மழைத்துளியோடு ஒரு கவி என்ற தலைப்பில் கவிதை

கவிதைகள்

மழைத்துளியோடு ஒரு கவி

மாலை மங்கி இருள் சூழ்ந்து
வரும் நேரத்தில் இந்த பூமியை
மேகத்தின் கருமையான விழிகள் வட்டமிட ;
பலத்த காற்றுடன் போர் முரசாய்
சப்தம் எழுப்பும் இடி மின்னலிடையே ;
வானைப் பிளந்து ; என்னை முத்தமிட
மண்ணை தேடி வந்தது மழை

மழை மண்ணை தொட்ட நேரம்
மண்வாசம் என்னைத் தீண்ட ; என்
மனம் சிறகு விரித்து விண்ணை
தொட்டது. குளிரால் என்னுடம்பு சிலிர்க்க ;
வெளியே மழையாய் நீ பொழிய ;
என்னுள்ளே கவிதை அருவியாய் ஊற்றெடுக்க ;
மழையே உன்னால் செய்வதறியாது நின்றேன்.

சப்தமின்றி ஜன்னல் ஓரமாய் தனிமையில் ;
தூரலின் உரசலோடு ;இரு கைகலாலும்
மழை நீரை அள்ளியவாறு ; காதுகளில்
மழையின் ஒலி தாலாட்டாய் கேட்க ;
மழை துளியை இரசித்த படி ;
இருள் சூழ்ந்த வானைப் பார்த்தேன்.

குளிர் காற்று வீசும் மழைக்காலமிது
குடை பிடித்து தடுக்க நினைத்தேன்…
என் எண்ணத்தை தோல்வியடைய வைத்து
என் மீது வந்து படர்ந்து
இரவு நேரத்தில் என் மனதை
மயக்கி என்னையும் சேர்த்து நனைத்தாய்.

சிறுதுளி மழையெல்லாம் சங்கீதமாய் பொழிய ;
தூரல் மழை சாரலானது ; அடைமழை
அழகாய் விழ குடை பிடிக்கவும்
மனமில்லை நீ என்னை நனைக்க.

இரவு நேரம் நீண்ட மழை ;
மின்னலின் அலங்காரம் ; இருட்டினுள் நான்
என் உள்ளம் மட்டும் கவிதையுடன்
வெளிச்சத்தில் மழையின் அழகிய நினைவுகளுடன்…

Muzammil Jasri 👀♥️

இது போன்ற உங்களுடைய ஆக்கங்களையும் [ கவிதை,சிறுகதை,கதைகள்,கட்டுரை,சித்திரங்கள்,etc ] கீழ் உள்ள எங்களுடைய WhatsApp இலக்கத்துக்கு அனுப்பி வையுங்கள் எங்களுடைய இணையதளம் மற்றும் எங்களுடைய WhatsApp Group களில் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயார்

🪀 WhatsApp No : 0714814412

உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நாங்கள் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *