பாடசாலை கல்வி செயற்பாடுகளில் சம வயது குழுக்கள் ஏற்படுத்தும் நன்மைகள்

கல்வி

*பாடசாலை கல்வி செயற்பாடுகளில் சம வயது குழுக்கள் ஏற்படுத்தும் நன்மைகள்

ஒரு மனிதன் சமூகத்தில் மனிதன் தனித்து பிறருடைய உதவிகளும் ஒத்துழைப்புகளும் அன்றி வாழ்வதென்பது இயலாத ஒன்றாகும் ஏதோ ஒரு வகையில் எல்லோரும் எலலோருடனும் தங்கியே நிற்கின்றோம.எல்லா செயற்பாடும் சமூகமயமாக்கலில் செல்வாக்கு செலுத்துகின்றது. எனவேதான் ஒரு மனிதன் தனது சமூகச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை இசைவாக்கமடைய செய்து கொள்வது சமூகமயமாக்கல் எனப்படுகின்றது இவ்வாறு பிறந்தது முதல் இறப்பது வரையிலும் சமூகத்தில் தன்னை ஒரு  உறுப்பினராக சமூகமயமாக்கிக் கொள்வதற்கு உதவும் நபர்கள் சமூக மயமாக்கல் முகவர்கள் எனப்படுகின்றனர். ஒரு பிள்ளை சமூகமயமாக்கலில் பங்கு கொள்கின்ற முதன்மையான முகவர் குடும்பமாகும். அதற்கு அடுத்ததாக பாடசாலை மற்றும் சமூக வயது குழுக்கள் என்பன காணப்படுகின்றன.


சக பாடி குழு,ஒத்த வயதினர் என்றும் ஆங்கிலத்தில் இவை Peer groups என்றும் அழைக்கப்படுகின்றன.இதில் பாடசாலை செயல்பாடுகளே மிகவும் வலிமையானதொரு சமூகமயமாக்கல் காரணமாக இருக்கின்றது. இச்சம வயதினர் பொதுவாக ஒத்த சிந்தனைகள் செயல்பாடுகள் எதிர்பார்ப்புகள் விருப்பு வெறுப்புகள் ஆர்வங்கள் மொழி கோலம் என்பவற்றைக் கொண்டிருக்கின்றார்கள். பாடசாலையில் இடம் பெறும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளிலும் சமூகமயமாக்கல் செயல்பாட்டிலும் இச்சமய வயது குழுக்கள் இடையே செல்வாக்கு அதிகமாகவே காணப்படுகின்றது.


சமவயது குழுக்களின் உறுப்பினர்கள் ஒன்றோடு ஒன்று சகாக்களின் அழுத்தம் (Peer Pressure) ஏற்படுவதுண்டு. இதனால் எதிர் மனப்பாங்குகளையும் பெற்றுக்கொள்கின்றனர். பல்வேறுப்பட்ட பண்புகள் இதனால் சமவயது இணைக்கப்பட்டு ஒப்புக்கொள்ளும் போது நேர் மனப்பாங்குகளை பெறும் அதே அளவு குழுக்களிடம் காணப்படுவதுண்டு.


