📌 இலங்கையில் தேசிய அடையாள அட்டை உருவான கதை

பொதுஅறிவு

✍️ இலங்கையில் 1968 ஜுன் 22 ஆம் ஆட்களைப் பதிவுசெய்யும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

✍️இதன்படி 1971 இல் அதற்கான ஒழுங்குவிதிகள் நிறுவப்பட்டு, அனுமதிக்கப்பட்ட சட்டமானது. 1971 ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது.

✍️1971 ஒக்டோபர் 01 ஆம் திகதி ஆட்பதிவு திணைக்களம் நிறுவப்பட்டது.

✍️1972 செப்டம்பர் 14 ஆம் திகதியே ஆட்பதிவு திணைக்களத்தால் முதலாவது தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்பட்டது.

✍️அப்போது பிரதமராக இருந்த ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கவுக்கே முதலாவது அடையாள அட்டை கையளிக்கப்பட்டது.

பின்னணி…… 👇🏻

✍️1964 ஒக்டோபர் 30 ஆம் திகதியே ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

✍️இலங்கையின் பிரதமராக இருந்த ஶ்ரீமாவும், இந்தியாவின் பிரதமராக பதவிவகித்த லால் பகதூர் சாஸ்திரியும் கைச்சாத்திட்டனர்.

✍️இந்த உடன்படிக்கையின் பிரகாரம் 5 இலட்சத்து 25 ஆயிரம் மலையகத் தமிழர்களை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் 3 இலட்சம் 25 ஆயிரம் பேருக்கு 1964 இற்கும் 79 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிக்குள் இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

எனினும், இவ்வுடன்படிக்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்நிலையிலேயே இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களை பதிவுசெய்து – அடையாளப்படுத்தும் நோக்கில் அடையாள அட்டையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இலங்கைக்கு இந்திய வம்சாவளி மக்கள் சட்டவிரோதமாக வருவதை தடுப்பதே இதன் நோக்கமாகும்.

தொகுப்பு – ஆர்.சனத்

தகவல்மூலம் – ஆட்பதிவு திணைக்களம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *