🌏 படிப்பினை தரும் சம்பவம் – 02

கதைகள்

போதை வஸ்த்தை விடவும் சில சமூகவலைத் தளங்கள் அதிக போதை உள்ளவை

எதையும் இழந்த பின் பரிதவிக்காமல், இழக்க முன் தடுத்து கொள்வதற்கே இப்பதிவு

நீங்களோ உங்கள் பிள்ளைகளோ 👇இதுபோன்ற சீரளிவுகளில் சிக்கி தவிக்காமலும், ஆபத்துகளில் அகப்பட்டுக் கொள்ளாமலும் அவதானத்துடனும், அறிவுடனும் தப்பித்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பதிவே இவையாகும்.

(இங்கே பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

ரிமாஸ்! பார்ப்பதற்கு வசீகரமானவன், வெளிநாட்டவர் போன்ற தோற்றமுடையவன், இப்போது அவனுக்கு வயது 26+.

அவனது குடும்பம் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தொழில் நிமித்தமாக வெளிநாடொன்றில் வசித்து வருகின்றனர். ஆசியாவில் அபிவிருத்தி அடைந்துவரும் ஒரு செல்வந்த நாடு அது.

இரவில் ஓய்வு நேரங்களில் சமூகவலைத்தளங்களில் போன் “நோண்டும்” கைங்கரியத்தில் இவனும் விதிவிலக்கல்ல. அதிலே அநாச்சாரத்தின் உச்சமாக உள்ள மியூசிக் அப்ஸ் ஒன்றின் குழுவில் இவனும் இணைந்தான்.

அது குரூப் சட், ஆண்கள், பெண்கள் என தனி ரூம், பப்ளிக் ரூம் போட்டு பாட்டு படிக்கும் இடம், ஏகப்பட்ட அநாச்சாரம் அங்கேதான் நடக்கிறது.

குறூப்பிலே ஒரு இளம் பெண்ணும் பாடல் பாடி பதிவிட்டாள்.

அவள் பெயர் #அஸ்மா
மேல்மாகாணத்தை சேர்ந்தவள், வயது 29+. வசதியானவள், வெறும் பொழுதுபோக்கிற்காக இந்த குரூப்பில் இணைந்தாள்.

அவளது பாடல் (குரல்) கேட்டு மயங்கியோரில் இந்த #ரிமாஸும் ஒருவர்.

அவளது வொயிஸ் பற்றி இவர் கொமன்ஸ் அடித்து தள்ளினார், அவளது மொபைல் நம்பரை பெற்றுக்கொள்ள படாதபாடுபட்டார்.

ரிமாஸ் வெளிநாட்டவர்தானே என்றேண்ணி அஸ்மாவும் சற்று இறங்கி போனாள். மொபைல் இலக்கத்தையும் அவனுக்கு செயார் செய்தாள்.

இப்போது உறவு பலமானது, பாசம், நேசம் பொழிந்தது, இருவரும் வெவ்வேறு நாடுகளில் வசிப்பதால் வட்சப், இமோ ஊடாக வீடியோ கோள் மூலம் அனைத்தும் நிகழ்ந்தது.

👇
இப்படியிருக்கையில் திடீரென ஒரு நாள் நமக்கு (அல்மசூறா) ஒரு அழைப்பு வந்தது.

Halo, Zeid Bro..?

Yes சொல்லுங்க..

எனக்கு ஒரு அர்ஜெண்டா உங்க உதவி தேவ, அட்வைஸும் தேவ..

மறுமுனையில் பெரும் பதட்டத்துடன் நமது வாசகி ஒருவர் பேசினார்.

சொல்லுங்க, என்ன விசயம்..?

ஏண்ட பெஸ்ட் ப்ரண்ட் ஒன்னுக்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய ப்ராப்ளம், நீங்கதான் இதுக்கு என்னசரி சொல்லோணும், எனக்கு சரீ பயமா இருக்கு… உசிரவிடபோறன்னு அவ அழுறா என்றார்..

பதட்டத்துடன் மேலும் தொடர்ந்தார் வாசகி…!

“அஸ்மா வெளிநாட்ட்ல ஈகிற ஒரு போய் கூட பழக்கம், இப்பொ கிட்டத்துல ஈந்துதான்.