• ஒத்தவயது குழுவினர்கள் சமத்துவமும் நட்புரிமையும் கொண்டனர்கள்.
• குழு மனப்பான்மையுடன் சுதத்திரமாக செயற்படுபவர்கள்,
• நேரத்தின் முக்கியத்துவத்தினை பற்றி சிந்திப்பது குறைவு
• ஒத்த வயதுக்குழுவினர் ஒரே வகையான விருப்பு வெறுப்பு, நம்பிக்கைகள், நோக்கங்கள், எதிர்பார்ப்புக்கள் இனப்பின்னணி, பண்பு, கல்வி, தொழில், வருமானம், பாலினம் மற்றும் ஒத்த சமூக அந்தஸ்த்து கொண்டவர்களாக காணப்படுவர்.
• இக்குழுவினர் குறுகிய நிரந்தரமற்ற ஆசைகளையும் பழக்கங்களையும் உடையவர்களாக காணப்படுவர்.
• சமவயது குழுக்கள் பல ஆட்களைக்கொண்ட தொகுதியாக இருப்பதுடன் சில பொதுவான இலக்குகளையும், விருப்பங்களையும், தூண்டுதல்களையம், மனவெழுச்சிகளையும் கொண்டிருக்கும்.
• பல்வேறு துணைக் கலாச்சாரங்களை உருவாக்குபவர்களாக காணப்படுவர். அடுத்த தலைமுறைக்கு கலாச்சாரத்தை ஒப்படைக்கும் செயற்பாடுகளை நிறைவேற்றுபவர்களாக காணப்படுவர்.
• தேசியம், சமயம், தமது சமூக வகுப்பு என்பனவற்றின் இயல்புகள், மூத்தோர் கலாச்சாரம், ஏனைய கலாச்சாரம் பற்றிய விளக்கத்தினை சமவயதுக்குழு மூலம் கற்கக் கூடியதாய் இருக்கும்.
• சமூக அமைப்புக்கள் பற்றிய அறிமுகம் இங்கு கிடைக்கிறது. வெவ்வேறுபட்ட சமூக வகுப்புகள் பற்றி விளக்கம் கிடைக்கிறது.
• இது குடும்பத்தைப் போல் நிரந்தரமானதல்ல. நீண்டகால இலக்குகள் இருக்காது. பரந்ததாகவோ நிறுவனமயமானதாகவோ இருக்காது.
• தனியாள் விருத்தி, பங்கேற்பு செய்வதன் மூலம் தகைமையை விருத்தி செய்தல், குடும்பத்தின் மூலம் பெற முடியாத இணைப்புக்கள். அனுபவங்கள் இக்குழு பெற்றுக்கொடுக்கும்.
• குடும்பத்தை விட சுதந்திரமும் சமத்தவமும் உடைய உறவினை வளர்த்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தினை இக்குழு வழங்கும்.


கல்வி செயற்பாடுகளிலேயே இச்சம வயது குழுக்கள் நன்மையான சில செயற்பாடுகளையும் அதேநேரம் தீமையான சில செயற்பாடுகளையும் ஏற்படுத்துகின்றனர்.இந்த வகையில் கல்வி சமூகமயமாக்கல் செயல்பாட்டில் ஒத்த வயதினர் நன்மையான செல்வாக்குகளை பற்றி நோக்குவோம்.


குடும்பத்தினுடைய கட்டுப்பாட்டிற்குள் இருந்து வளரும் ஒரு பிள்ளை பாடசாலை தன்னுடைய சுதந்திரமாக எண்ணுகின்றது. பாடசாலையில் இருக்கும் தன்னுடைய நண்பர்களை உறவினர்களாக பாவித்து பழகிக் கொள்கின்றனர். எனவேதான் எதிர்பார்க்கும் ஒரு மகிழ்ச்சிகரமானதும் சுதந்திரமான ஒரு சூழலை பிள்ளை பாடசாலையில் பெற்றுக் கொள்கின்றது எனவே தனக்கு பிடித்த சூழலில் தன்னுடைய சக வயது தோழர்களுடன் சிறந்த முறையில் கல்வியை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அப்பிள்ளைக்கு கிடைக்கின்றது. தன்னுடைய நண்பருடன் சுதந்திரமாக இயங்குவது என்பது அப் பிள்ளைகள் தம் உணர்வுகளையும் விருப்பங்களையும் வெறுப்புகளையும் வெளிப்படுத்துகின்ற ஒரே இடமாக காணப்படுகின்றது. ஆகவே கல்வி சார்ந்த தனக்கு எழுகின்ற சந்தேகங்களையும் படிப்பினையும் தன்னுடைய நண்பர்களிடையே கேட்டு தெரிந்து கொள்ள அவர்கள் தயங்குவதில்லை. ஆகவே தான் நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையிடனும் சந்தோஷத்துடன் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடன் தம்முடைய கல்வி சார் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகவும் சிறந்த ஓர் அம்சமாகும். அத்தோடு மாணவர்கள் ஒரு ஆசிரியருடன் தமது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள சக நண்பர்களிடமிருந்து ஒரு விடயத்தை தெளிவுபடுத்திக் கொள்ளும் போது அவர்களிடம் சிறந்த முறையில் சென்றடைகின்றது. எனவே மாணவர்களின் கல்வி அடைவை மேம்படுத்திக் கொள்வதில் சம வயது குழுக்கள் பெரும் பங்களிப்பை செய்கின்றனர்.


எந்த ஒரு வேலையையும் ஒருவர் தனியாக செய்வதற்கும் ஒரு குழுவுடன் இணைந்து செயல்படுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. அதேபோல தான் பாடசாலைகளில் இடம்பெறும் கல்வி செயற்பாடுகளில் இச்சம வயது குழுக்களை கொண்டு செயற்பாடுகளை மேற்கொள்கின்றபோது அது இலகுவாகவும் வினைத்திறன் மிக்க செயற்பாடாகவும் அமைகின்றது. எனவேதான் பாடசாலைகளில் காணப்படுகின்ற சம வயது குழுக்களை நாம் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்கின்ற போது நேரமும் சிக்கனப்படுத்தப்படும். அதே நேரம் எம்முடைய எதிர்பார்ப்புகளும் நிறைவேற்றப்படும். மாணவர்கள் தங்களுடைய சம வயது குழுக்களுடன் இணைந்து செயல்படுகின்ற போது ஒருவருடைய பிழைகளை இன்னொருவர் சுட்டிக்காட்டி ஒருவர் மற்றொருவரின் சிந்தனை மேம்படுத்த உதவி செய்ய எல்லோரிடமும் உள்ள திறமைகளையும் ஆற்றல்களையும்  அறிய முடியும்.


ஒரு பிரச்சனை ஏற்படும் போது ஒரு குழுவாக இவர்கள் சேர்ந்து செயல்படும்போது ஒரு சரியான தீர்வினை சரியான வழியில் மேற்கொள்வார்கள் இச்சமயத்தில் சம வயதுகுழுக்கள் இடையில் ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரம் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தம்மை வெளிப்படையாக வெளிப்படுத்திக் கொள்வதற்குரிய ஒரு இடமாகவும் இச்சம வயது குழுக்கள் காணப்படுகின்றன.பாடசாலை செயற்பாடுகளில் இணைப்பாட விதான ஏற்பாடுகள்,விளையாட்டு செயற்பாடுகள், இல்ல விளையாட்டுப் போட்டிகள்,ஏனைய பாடம் சார்ந்த போட்டிகள் பாடசாலை மேம்பாட்டு வேலை திட்டங்கள்;இநிகழ்ச்சிகள் சுகாதார சேவைகள்,நல்லிணக்க செயற்பாடுகள் போன்றவற்றில் இச்சம வயது குழுக்களில் பங்களிப்பு பெரும் உதவியாக பெற்றுக் கொள்ள முடிகின்றது. ஒரு குழுவாக இணைத்து செயல்படுதல் மாணவர்கள் தம்முடைய பொறுப்புக்களை உணர்ந்து தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சரியாக முடிக்க வேண்டும் என்று நோக்கத்தைக் கொண்டு செயல்படுவதை காணக் கூடியதாக இருக்கும்.


உதாரணமாக, பாடசாலை எனும் போது பல்வேறு வகைப்பட்ட சமூகத்தில் இருந்து, வேறுபட்ட இன, மொழி மாணவர்கள் வருகைத்தருவதுண்டு, அங்கு அவர்கள் பல மாணவர்களுடன் சமூகமயமாக்களுக்கு உட்படுவதுண்டு. பல்வேறு கலாச்சாரங்களை கற்பதும் உண்டு. மேலும் பலதரப்பினர் இருக்கும் பாடசாலைகளில் பல்வேறான நல்லிணக்க செயற்பாடுகள், அயற்பாடசாலைகளுடனான சமூக ஒருமைப்பாட்டு நிகழ்வுகள், சமய வழிபாடுகள், சரஸ்வதி பூஜை, வெசாக் பண்டிகை, பொங்கல் விழா, ஒளிவிழா போன்றன நடைபெறும் தருணங்களில் சமவயதினர் ஒவ்வொருவரினதும் கலாச்சார பண்பாட்டு அம்சங்கள் குறித்து கற்பதோடு ஒற்றுமை. நல்லிணக்கம் போன்ற நற்பண்புகளை எடுத்துச் செல்கின்றனர். இக்கலாச்சார பண்பாட்டு அம்சங்களை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் கடமை மாணவர்களுக்கே இருப்பதனால் இவ்வாறான பாடசாலை செயற்பாடுகளில் இருந்து இவர்கள் அடுத்த தலைமுறையினருக்கு இதனை எடுத்துச் செல்லும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

