இறப்பின் விளிம்பில் மூச்சிரைத்துக் கொண்டிருக்கும் ஒருவரிடம் சுற்றமும் கூடி நின்று
தங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறோம் எது ஆசையோ கூறுங்கள் செய்கிறோம் என்று விழுந்து விழுந்து கவனித்துக் கொள்கின்றனர்
இறந்து கொண்டிருப்பவரிடம் வினவும் இந்த வினவல்களை
அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு முறையேனும் கேட்டிருக்கலாம் – அதனால் அவர் வாழ்ந்திருக்கக்கூடும் பிடித்தமாய்…..
இப்போது இந்த அக்கறைத் தொனிகளால் அவர் இறந்து போவார் பிடித்தமாய் என எண்ணுகிறீர்களா
அந்தோ பரிதாபம்….
– பஸீனா –