது ஒரு சமூகம் தான் தற்போதுள்ள நிலைமை இருந்து மேலே குறிப்பிட்ட காரணிகள் ஊடாக அபிவிருத்தியை நோக்கிச் செல்வதை குறிக்கிறது. அதே சமயம் இரண்டாவது கீழ்நோக்கிய சமூக ஆர்வமாகும் இதன் மூலம் அந்த சமூகம் தான் தற்போதுள்ள நிலையிலிருந்து மேலே குறிப்பிட்ட காரணிகள் ஊடாக பின் தங்கிய நிலைக்கு செல்வதனை குறிக்கிறது.
சமூகம் என்பது பல்வேறு மனித தொகுதிகளின் கூட்டாக இருக்கின்ற சமயம் அது தன்னுள் பல்வேறு தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக வேண்டி பலதரப்பட்ட நிறுவனங்களை தன்னகத்தை கொண்டுள்ளது. அவ்வாறான நிறுவனங்களில் மிகப் பிரதானமான ஒன்றாக பாடசாலைகள் காணப்படுகின்றன. இப்படசாலைகள் ஒரு சமூகத்தின் அடையாளமாகவும் அச்சமூகத்தின் நகர்வு நோக்கிய பாதைக்கு அத்திவாரமாகவும் திகழ்கின்றன.
இங்க நாம் சமூகத்தில் காணப்படும் தலையாய நிறுவனமான பாடசாலையில் அச்சமூகத்தின் தாக்கம் எவ்வாறு சமூக நகர்வை மேற்கொள்கின்றது என்பதனை சற்று ஆராய்வோம்.
ஒரு பாடசாலையை பொருத்தவரையில் அதனை சூழ உள்ள சமூகத்தோடு மிகச்சிறப்பான ஒரு தொடர்பை வைத்துக் கொள்ளுமேயானால் அங்கு இருதரப்பினரிடையேயும் பூரணமான புரிந்துணர்வும் ஆதரவும் ஒத்துழைப்பும் பூரணமாக காணப்படும் உதாரணமாக ஓர் பாடசாலை நிகழ்வின் போது அச்சமூகம் பாடசாலை ஆளணிடயினரோடு ஒன்றிணைந்து தங்களால் முடியுமா அர்ப்பணிப்புடன் மனமுவந்து அப்பணிகளை செய்கின்ற சந்தர்ப்பத்தில் அச்சமுகத்தின் உயர்வு உறுதி செய்யப்படுகிறது . (இணைப்பாட விதானச் செயற்பாடுகள், இல்ல விளையாட்டுப் போட்டிகள் கல்விசார்செயல்பாடுகளில் என்பவற்றை குறிப்பிடலாம்)
சமூகத்தோடு சிறப்பான தொடர்பை அப் பாடசாலை வைத்துக் கொள்ளுமேயானால் பொருளாதார உதவிகள் முழுமையாக கிடைக்கப் பெறுகின்ற சந்தர்ப்பத்தில் அப்பாடசாலைகள் கல்வி சார் செயல்பாடுகள் ஊடாக நேரான சமூக நகர்வுக்கு உட்படும் உதாரணமாக பாடசாலைக்கு தேவையான பௌதிக வளங்கள் ,சிறந்த வளவாளர்களைப் பெறுவதற்கான ஆதரவு அதேபோல பாடசாலையின் ஏனைய நடவடிக்கைகளுக்கு தேவையான நன்கொடைகள் நிதி உதவிகள் பொருள் உதவிகள் கிடைக்கப் பெறும் சந்தர்ப்பத்தில் வெற்றியை நோக்கி பாடசாலை நகரும்.
