👩🎓 பெண்கள் வேலை செய்வது பற்றிய எனது புரிதல் என்ற தலைப்பில் ஆக்கம்
சில வருடங்களுக்கு முன் எம் ஊர்களில் பெண்கள் Bio, Maths படிப்பது, மேலதிக வகுப்புகள் செல்வது எல்லாம் பெரும்பாடாக இருந்தது. பிறகு உயர்கல்வி, தொழிலுக்கு செல்வதே ஒரு சவாலாக இருந்தது. அவற்றையெல்லாம் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு வென்றாகியாகிவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
அறபு நாடுகளில் பெண்களை விண்வெளிக்கு அனுப்புகின்றார்கள், அரச, தனியார் அலுவலகங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடும் தனித்தனி பகுதியும் அளித்துள்ளார்கள்.
அதற்கும் மேலாக, UK இல் பெண்கள் தொழிலுக்கு செல்லாவிட்டால் ‘கை, கால் எல்லாம் நன்றாகத்தானே இருக்கின்றது, ஏன் செல்வதில்லை’ என்ற அளவில் இருக்கின்றது. Disabled Persons உம் தொழில் செய்வதற்கான ஏற்பாடுகள் இங்கு உள்ளது.
நாம் இன்னும் மார்க்க பத்வா தேடிக்கொண்டிருக்கின்றோம். மார்க்கத்தில் அனுமதியா என்று கேட்பது நல்ல விடயம் தான்.. ஆனால் தெளிவு வந்த பின் பெண்களை எவ்வாறு வினைத்திறனுடன் உள்வாங்குவது என்பதை கலந்தாலோசிப்பது சாலச்சிறந்தது.
எத்தனையோ பெண் ஆளுமைகளைக் கொண்ட மார்க்கம் இஸ்லாம். யுத்தத்தில் பங்கேற்றவர்கள் எம் ஸஹாபிப் பெண்கள். ஆரம்ப காலங்களில் இஸ்லாத்தை ஏற்று, போர்களில் பங்கேற்று, உஹது யுத்தத்தில் நபி (ஸல்) அவர்களை பாதுகாப்பதற்காக 12 வாள் வெட்டுக்களைப் பெற்று யுத்தம் செய்த நஸீபா பின்த் கஃப் (உம்மு அம்மாரா) (ரழி) அவர்கள் ஒரு ஆளுமை. பிற்காலங்களில் ஒரு கை வெட்டப்பட்ட நிலையிலேயே உயிர் வாழ்ந்தார்கள்.
யுத்தங்களில் காயப்பட்டவர்களுக்கு மருந்து செய்தல், அவர்களை மதீனாவிற்கு சுமந்து வருதல், யுத்தகளத்திற்கு தண்ணீரை தன் முதுகில் சுமந்து சென்று கொடுத்தல் போன்ற சேவைகளை செய்த ஸஹாபிப் பெண்கள் ஒவ்வொருவரும் ஆளுமைகள்.
இவை எவற்றையும் நபி (ஸல்) அவர்கள் தடுக்கவில்லை.
பெண்கள் தொழில் செய்வதால் எந்தப்பிரச்சனையும் இல்லை; தொழிலுக்காக வீட்டை விட்டு புறப்பட்டு செல்லுதலே இங்கு பிரச்சனை என்பதே எனது புரிதல். ஏனெனில், வீட்டிலிருந்து எத்தனையோ பேர் இடியப்பம் அவித்தல், தையல், சிறு தொழில்கள், கைத்தொழில்கள் என்று ஈடுபடுகின்றனர்; அதனை யாரும் கண்டு கொள்வதாக இல்லை. பெண்கள் சம்பாதித்தல் ஹராம் என்றால் இதுவும் ஹராம் தான். அதுவல்ல இஸ்லாம். ஹராமான விடயங்கள் அத்தனையும் அல்குர்ஆனில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த List இல் இது இல்லை.
சில ஆண்களுக்கு படிப்பது இலகு, சிலருக்கு வியாபாரம் இலகு, சிலருக்கு விவசாயம் இலகு, சிலருக்கு கைத்தொழில் இலகு. அது போல பெண்களில் சிலருக்கும் படிப்பது இலகு.. அல்லாஹ் அவர்களுக்கு கற்றலை இலகுபடுத்தியுள்ளான்..
ஆனால், அல்லாஹ் அனைவருக்கும் பொறுப்புகளை வழங்கியுள்ளான். அதனையும் திறன்பட நிறைவேற்றி மேலதிகமாக தொழில்களில் ஈடுபடுவதற்கான சக்தியும் அவர்களுக்கு இருக்குமிடத்து அதனை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை அவரவருடைய மஹ்ரமான ஆண்கள் சிந்தித்தல் சிறந்தது.
அதே நேரம், பெண்களால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டிய சில பர்ளு கிபாயாக்களான தொழில்களும் உள்ளன; அவற்றை இனங்கண்டு அதனை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை கலந்தாலோசித்தல் சமூகத்திலுள்ளவர்களின் பொறுப்பு ஆகும்.
அதே போல தொழிலுக்கு செல்லும் பெண்களுக்கும், வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் மார்க்கத்தை பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ஜும்ஆவிலும் பயான் கேட்கும் ஆண்களுக்கே இஸ்லாத்தைப் பற்றிய அறிவு குறைவாக இருக்கும் போது, அந்த வாய்ப்பும் இல்லாத பெண்களுக்கு எவ்வாறு மார்க்க விளக்கம் கிடைக்கும்.. அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தல் சமூகத்தின் பொறுப்பு.
பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்களுக்கும் பிரச்சனை; மற்றவர்களுக்கும் பிரச்சனை என்பதை நம் நாட்டைப் பொறுத்த வரை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்; ஏனென்றால் டிசைன் அப்படி… ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுப் பெண்களின் தேவைகளை நிறைவேற்றுவதுவும் ஆண்களின் நிர்வாகம் தான்.
“(ஆண், பெண் இருபாலாரில்) ஆண் பாலாரை(ப் பெண்பாலார் மீது) அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருப்பதுடன் (ஆண்பாலார்) தங்கள் பொருள்களை(ப் பெண் பாலாருக்கு)ச் செலவு செய்வதனாலும் ஆண்கள்தான் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்களாக இருக்கின்றனர்.”
(அல்குர்ஆன்: 4:34)
அல்லாஹ் ஹலாலாக்கிய எதையும் எம்மால் ஹராமாக்க முடியாது. அவற்றை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை சிந்தித்தலே சிறந்தது. நாம் செய்யவில்லை என்பதற்காக ஹராமாகிவிடாது.
- Zulfa Zubair –
Facebook மூலம்….

இது போன்ற உங்களுடைய ஆக்கங்களையும் [ கவிதை,சிறுகதை,கதைகள்,கட்டுரை,சித்திரங்கள்,etc ] கீழ் உள்ள எங்களுடைய WhatsApp இலக்கத்துக்கு அனுப்பி வையுங்கள் எங்களுடைய இணையதளம் மற்றும் எங்களுடைய WhatsApp Group களில் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயார். 🪀 WhatsApp No : 0714814412
உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நாங்கள் தயார்.
மேலும் இதுபோன்ற விடயங்களை தெரிந்து கொள்ள இப்போதே எங்களுடைய WHATSAPP GROUP யில் இணைந்து கொள்ளுங்கள்.