சமவயது குழுவினருக்கு அன்பு, கருணை, தைரியம், நம்பிக்கை, சகநோக்கு நிலை, சுறுசுறுப்பான பங்கேற்பு, பணிவு, பரஸ்பர மரியாதை, நன்றியுணர்வு போன்ற பண்புகளை சமவயது குழுக்கள் பாடசாலை செயற்பாடுகளினூடாக பெற்றுக்கொள்கின்றனர். மாணவர்களின் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் னெளிக்கொணரவும், பொறுப்புள்ள கற்றல் ஈடுபாடுடைய, தன்னம்பிக்கை, சுய ஒழுக்கம் மற்றும் மனவுறுதியுடன் கூடிய நல்லிணக்கத்துடன் செயற்படுவோரை உருவாக்கவும், பண்புள்ள, கலாச்சார மற்றும் தார்மீக விழுமியங்களை எடுத்துச்செல்லும், நல்வழியில் நற்பண்புகளுடன் அமைந்த சிறந்த ஆளுமையுடன் கூடிய, தலைமைத்துவம் வாய்ந்த சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வகையில் சமவயது குழுக்கள் பாடசாலை செயற்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக காணப்படுகின்றனர். மேலும் பாடசாலை செயற்பாடுகளில் சமவயது குழுக்களூடாக ஆசிரியர்கள் தம்மைத்தாமே இற்றைப்படுத்திக் கொள்ளவும் முடிகிறது. நவீன தொழில்நுட்பம் தொடர்பான அறிவு, அவற்றை பயன்படுத்தும் முறைகள் என்பனவற்றை சமவயது குழுக்களிடம் ஆசிரியர்கள் பெற்றுக்கொள்ளலாம். பாடசாலை செயற்பாடுகளில் சமவயது குழுக்கள் திட்டங்களை எளிதாக்கும் அல்லது குறைந்த மதிப்பிற்கு உற்படுத்தும் சக்திவாய்ந்த சக்திகளாக இருக்கின்றது.


தேசியம், சமயம், சமூக வகுப்பு என்பனவற்றின் இயல்புகள், மூத்தவர்களின் கலாச்சாரம், ஏனைய கலாச்சாரம் பற்றிய விளக்கங்கள் இங்கு கிடைக்கின்றது. இது எதிர்கால சந்ததிக்கும் எடுத்துச்செல்லக்கூடியதாக இருக்கிறது. வெவ்வேறு சமூக வகுப்பினர், சமூக அமைப்புகள் பற்றி அறிய முடிவதோடு, சமூக ஒருமைப்பாட்டிற்கு உதவுகின்றது, அடுக்கடுக்கான குழுக்கள் கூட்டுப்பணிகளில் ஈடுபடும் தருவாயில் பலதரப்பட்ட விடயங்களை கற்க முற்படுகிறது. உதாரணமாக மாணவர்கள் தாமாக தனிப்பட்ட தலைப்பொன்றை பற்றி அறிந்துக்கொள்ளவும். பின்னர் அதனை சககுழுவுடன் பகிரவும் ஊக்குவிக்கப்படலாம். அந்த குழு அதனை இன்னுமொரு சககுழுவிடம் பகிர்ந்துக்கொள்ளும், கூட்டுப்பணிகளில் ஈடுபடும் பொழுது தமக்காக நியமிக்கப்பட்ட பணிகளை  பொறுப்பாகவும், ஒத்துழைப்புடனும் உரிய காலக்கெடுவில் முடிக்க வேண்டியதன் அவசியத்தை கற்றுக்கொள்கின்றனர்
சமவயது குழுக்களால் நன்மைகள் மட்டுமல்லாமல் பாதகமான சில விடயங்களும் பாடசாலைகளிலும் வெளியிடங்களிலும் ஏற்படுகின்றன.  என்ற போதிலும் இந்த சம வயது குழுக்களினால் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளுக்குள் எந்த வகையான நன்மைகளை நாம் பெற்றுக் கொள்ள முடியுமோ அதனை ஆசிரியர்களும் அதிபர்களும் அறிந்துகொண்டு அதன் அடிப்படையில் மாணவர்களை வழிநடத்தி மாணவர்களிடமிருந்து முறையான நன்மைகளை பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அத்தோடு இந்த சமவயது குழுக்களினுடைய நன்மைகள் மற்றும் தீமைகள் என்பன குறித்து பாடசாலையில் சில விழிப்புணர்வு கருத்தரங்குகளையும் மேற்கொள்வது மேலும் சிறப்பாக அமையும்.                                  

விஜயன் கௌசல்யா
4ம் வருடம், சிறப்பு கற்கை
கல்வி , பிள்ளை நலத்துறை,
கிழக்கு பல்கலைக்கழகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *