நீங்களோ உங்கள் பிள்ளைகளோ 👇இதுபோன்ற சீரளிவுகளில் சிக்கி தவிக்காமலும், ஆபத்துகளில் அகப்பட்டுக் கொள்ளாமலும் அவதானத்துடனும், அறிவுடனும் தப்பித்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை பதிவே இவையாகும்.
(இங்கே பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
ரிஸ்கா! வயது 23, A/L வரை படித்து வீட்டோடு இருக்கும் பக்குவமான இளம்பெண்.
பெற்றோர் நன்றாக படித்தவர்கள், தந்தையும் சமூகத்தில் நற்பெயர் கொண்டவர்.
தம் மகளுக்காக அயலூரில் வசிக்கும் நல்ல பண்புள்ள வர்த்தகர் ஒருவரை பெற்றோர் நிச்சயம் செய்து வைத்தனர், ரிஸ்காவும் திருமணத்திற்கு சம்மதித்து இருவரும் நேரில் மற்றும் போன் மூலமாகவும் பேசிக்கொண்டனர்.
வீட்டு வேலைகள் முடிந்ததும் இன்னும் ஓரிரு வருடத்திற்குள் ரிஸ்காவுக்கு திருமணம் செய்து வைப்பதென நிச்சயிக்கப்பட்டது.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்னர் ரிஸ்கா புது போனும் கையுமாகவே எந்நேரமும் இருந்தாள், இரவில் நள்ளிரவு தாண்டிய பின்னரே உறங்க சென்றாள்.
பேசிய வைத்த மணமகனுடன்தானே மகள் போன் பேசுகிறாள், இரவில் விழித்திருக்கிறாள் என்று பெரிதாக இவளை வீட்டில் எவரும் கண்டு கொள்ளவில்லை.
வீட்டில் தனி அறை வசதி!
திருமணமான சகோதரியும் தன் பிள்ளையுடன் இங்கேதான் வசிக்கிறாள், அவளது கணவனும் வெளிநாட்டில்.
நாட்கள் நகர்ந்தன..
ரிஸ்காவின் நடத்தைகளில் மாற்றம்!
வேளைக்கு உண்பதில்லை, உறங்குவதில்லை, முன்னர் போன்று தொழுகை, ஓதல் எதுவுமில்லை. நண்பிகளுடனும் தொடர்புகள் இல்லை.
ரிஸ்காவின் மாறுதல் பற்றி உம்மா மூத்த மகளிடம் விசாரித்தார்.
மேட்டர் ஓவர்.
சில நாட்களில் அவளால் உண்ணவே முடியவில்லை.
வாந்தி! வாந்தி! வாந்தி!
பெற்றோரை தூக்கிவாரிப்போட்டது.
ரிஸ்கா 3 மாத கர்ப்பிணி!
இப்போது அந்த வீட்டில் யாருக்குமே தூக்கமில்லை, என்ன செய்வது? எங்கு செல்வது? யாரிடம் சொல்வது?
வெளியில் வாய் திறக்கவோ, தலைகாட்டவோ உள்ளம் படபடத்தது.
தந்தைக்கு ப்ரெஸ்ஸர் கூடியது, தாய்க்கும் மூச்சு இழுத்து வாங்கியது.
எதுவானாலும் பரவாயில்லை திருமணத்தை அவசர அவசரமாக முடித்து வைக்க தந்தை தீர்மானித்தார்.
செய்வதறியாமல் உம்மாவும் தலையசைத்து மூத்த மகளும் ஒப்புதல் கொடுத்தாள்.
திருமணத்திற்கு மகள் “எவரெடி” ஆனால் மணமகன் தயாரில்லை? மணமகன் யார்?
இப்போது பெற்றோருக்கு தலை சுற்றியது.
மகளின் வயிற்றில் வளரும் கருவுக்கு சொந்தக்காரன் பேசிவைத்த மணமகன் இல்லை.
வெளியூரை சேர்ந்த “பேஸ்புக்” நட்பு
இப்போது வீடே சுற்றுவது போல் இருந்தது எல்லோருக்கும்.
நடந்தது என்ன ?👇👇
பேசிவைத்த மணமகன் பஸாரில் வர்த்தகம் செய்பவர்.
இரவில் 12 மணியின் பின்னர்தான் எல்லா அலுவல்களையும் முடித்துக்கொண்டு ஒன்லைன் வருவார். ரிஸ்காவுடன் பேசுவார்.
தினமும் அவரின் வருகைக்காக ராத்திரி பொழுதுகளில் போனோடு ஒன்லைனில் காத்திருந்தாள் ரிஸ்கா…
நீண்ட நேரம் காத்திருக்க வேண்டுமென்பதால் போறடிக்காமல் இருப்பதற்கு இடைக்கிடையே பேஸ்புக், டிக்டொக் என்று அங்கும் இங்கும் சற்று உலாவ தொடங்கினாள்.
அப்போதுதான் பேஸ்புக்கில் ஆஷிக் என்பவனின் ப்ரொபைல் பார்த்தாள். அழகாக தெரிந்தான்.
சும்மா டைம் பாசுக்காக மெசெஞ்சரில் சென்று அவனுக்கு ஒரு சட் செய்தாள்.
Hi Ashik..
Hi Rizk…
Baby சுகமா?
யெஸ்ஸ்ஸ்… சுகம்ம்ம்ம்ம்
நீங்க?
மீ டூ பேபி..😍
Ur from ?
I’m from Ka….
Neenga ?
நா T…
பேச்சு தொடர்ந்தது.
மெசெஞ்சரில் இருந்து நேராக #வட்சப்புக்கு தாவியது தொடர்பு.
பேசி வைத்த மணமகனுடன் இப்போது இடைவெளி அதிகரித்தது.
பேஸ்புக் நட்புறவு பலமானது, ஆஷிக் பார்ப்பதற்கு வெள்ளையும், சுள்ளையுமாக இருந்தான், கொஞ்சம் வசதியான குடும்பம்.
அவனது நிறம், மற்றும் அவனிடம் இருப்பதாக காண்பிக்கும் பணத்திற்கும் இவள் மனதை மொத்தமாக பறிகொடுத்துவிட்டாள்.
ரிஸ்காவின் பலவீனத்தை ஓரிரு நாட்களிலேயே அறிந்துகொண்ட ஆஷிக் அவள் மீதான காய்நகர்த்தலை கச்சிதமாக செய்தான். (இவள் ஒரு தோது, மிக இலகுவாக அடைந்து கொள்ளலாமென தீர்மானித்தான்)
தெரிந்து கொள்ளுங்கள்👇
தூய்மை எண்ணமில்லாத எந்தவொரு ஆணினதும் இறுதி இலக்கு ஒரு பெண்ணை (முழுமையாக) பார்த்து விடுவதுதான். அதோடு கைகழுவி விடுவான்.
ஆனால் ஒரு பெண்ணின் இறுதி இலக்கு ஒரு ஆணை மொத்தமாக (சொந்தமாக) அவள் அடைந்து கொள்ளவேண்டும் அல்லது அவனிடம் இருந்து எதையாவது அடைந்துகொள்ள வேண்டுமென்பதுதான்.
ரிஸ்காவின் பின்னணியை ஆராய்ந்தான் ஆஷிக்.
கல்வி கற்ற குடும்பம், சாந்தமானது, அடிதடி சண்டை என்று முரண்டு பிடிக்க அங்கு யாரும் இல்லை.
இப்போது அன்பு காட்டி அவளை அங்கம் அங்கமாக பார்க்க விரும்பினான். எடுத்தவாக்கில் அவள் மறுத்தாள்.
அவள் நம்பும் படியாக கழுத்தில் கத்தி வைத்து கண்ணாடி முன்னால் நின்று அவளுக்கு செல்பி அனுப்பினான். நான் கேட்டதை அனுப்பவில்லை என்றால் என் கழுத்தை இப்போதே அறுத்துக்கொள்வேன் என்று அவளை பயம்காட்டி மிரட்டினான்.
ரிஸ்காவுக்கு இதுபோன்ற முன் அனுபவம் எதுவும் இல்லாததால் அவன் சொன்ன அத்தனையையும் அருள்வாக்காக இவள் நம்பினாள்.
முகம் அனுப்பினாள், கை, கால்கள் அனுப்பினாள்….
இவனும் சூப்பர், செம்ம்ம்ம, வாவ், என்று உசுப்பேத்தினான்.
அவள் நம்பினாள், இன்னும் இன்னும் அனுப்பினாள், போதாக்குறைக்கு தினமும் தூங்க முதல் முற்றும் கழைந்த வீடியோ கோள்……..
அவன் கேட்கும் போதேல்லாம், அவன் கேட்பதை எல்லாம் இவள் அனுப்பினாள்.
தவறினால், தாமத்தித்தால் நெருப்பாய் மிரட்டுவான், உன் ராத்தாக்கு அனுப்புவேன், மச்சானுக்கு அனுப்புவேன், என் நண்பனுக்கு காட்டுவேன், பேஸ்புக்கில் போடுவேன் என்று…
இப்போது ஒட்டு மொத்த தேகத்தையும் ஆஷிக்கின் கண்களுக்கும், கமறாவுக்கும் இவள் காண்பித்து விட்டாள்.
இப்போது இவனது தாகம் தீர்ந்தது, ஆனாலும் இன்னும் ஒரு ஆசை!
அவளை நேரில் சென்று பார்த்துவிட வேண்டும்.
நண்பர்களுடன் திட்டமிட்டு அவளுக்கும் அறிவித்து விட்டு சுமார் 145 km தூரம் பயணம் செய்து அவளது ஊரில் உள்ள #KFC உணவகத்தில் அவளை சந்தித்தான்.
இருவரும் உணவுண்டு மகிழ்ந்தனர், விதம் விதமாக போட்டோஸ் எடுத்துக்கொண்டனர்.
(ஜோடியாக விதம் விதமாக எடுக்கும் போடோக்கள் அவளது ஆதாரமாக விளங்கும், அவளை விட்டு அவன் பிரியாமல் தடுக்கும் என அவளது நண்பி ஏற்கன்வே இவளுக்கு ஆலோசனை கூறியிருந்தாள்)
மாலையாகியது…
பிரிந்து செல்ல இருவருக்கும் மனம் விடவில்லை, பேஸ்கவருடன், மாஸ்க்கும் அணிந்திருந்தாள் அதனால் அவளை இன்னார்தான் என்று ஊரவர்களால் இலகுவில் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
பார்க் சென்றனர், பீச் சென்றனர், ஆனாலும் பிரிந்து செல்ல இருவருக்கும் பிரியமில்லை.
காதோடு காது வைத்து லேசாக கேட்டான்..
ரிஸி….
எங்காவது ரூமெடுத்து கொஞ்சநேரம் உன் மடியில் தூங்கவா என்றான்.
கண்களால் மட்டும் பதிலளித்தாள். (இவளது நண்பி சொன்ன வார்த்தைகள் இப்போது செயற்பட தொடங்கியது)
இவளது ஒட்டுமொத்த பலவீனத்தையும் பாசத்தைதும் தெள்ளத்தெளிவாக அறிந்துகொண்ட ஆஷிக் அன்றே இவளை அடைந்துவிட திட்டமிட்டான்.
ரெஸ்டூரண்ட் ஒன்றில் அறை கிடைத்தது, காரியமும் முடிந்தது.
இப்போது அவனது ஒட்டுமொத்த தாகமும் தீர்ந்தது. அவன் பயமின்றி விடைபெற்றான்.
ரிஸ்கா.. உள்ளார ஒரு வித மகிழ்ச்சியுடனும், மாலையாகிவிட்டதென்ற படபடப்புமாய் வீடு சென்றாள்.
மகிழ்ச்சிக்கு காரணம் நண்பியின் (நாசமான)கூற்று!
(நீ அவனை தனியாக சந்தித்தால் சும்மா அனுப்பி விடாதே, ஆதாரத்தை வயிற்றிலே வாங்கிக்கொள்” என்பதுதான்)
ஆஷிக் இனிமேல் எனக்கே சொந்தம், ஏனெனில் அவனது கரு இப்போது என் வயிற்றில்.
இதை சாட்சியாக வைத்தே அவனை நண்பி சொன்னதுபோல் மிக இலகுவாக அடைந்து கொள்ளலாமென்ற பெரும் கனவுடன் தூங்க சென்றாள்.
தவறான காரியமொன்றை செய்துவிட்டோமே என்ற அச்ச உணர்வோ, பயமோ அவள் முகத்தில் கடுகளவும் தென்படவில்லை. நண்பி சொன்னதுபோல் மிகப்பெரிய சாதனை ஒன்றை சாதித்து விட்டதாகவே அவள் கருதினாள்.
இந்நிலையில் நடந்தவற்றை தன் சகோதரியிடம் மாத்திரம் கூறி வைத்தாள். சகோதரிக்கும் சில வேளைகளில் இவளது உதவி அவசிய தேவை என்பதால் அவளும் இதை மறைத்தே வைத்தாள்.
நாளடைவில் ரிஸ்காவின் முகத்தில், நடை, உடை பாவனையில் பெரும் மாற்றத்தை கண்ட தாய் இது தொடர்பில் தன் மூத்த மகளிடம் ரகசியமாக விசாரிக்க தொடங்கினார்.
எடுத்தவாக்கில் எந்த உண்மைகளையும் தாயிடம் கூறுவதற்கு மூத்த மகள் அஞ்சினாள்.
எனினும் செய்ய வழியின்றி மெதுமெதுவாக உண்மையை போட்டுடைத்தாள்.
இப்போதுதான் எல்லோரையும் தூக்கிவாரிப் போட்டது ரிஸ்காவின் மாறுதல்…
இதனால்தான் எது நடந்தாலும் பரவாயில்லை சத்தமில்லாமல் ஏற்கனவே பேசிவைத்த குடும்ப உறவுகொண்ட மணமகனுக்கே திருமணம் செய்து வைக்க தந்தை கடினமான உத்தரவு பிறப்பித்தார்.
ஒரு அப்பாவியின் தலையில் இத்தனை ஊத்தைகளைதும் அள்ளிக்கொட்ட அவர் அப்பாவித்தனமாக ஆசைப்பட்டார்.
நிகாஹ் நடந்தது.
முதல் நாள் இரவே ரிஸ்கா மணமகனிடம் உண்மையை சொன்னாள்.
என்னை மன்னித்து விடுங்கள், என் வயிற்றில் வேறொரு இளைஞனின் கரு வளர்கிறது. நீங்கள் வேற யாரை சரி முடித்து சந்தோசமாக வாழுங்கள் என்றாள்.
எதுவும் அறிந்திராத அந்த அப்பாவி மணமகன் மறுநாளே தம் வீட்டாரிடம் சொல்லி காதியாரிடம் சென்று தலாக் கோரினார்.
தலாக் செய்தனர்.
தாமதியாமல் அவர் மறுமணம் செய்து கொண்டார்.
இதன்பின்னர் ஊர் முழுவதும் ரிஸ்காவின் சம்பவம் தீயாய் பரவியது.
சம்வத்தை சாதனையாக்க இப்போது பேஸ்புக் நண்பனை தொடர்பு கொண்டார்கள்.
“பிரத்திச்சாரயக் நொமத”
நீங்கள் அழைத்த இலக்கம் இப்போது பாவனையில் இல்லை மீண்டும் முயற்சிக்கவும்.
ஆஷிக்கின் போன் சுவிட்ச் ஓப்!!!
இரு ஊரிலும் உள்ள பள்ளிவாசலுக்கு ஆஷிக் தொடர்பாக முறைப்பாடு செய்தார்கள்.
பதில் எதுவும் இல்லை, பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தார்கள். அங்கும் முறையான நடவடிக்கை எதனையும் காணவில்லை.
அரசியலை நாடினார்கள், அங்கும் அவனுக்கு சார்பாகவே முடிவுகள் வந்தன.
பள்ளிவாசல் மற்றும் சிலரின் ஒத்தாசையுடன் ஆஷிக் பற்றி தேடி வலை விரித்தார்கள். அவன் அகப்படவே இல்லை.
பின்னர்தான் புரிந்தது ஆஷிக்.. ஏற்கனவே 7, 8 பெண் பிள்ளைகளை இதுபோன்று சீரளித்து அரசியல் பின்புலத்தாலும், பணபலத்தாலும், தப்பித்துக் கொண்டிருக்கிறான் என்று..
ஆஷிக்கின் தந்தையும் மிக கர்வமாக கடுகடுப்பாக பணபலம் மற்றும் அரசியல் பின்புலத்துடன் இவர்களுக்கு எச்சரித்தார்.
இனி நோ சாண்ஸ்!
“அபோசன் செய்து விட்டு நடந்ததை எல்லாம் ஒரு கெட்ட கனவாக மறந்து விட்டு புது வாழ்க்கை வாழப்பார்”
என்று ரிஸ்காவுக்கு அவளது குடும்பமும், ஊருலகமும் உபதேசம் சொன்னது.
ஆனாள் அவள் மசியவில்லை! இப்போது 4 மாதமாகிறது!
தினமும் பள்ளிவாசல், பொலிஸ் நிலையம், அரசியல் வாதி, ஆஸ்பத்திரி, லோயர் என்று அங்கும் இங்கும் அலைந்து திரிந்து அவளாலும் முடியவில்லை, பெற்றோராலும் முடியவில்லை.
ஆனாலும் ரிஸ்கா மனம் தளரவில்லை, அவன் என்மீது உயிராக இருந்தான் என்னை தேடி வராவிட்டாலும் தன் பிள்ளையை தேடி எப்போதாவது வருவான், வரும் வரைக்கும் நான் இப்படியே காத்திருப்பேன் என்று பிடிவாதமாக இருந்தாள்.
இறுதியா அவனை தேடி தருமாறு நம்மிடம் ரிஸ்கா தரப்பு தொடர்பு கொண்டது.
அவன் பற்றி நாம் தீவிரமாக ஆராய்ந்தோம்!
தந்தை பெரிய வர்த்தகர், அரசியல் பின்பலமும் கொண்டவர், ஆஷிக் செல்லப்பிள்ளை.
தந்தையின் பணத்தை கரைக்க நண்பர்களோடு ஊர் சுற்றும் வேலையற்ற படு(கெட்ட)தாரி அவன்.
கடந்த இரு வருடமாக ஐஸுக்கு அடிமையாகிவிட்ட போதைப்பொருள் பாவனையாளி.
தினமும் ஐஸ் அடிக்க வேண்டும்.
ஐஸ் அடித்தால் அதன் பின் யாரேனும் ஒரு புது பெண்ணுடன் காதல் தொடர்பு கொள்வது இவனது வழக்கமாம்.
இந்த வரிசையில் ரிஸ்கா 8 வது அல்லது 9 வது அப்பாவி பெண்.
அவன் ஐஸ் காரன் என்று அவனது போட்டோ பார்த்து நாம் அங்குலம் அங்குலமாக விளக்கப்படுத்தி காட்டினோம்.
ரிஸ்கா இதை நம்ப மறுத்தாள். அவனுக்கு கெட்ட பழக்கம் எதுவுமில்லை என்னை தேடி வருவான் என்றாள்.
அவனது வரலாற்றை விலாவாரியாக சொன்னபோதும் ரிஸ்கா நம்பவில்லை.
ஆஷிக்குடைய ஊர் வாசிகளிடம் பெற்ற தகவலையும் ரிஸ்கா தரப்பிடம் கூறினோம், அவன் ஐஸ் காரன் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள்.
இப்போது அவளுக்கு பேசி முடித்த மணமகனும் இல்லை, பேஸ்புக்கில் கண்டெடுத்த ஐஸ்மகனும் இல்லை.
அரசனை நம்பி புரிசனை கைவிட்ட சரித்திரமாக சரிந்து கிடக்கிறது ரிஸ்காவின் வாழ்க்கை!
இப்போது அவள் ஒரு வயது குழந்தையின் தாய்!
ஆனால் குழந்தைக்கு இன்னும் பதிவு…?? 😓
NOTE:
போரடிக்கிறது என்று வெறும் விளையாட்டுக்காக அல்லது டைம் பாசுக்காக பேஸ்புக்கில் செய்த காரியம் ஒட்டு மொத்த வாழ்வையும் சீரளித்து, சின்னாபின்னமாக்கி முழு குடும்பத்தின் மானத்தையும், ஊரின் மானத்தையும் காற்றோடு கலக்க செய்து மாசுபடுத்தியுள்ளது.
அறிந்து கொள்ளுங்கள்:👇👇👇
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றற்கள்!
மூன்று விடயங்கள் இருக்கின்றன, அவற்றை தள்ளிப்போடவோ தாமதிக்கவோ கண்டிப்பாக கூடாது.
1-தொழுகை அதற்குரிய நேரம் வந்ததும் தொழுதிட வேண்டும்.
2-ஜனாஸா அதனை தாமதிக்காமல் அடக்கம் செய்ய வேண்டும்.
3-திருமணமாகாத பெண்ணுக்கு பொருத்தம் நிச்சயிக்கப்பட்டு விட்டால் தாமதியாமல் நிகாஹ் செய்து கொடுக்க வேண்டும்.
-திர்மிதி
மற்றும் ஒரு பரிதாப சம்பவத்தை அடுத்த பதிவில் எதிர்பாருங்கள்!
-தருவது அல்மசூறா
20.07.2023