சோ, அவன நம்பி அஸ்மா எல்லாமே அவனுக்கு அனுப்பீக்கிரே, அவன் அத எல்லாம் பார்த்து எஞ்ஜாய் பண்ணிட்டு இப்போ Blackmail பன்றான். இது ஹஸ்பனுக்கு தெரிஞ்சா உசிர் போயிடுமென்னு அவ அழுறா..

இதுக்கு என்ன பண்ணலாம்? குயிக்கா என்னசரி சொல்லுங்க bro please…

நடந்தது என்ன ? 👇
சமூகவலைத்தள அப்ஸ் ஒன்றில் தொடர்பாகி பின்னர் வட்சப், இமோ என்று மிக ரகசியமாக தொடர்ந்த ஒன்லைன் உறவுப்பயணம் இது.

இப்போது அவன் சிறிலாங்காவில்!
அஸ்மாவை நேரில் சந்திப்பதற்காக முன்கூட்டி எதுவுமே சொல்லாமல் கொள்ளாமல் திடீரென வந்து நின்று இவளை அவன் நிற்கும் இடத்திற்கு வருமாறு அழைக்கிறான்.

இப்படியொரு பெரிய குண்டை தூக்கிப்போட்டு இவவளவு பெரிய அதிர்ச்சியை அவன் ஏற்படுத்துவான் என்று அஸ்மா கனவிலும் நினைத்திருக்க மாட்டாள்.

இவன் வெளிநாட்டு பையன்தானே என்றெண்ணி வெறும் விளையாட்டாகவே தொடர்ந்து பழகினாள்.

ஆனால் இப்போது அவன் மிக அருகில் வந்துவிட்டான்.
அஸ்மா கதிகலங்கி நின்றாள்!

செய்வதறியாது தனது மிக நம்பிக்கைக்குரிய நண்பிக்கு இதை சொல்லி அழுதாள் உதவி கேட்டாள்.

அஸ்மாவின் நண்பி #பெரோஸா உடனே நம்மிடம் தொடர்பு கொண்டு விடயத்தை சொன்னாள்.

ரிமாஸ் இப்போது கொழும்பில் ஒரு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருக்கிறான். அங்கிருந்து கொண்டுதான் அஸ்மாவை அழைக்கிறான்.

ரிமாஸ் வெளிநாட்டவன்தானே ஒன்லைனோடு இது முடிந்து விடும், வெளியாருக்கு இது தெரியப்போவதும் இல்லை, இவன் என்னை தேடி வரப்போவதுமில்லை என்ற தைரியம்தான் அஸ்மாவை இத்தனை தூரம் கொண்டு செல்ல தூண்டியது.

மற்றப்படி அஸ்மா ஒரு அழகிய பண்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து திருமணமாகி எவ்வித குறைவும் இல்லாமல் வாழ்ந்துவரும் ஒரு இளம் தாய்.

அழகான பிள்ளைகள் 2, அன்பான, நல் ஒழுக்கமான கணவன், தனிவீடு, வாகனம் என எல்லா வசதியும் உண்டு, அவளுக்கு இங்கே எந்தவித குறைவும் இல்லை.

பொழுதுபோக்கிற்காக சமூகவலைத்தள அப்ஸ் ஒன்றில் இணைந்து பாடல் பாடி பதிவு செய்தாள், ஒவ்வொருவரும் லைக், கொமன்ஸ் செய்து உசுப்பேத்தி விடவே இன்னும் இன்னும் பாடி பாடி பதிவிட்டாள்,

இப்போது வெட்கம், கூச்சம் கொஞ்சம் கொஞ்சமாக அற்றுப்போனது.

எந்நேரமும் போனுடன் சல்லாபித்தாள், இப்போது முறையாக சமைப்பதில்லை, நேரத்திற்கு தொழுவதில்லை, தினமும் நேரம் தவறியே நேசரிக்கும் பிள்ளையை எடுத்துச்சென்றாள்.

ஆனால் கணவன் வீட்டிலிருக்கும் நேரம் காரியங்கள் சரியாக ஓடியது, அவர் பஸாருக்கு சென்றதும், அஸ்மா போனோடு மறுபடியும் சங்கமமாகிடுவாள்.