பாடசாலையும் சமூகமும் சீரான தொடர்பில் காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் பாடசாலைகளின் கொள்கை வகுத்தல் தொடர்பான செயற்பாடுகளில் பிரதானமாக பாடசாலை அபிவிருத்தி சங்கம் பாடசாலை முகாமை குழு என்பன சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களாக ஒன்று இணைந்து கொள்கை வகுத்தலை உருவாக்குகின்ற சமயம் அச்சமூகத்திற்கு தேவையான பெறுமதி மிக்க மாணவச் செல்வங்களை எதிர்கால தேவைக்காக வேண்டி பூரணக் கொள்கை திட்டமிடல்கள் உருவாக்கப்படுவதற்கு அவை வழிகோலும் அதே சமயம் குறிப்பிட்ட சமூகத்தினர் கல்வியில் எவ்வாறான மாற்றங்களை கொண்டு வரவேண்டும். கற்றல்-கற்பித்தல் திட்டமிடலில் எவ்வாறான புதிய விடயங்களை கொண்டு வர வேண்டும் என்கின்ற கல்வி சார் ஆலோசனைகளும் கருத்துக்களும் சமூகத்தினரின் திருப்திகரமான எண்ணங்கள் வெளிப்படுவதற்கு அவை காரணமாக அமைவதின் மூலம் நிரந்தரமான வெற்றியை நோக்கி பாடசாலை செல்வதற்கு ஓர் பாதையாக அமையும்.
ஒரு பாடசாலைக்கும் சமூகத்துக்கும் இடையிலான தொடர்பு சீராக அமையும் சமயம் ஆளுமை விருத்திக்கான பல்வேறுபட்ட செயற்பாடுகளை சமூகம் சார் குழுக்களோடு (நற்பணி மன்றங்கள், இளைஞர் கழகங்கள், மகளிர் கழகங்கள்…) உட்பட பல தரப்பினரோடு இணைந்து மாணவர்களின் ஆளுமை விருத்திக்கு தேவையான இணைப் பாடவிதான செயற்பாடுகளான நாடகம் நடித்தல், கவிதை பாடல் என்பவற்றை நடத்துகின்ற கலை விழாக்களை நிகழ்த்துவதன் மூலம் அவர்களின் திறமைகளையும் திறன்களையும் வெளிப்படுத்தி தங்களுடைய சமூகத்திலேயே பல் ஆளுமை மிக்க நபர்களை உருவாக்குவதற்கு சிறப்பான சமூக நகர்வை இவற்றின் மூலம் உறுதி செய்ய முடியும்.
ஒரு சமூகமானது பாடசாலை சீரான தொடர்புகளை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் எதிர்கால சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய தலைசிறந்த இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதற்கு எவ்வாறான பயிற்சி நெறிகள் வழங்கப்பட வேண்டும்?எவ்வாறான வளங்கள் பெறப்பட வேண்டும் ?அவற்றுக்கான வழிவகைகள் யாது அவர்களுக்கு எவ்வாறான தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கலாம்? அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான செயற்பாடுகள் யாவை? என்பது தொடர்பாக சமூகத்தில் உயர்ந்த கல்வி சார் ஆலோசகர்கள் புத்திஜீவிகள் நலன் விரும்பிகள் என்போரின் ஆதரவுடன் சிறப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான அடித்தளம் இடப்படுவதன் மூலம் அச்சமூகம் முன்னேற்ற பாதைக்கு செல்வதோடு நல்லொழுக்கம் மிக்க சமூகத்தை உருவாக்கும் பணியை சமூகத்தில் காணப்படுகின்ற சமய நிறுவனங்கள் ஊடாக( கோயில், பள்ளிவாசல் தேவாலயம், பௌத்த விகாரை) நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் மூலமும் அச் சமூகத்தில் ஏற்படுகின்ற பல்வேறுபட்ட முரண்பாடுகளையும் தற்காலத்தின் பிரதான பிரச்சனையான போதைப்பொருள் பாவனை, பாலியல் துஷ்பிரயோகம் ,கொலை … உட்பட நாட்டில் இடம் பெறுகின்ற குற்றங்களை நீக்கி அமைதியான ஒரு சமூகத்தை உருவாக்குவதன் மூலம் அச்சமூகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்கு அவை உறுதுணையாக அமையும்.
இவ்வாறு சீரான தொடர்பு மூலம் அந்த சமூகம் வெற்றிப்பாதைக்கு சென்று நேரான சமூக நகர்வை உறுதி செய்கின்ற அதே சமயம் சீரற்ற தொடர்புகள் ஊடாக பின்வரும் அடிப்படை பின்னோக்கிய சமூகநகர்வை உறுதி செய்கின்றன.
பாடசாலை சமூக உறவின் முரண்பாடான தன்மை காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் பாடசாலையின் ஒவ்வொரு செயற்பாடுகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் போராட்டங்களும் இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில் உண்மையிலேயே பாடசாலை நிர்வாகத்தின் செயல்பாடு மாணவர்களின் அபிவிருத்திகானதாக காணப்பட்டாலும் அதனை தவறான புரிந்துணர்வின் மூலமாக அதனை இல்லாதொழித்து மாணவர்களுக்கு கிடைக்கவிருக்கும் நலன்களை இச்சமூகம் தட்டிப் பறித்து விடுகின்றது அதேபோல தவறான வதந்திகளை பரப்பி பாடசாலை சமூகத்தினரின் நற்பெயர்களை க அழிக்கும் விதமான நடவடிக்கைகளில் சமூகம் ஈடுபடுகின்ற வேளைகளில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்ச்சி மிக்க செயற்பாடுகள் பின்னடைவானதாகவும் முன்னோக்கி செல்வதற்கான பாதையில் முட்டுக்கட்டையாகவும் இவை அமைவதன் மூலம் முன்னோக்கி செல்ல வேண்டிய சமூகம் பின்னோக்கி சமூக நகர்வை உறுதி செய்கின்றன
அதேபோல பாடசாலை செயற்பாடுகளில் அச்சமூகம் அக்கறையற்ற தன்மையில் அவர்கள் வேண்டியது செய்து கொள்ளட்டும் என்ற சிந்தனையில் இருக்கின்ற சமயம் அவர்களுக்குள்ளே முறையான விதத்தில் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான நடவடிக்கைகள் பின் தங்கியோராகவும் பெற்றோர்கள் காணப்படுகின்ற அதே வேலையை பாடசாலை அபிவிருத்தி குழு, பாடசாலை முகாமைத்துவ குழு என்பனவும் பொறுப்புணர்ச்சி அற்றதாக தங்களுடைய செயற்பாடுகளை சீராக வடிவமைத்து கொள்ளாத சந்தர்ப்பத்தில் அப்பாடசாலையினுடைய எந்த ஒரு செயற்பாட்டிலும் முன்னேற்றத்தை நோக்கி செல்வதற்கான அடித்தளம் காணப்படாத சந்தர்ப்பத்தில் பாடசாலை முகாமைத்துவமும் மாணவர்களோடு தொடர்பான கற்றல் -கற்பித்தல் பணியும் பின்னடைவை நோக்கி செல்வதன் மூலமாக இங்கு சமூக நகர்வு எதிர்மறையானதாகவே அமைகின்றது.
பாடசாலை ஆளணியும் தன்னைச் சூழ உள்ள சமூகங்களின் கலாசார பண்பாட்டு அம்சங்களை அவமதித்து நடப்பதன் ஊடாக அவர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்வதன் மூலம் முறையற்ற தொடர்புகளை உருவாக்கிக் கொள்கின்றனர் .அதேபோல பாடசாலை நிர்வாகத்திலும் சரி மாணவர்களிடையேயும் சரி பக்கச் சார்பு பாகுபாடு காட்டலின் ஊடாகவும் சமூகத்தினரை கருத்துக்களுக்கு செவிசாய்க்காத தன்மையும் வெகுவாக அதிகரிக்குமேயானால் அப்பாடசாலைகளில் எந்த ஒரு செயற்பாட்டிலும் பெற்றோரினதும் சுற்றியுள்ள சமூகத்தினரும் ஆதரவுகள் கிடைக்க பெறாமல் வளப்பற்றாக்குறை எந்த ஒரு நிகழ்ச்சி திட்டத்தையும் செயற்றிட்டங்களையும் நடைமுறைப்படுத்த முடியாமல் சமூகத்தினருடன் தொடர் போராட்டங்களுக்கும் எதிர்ப்புகளுக்கு முகங் கொடுக்க வேண்டி வரும் அத்துடன் பல்வேறு ரீதியான முரண்பாடுகள் மோதல்கள் உருவாவதோடு பாடசாலையில் உட் பூசல்கள் சமூகத்துடனான பிளவுகள் ஊடாக சமூகம் மறைமுகமாக கீழ்நோக்கிய சமூக நகர்வை தன்னகத்தை கொண்டுதாகக் காணப்படும்.
மேலும் பாடசாலை ஆளணியினர் கொள்கை வகுத்தலின் போது சமூகத்தின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காத சந்தர்ப்பங்களில் மாணவர்கள் தொடர்பான பூரண அறிவும், அவர்களை கட்டுப்படுத்துவதற்கான உத்திகளும் அவர்களை வழிநடத்துவதற்கான நுட்ப முறைகளையும் அச்சமூகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் முகாமைத்துவமும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்குவதன் மூலமாக அங்கு கற்றல் -கற்பித்தல் செயற்பாடு உட்பட இணைப்பாடவிதான செயற்பாடுகளும் ஏனைய கலைத்திட்டமும் பூரணமாக அடையப்படாமல் தேர்ச்சி பெற்ற மாணவர் பரம்பரை உருவாக்க முடியாமல் கீழ்நோக்கிய சமூக நகர்வையே அவர்கள் உறுதி செய்யும் விதமாக செயற்பட வேண்டிய நிலைமை உருவாகும்.
மேலும் பூரணமான விதத்தில் சமூகமும் பாடசாலையும் ஒற்றுமையாக செயல்படாத வேளையில் வளப் பெறுகை,அபிவிருத்தி செயற்பாடுகளில் பாரிய பின்னடைவு எதிர்நோக்கப்படுவதோடு பாடசாலையில் முகாமைத்துவ நடவடிக்கைகளிலும் நிதிசார் செயற்பாடுகளிலும் அதிபரும் ஏனைய ஆசிரியர்களும் அதிருப்தி அடைந்த நிலைமை உருவாகுவதற்கு இவை காரணமாக அமையும் இவ்வாறு பாடசாலை சமூக உறவை பல்வேறு விரிசல் நிலைகள் உருவாகி அந்த சமூகம் தொடர்ந்து பின் தங்கியவர்களாகவும் தற்கால நவீ மயமாக்கலை எதிர்கொண்டு எதிர்கால தலைசிறந்த சந்ததிகளை உருவாக்க முடியாமல் தத்தளிக்கின்ற ஒரு கீழ் நோக்கிய சமூக நகர்வை நோக்கி நகரும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஒட்டுமொத்தமாக நோக்கின்ற சமயம் பாடசாலை -சமூகம் இரண்டுக்கும் இடையிலான தொடர்பு சீராக நடைபெறுமானால் அச்சமூகம் மேல் நோக்கிய சமுக நகர்வையும் அவற்றில் ஏற்படுகின்ற பிளவுகளும் பிரச்சினைகளும் கீழ்நோக்கிய சமூக நகர்வுகளை நோக்கியும் அழைத்துச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஒவ்வொரு பிரதேசத்தில் வாழுகின்ற சமூகமும் மக்களும் இந்த விடயத்தை நன்றாக ஆராய்ந்து தாங்கள் எவ்வாறு பாடசாலையோடு தொடர்பில் உள்ளோம் என்பது தொடர்பாக நன்கு அறிந்து கொண்டு அவற்றுக்கான ஆதரவை வழங்குவதோடு பாடசாலை ஆளணியினரும் நம்முடைய நிரந்தர வெற்றியின் ஊடாக நேர்மறையான சமூக நகர்வை நோக்கி சிறப்பான எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பணிக்கு தான் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனை தெளிவாக உற்று நோக்குவதன் மூலம் சிறப்பான வெற்றிப் பாதையை நோக்கி செல்ல முடியும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
எம்.வை.எம்.அர்ஷாத்
கல்வியியல் சிறப்பு கற்கை நெறி மாணவன்
கல்வி பிள்ளை நலத் துறை
கலை,கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக்கழகம்