🩺 மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா?
மருத்துவர் முதலில் நமது நாக்கை பார்ப்பது ஏன் தெரியுமா? அதன்பின்னால் உள்ள விளக்கம் இதோ...
-------------------------------
அதாவது உங்கள் நாக்கு இருக்கும் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை என்பதை கணிக்க முடியுமாம்.
#சிவப்பு நிற நாக்கு...👅
உங்கள் நாக்கு அதிக சிவப்பு நிறத்தில் இருந்தால் அது தொற்று நோய் மற்றும் அலர்ஜி ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறது.
#மஞ்சள் நிற நாக்கு...👅
நாக்கு மஞ்சள் நிறத்தில் இருந்தால் அது வயிறு அல்லது கல்லீரல் தொடர்பான நோய் உள்ளதற்கான அறிகுறியாம்.
#பிங்க் நிற நாக்கு...👅
உங்கள் நாக்கு பிங்க் நிறத்தில் இருந்தால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. உங்கள் உடல் ஆரோக்கியமாக உள்ளதாக அர்த்தம்.
#இளம் சிவப்பு நிறமுள்ள நாக்கு...👅
இளம் சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால், அது இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய் உள்ளதை குறிக்கிறது.
#வெள்ளை நிற நாக்கு...👅
ஒருவேளை உங்கள் நாக்கு வெளிர் வெள்ளை நிறத்தில் இருந்தால் உங்கள் உடலுக்கு நீர் சத்து குறைவாக உள்ளது என்றும் நுண்ணிய கிருமிகளின் தொற்று மற்றும் காய்ச்சல் இருப்பதையும் குறிக்கிறது.
#காபி நிறமுள்ள நாக்கு.... 👅
நாக்கின் நிறம் காபி நிறத்தில் இருந்தால், ஒருவேளை அது நுரையீரல் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது.
#சிமெண்ட நிறமுள்ள நாக்கு...😛
உங்க நாக்கு சிமெண்ட் நிறத்தில் இருந்தால், அது செரிமானம் மற்றும் மூலநோய் உங்களுக்கு உள்ளது என்பதை குறிக்கிறது.
#நீலம் நிறமுள்ள நாக்கு... 👅
நாக்கின் நிறம் நீலமாக இருந்தால், அவர்களுக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது என்பதை குறிக்கிறது. சிறிய சிறிய குமிழ்கள் உள்ள நாக்கு நீர்ழிவு பிரச்சினைகள் இருக்கிறது என்று அர்த்தம்
-------------------------------
ABD Express News
Discussion (2)
எளிமையான நடையில் ஆழமான கருத்துக்கள். வாழ்த்துக்கள்!
மிக அருமையான விளக்கம். மேலும் இது போன்ற கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன்.