இந்நாட்களில் அவள் மெலிந்து செல்வதையும், முகத்தில் இருந்த வெண்மை(பிரகாசம்) குறைவதையும் அவதானித்தாள், அவளால் வேளைக்கு உண்ண, உறங்க முடியவில்லை காரணம் பசிக்கவில்லை.

ஆனாலும் அந்த குரூப்பில் இருந்து அவளால் வெளிவர முடியவில்லை. போன் என்பது போதைவஸ்தை விடவும் அதிக போதையானது.

👇
இப்போது இவன் கொழும்பில் நிற்கிறான். அங்கு செல்லாவிட்டால் இவளது அந்தரங்க படங்களை பேஸ்புக்கில் பதிவிடுவேன், நண்பர்களுக்கும் செயார் செய்வேன் என பயம் காட்டுகிறான்.

ஆனால் இவளோ, என் உயிரை வேண்டுமானாலும் தருகிறேன் என்னால் அங்கு வர முடியாது, என்னை அடித்தே கொன்று விடுவார்கள், என்னை மன்னித்து விடு ரிமாஸ், உனக்கு எத்தனை லட்சம் வேண்டுமானாலும் பணம் தருகிறேன், நீ சென்று விடு Please என்று போன் மூலம் அவனோடு அழுது மன்றாடினாள். கெஞ்சி கதறினாள்.

ஆனாலும் #ரிமாஸ் பின்வாங்குவதாக இல்லை!
உன்னை நான் பொழுதுபோக்கிற்காக, டைம்பாசுக்காக நேசிக்கவில்லை, பார்க்கவில்லை, பழகவில்லை.

உன்னை உயிருக்குயிராகவே நேசித்து உன்னை எனக்காக அடைந்துகொள்ளவே இவளவு தூரம் பயணித்து இங்கு வந்திருக்கிறேன் என்றான்.

என்னோடு வராவிட்டால் உன் ஒட்டுமொத்த மானத்தையும் காற்றில் பறக்கவிடுவேன், நீ வேண்டும், இப்பவே வேண்டும் வந்து விடு என்று அவனும் ஆரவாரம் செய்தான்.

அஸ்மா சொன்னாள்..
நான் சிம் மாற்றப்போகிறேன், நீ போய் விடு என்றாள்.

சிம் மாற்றினால் அடுத்த நிமிடம் உன் பேஜில் உன் படங்களை #டக் செய்து பப்ளிக் பண்ணுவேன் என்று மிரட்டினான்.

இனிமேல் இவளால் இதை தாங்கும் அளவுக்கு மனதாலோ, உடம்பாலோ வலிமை இல்லை.

ஒரே மருந்து நண்பி #பெரோஸா மட்டும்தான்!

ஹலோ பெரோ….
என்னால முடியலடி, எனக்கு இந்த உலகமே வெறுத்துடுச்சு, என்ன சொல்லியும் அவன் கேட்பதா இல்லை, நா “மெளத்தா” போறத விட எனக்கு வேற எந்த வழியும் தெர்யல. முடிஞ்சா என் பிள்ளைகளோட இரக்கமா இரு.

இவ்வளவுதான் சொன்னாள், சொல்லி விட்டு போன் கட்.

பெரோஸாவுக்கு நெஞ்சு படபடத்தது.
அடுத்த கணமே திறிவீலர் ஒன்றில் தன் உம்மாவுடன் அஸ்மாவின் வீட்டை தட்டினாள்.

வீட்டை திறக்கவில்லை, பலமாக அடித்து தட்டினாள், வீடு திறக்கவில்லை, பெரோஸா வியர்த்து கொட்டினாள்.

யாரப்.. என்னை காப்பாற்று அவளையும் காப்பாற்று.. நெஞ்சுள்ளே தவக்கல் வைத்தவளாக மேலும் பலமாக கதவை தட்டினாள்.

கதவு திறந்தது, உள்ளே அஸ்மா கட்டிலில் முகம்குப்பற கிடந்தாள்.

அஸ்மா………. என்று அலறியடித்து அவளை தூக்கி நிறுத்தினாள், அஸ்மாவுக்கு ஒன்றும் ஆகவில்லை, மயக்கத்தில் வீழ்ந்து கிடந்தாள்.

இப்போதுதான் பெரோஸாவுக்கு உயிர் வந்தது, இறவனுக்கு நன்றி சொன்னாள்.

👇👇
இதேவேளை கொழும்பில் தங்கியிருந்த ரிமாஸின் தொடர்பிலக்கம் மற்றும் விபரங்கள் சிலவற்றை நாம் உடனே பெற்றுக்கொண்டு அவருடன் நாம் தொடர்பு கொண்டோம்.

ஸலாம் சொன்னோம்!
பதில் வந்தது.

விபரத்தை சொன்னோம்!
எங்களுக்கு ஒரு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது, இது தொடர்பாக நாம சட்டநிபுணர்களுடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களங்களத்துடன் தொடர்பினை ஏற்படுத்தவுள்ளேம்.

அதற்கு முதல் உங்களுடன் சில வார்த்தைகள் பேசிக்கொள்ள விரும்புகிறோம் என்றோம்.

அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த ரிமாஸ்..
தான் உண்மைக்கு உண்மையாகவே அஸ்மாவை நேசித்ததாகவும், அதனால்தான் இங்கு தேடி வந்தததாகும் தன் விளக்கத்தை கூறினார்.

அஸ்மா திருமணமான பெண், 2 குழந்தைகளின் இளம் தாய், கணவன் மற்றும் குடும்பம் உள்ள பெண், நீங்கள் இளைஞர், இந்த விடயத்தில் வீணாக எதற்கு உங்கள் வாழ்வை இதற்குள் புகுந்து சின்னாபின்னமாக்க போகிறீர்கள்.. என்று கூறினோம்.

இல்லை அஸ்மா திருமணமாகவில்லை, அவ பொய் சொல்கிறா, அவ இளம்பெண், என்னை நேசித்து விட்டு இப்போது பொய் சொல்கிறா என்று மறுபடியும் புலம்ப தொடங்கினார்.

அஸ்மா திருமணமான குடும்ப பெண், 2 குழந்தைகளின் தாய் என்பதற்கான ஆதாரங்களையும் அவரிடம் தெளிவுபடுத்தினோம்.

அப்படியானால் என்னை எதற்கு அவ ஏமாத்தினா? ஏன் என்னுடன் பாசம் வைத்தா? அடுக்கி கொண்டே போனார்.

இப்போதுள்ள சமூகவலைத்தள குற்றவியல் சட்டங்களையும், தண்டனைகளையும் அவருக்கு ஞாபகப்படுத்தி மார்க்க அறிவுரைகள் சிலவற்றையும் கடும்தொனியில் கூறினோம்.

அவர் இப்போது தன் தவறுக்கு வருந்தினார், இதுவரைக்கும் இவ்வாறு மனதை தொடும்படியாக தனக்கு யாரும் புத்தி சொல்லவில்லை என்றார். என்னை மொத்தமாக மன்னித்து விடுங்கள், இனிமேல் இது தொடர்பில் யாரிடமும் சொல்லவோ, எதையும் செயார் செய்யவோ, பழிவாங்கவோ மாட்டேன் என்றார்.

அஸ்மா நிறைவான வசதி கொண்ட குடும்ப பெண், அவக்கு தன் கணவனிடம், குடும்பத்திடம் இருந்து கிடைக்கும் வசதிக்கும், சுகத்திற்கும் மேலாக எந்த ஒன்றையும் உங்களால் கொடுத்து விடவே முடியாது.

உங்களால் முடிந்தால் நல்லொழுக்கமுள்ள ஒரு ஏழை பெண்ணை தேடி வாழ்வு கொடுங்கள், வசதி செய்து கொடுங்கள் நீங்கள் எதை கொடுத்த போதும் அதை பெரிதாக அவள் ஏற்றுக்கொள்வாள், திருப்தி கொள்வாள், ஏனெனில் அவள் ஏழைப்பெண்.

அஸ்மா வசதி படைத்த பெண், அவள் அளவுக்கு உங்களால் எதை கொடுத்தும் அவளை திருப்தி செய்யவே முடியாதென்பதை தெளிவு படுத்தினோம்.

மேலும் மேலும் அறிவுரை சொன்னோம், முழுமையாக ஏற்றுக்கொண்டார்.

இது நிகழ்ந்து சில மாதங்களில் அவர் தன் குடும்ப பெண் ஒருவரை திருமணம் செய்ததாகவும், இப்போது மனநிறைவாக வாழ்வதாகவும், உரிய நேரத்தில் தனக்கு சிறந்த அறிவுரையை வழங்கியமைக்கும் நன்று தெரிவித்து நமக்கு மெசேஜ் செய்திருந்தார்.

இப்போதுதான் அஸ்மாவின் குடும்பமும் நிம்மதி பெருமூச்சு விட்டது.

VERY IMPORTANT 👇👇

நாட்கள் ஓடியது!

ஒரு நாள் மீண்டும் #பெரோஸாவிடமிருந்து அவசர தகவல்…!

Zeid bro.. ஒரு அர்ஜெண்ட் Call me please..

Call பண்ணினோம்!
மறுபுறம் அழுகுரல்…

Zeid bro ஒரு Biggest Sad News😰

என்ன அது ? ☹️☹️🙁

அந்த கேர்ள்..
மை ப்ரெண்ட்.. லாஸ்ட் இயர் நா உங்ககிட்ட பேசினேன். அஸ்மா.. நெனவிருக்கா…

Yessss நெனவிருக்கு…

அவ “மெளத்து” 😲😲😲

இன்னாலில்லாஹி வ இன்னா இலை ராஜிஊன்.

ஏன் என்ன நடந்த ?🤔🤔

அவ ஒரு ப்ரப்ளமும் இல்லாம ரொம்ப ஹப்பியாதான் இருந்தா, முன்னைய விட இப்போ ரொம்ம்ம்ப நல்லா இருந்தா. லாஸ்ட் வீக் என்கூட பேசினா. ஏ வீட்டுபக்கம் வரலன்னு கேட்டா. என்ன சரி ஹெல்ப் வேணும்னாலும் கோள் பண்ணு அப்டி எல்லாம் சொன்னா.

பட் நேத்து நைட் ஹாட் அட்டக் வந்தாம், ஊட்லயே மெளத். 😨
(இன்னாலில்லாஹ்)

மனசு கடுமையாக வலித்தது.

இதை 👆எழுதும்போதும் வலிக்கிறது.

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.

ஆனால் அது எப்போது வரும் எங்கே வரும், நாம் எந்நிலையில் இருக்கும் போது வரும் என்பதே முக்கியம்.

அஸ்மாவின் பாவங்களை எல்லாம் கருணையாளன் அல்லாஹ் மன்னித்து கிருபை செய்ய வேண்டும். உயர்ந்த சுவன வாழ்வை கொடுக்க வேண்டும்.

உங்கள் நண்பர்களுக்கும் இதனை செயார் செய்யுங்கள், நாம் எங்கே செல்கிறோம், எவருடன் செல்கிறோம், என்ன சொல்கிறோம், எதை செய்கிறோம் என்பதில் எல்லாம் எப்போதும் மிக கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் நாம் இருவர் நமக்கிடையே யாரும் இல்லை என்று நினைப்போம், 👇

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எந்த ஆணும் (அந்நியப்) பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான்’
அறிவிப்பவர்: புரைதா (ரலி), நூல்: திர்மிதி

ஷைத்தான் மனிதர்களை குழப்புவதற்கும் விலக்கப்பட்டவைகளில் அவர்களை வீழ்த்துவதற்கும் பெரும் ஆர்வம் கொண்டவன். இதனால்தான் அல்லாஹ் நம்மை இப்படி எச்சரிக்கிறான்:

“நம்பிக்கை கொண்டவர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். யாரேனும் அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினால் மானக்கேடானவை மற்றும் தீயவற்றைச் செய்யுமாறே ஷைத்தான் அவனை ஏவுவான்” (24:21).

மனிதனின் இரத்தம் ஓடும் நாளங்களில் எல்லாம் ஷைத்தான் ஓடுகின்றான். மனிதர்களை மானக்கேடானவற்றில் வீழ்த்துவதற்கு ஷைத்தான் கையாளும் வழிகளில் ஒன்றுதான் அந்நியப் பெண்ணுடன் ஒரு ஆண் தனித்திருப்பதாகும். இதனால் தான் இறைமார்க்கம் இப்பாதையை அடைத்து விட்டது.

நன்றி!

மற்றும் ஒரு படிப்பினை பெறும் சம்பவத்தில் உங்களை சந்திக்கும் வரை

தருவது -அல்மசூறா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *