காத்தான்குடியான் ஜனாதிபதியானால்…
பொருட்கள் தட்டுப்பாடு குறையும். லங்கால உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். ஏற்றுமதி பொருளாதாரம் உயரும். பெற்றோள், டீசல் உள்நாட்டுலேயே உற்பத்தியாகும். உற்பத்தில சீனாவ பின்னுக்கு தள்ளிட்டு லங்கா முன்னுக்கு நிக்கிம்.
உலகம் பூரா லங்கா ஷொப்பும் சாமானும் இருக்கும். மேடின் காத்தான்குடி நம்பர் வன் ப்ரான்ட் ஆகும். கட்டாய ஹெல்மட் நீக்கப்படும். அக்ஸா பள்ளிக்கி விஷேட மெட்ரோ சேவை ஆரம்பமாகும்.
புத்தளத்தான் ஜனாதிபதியானால்…
ஜனாதிபதியாகி அடுத்த நாள் கட்டார்ல லேன்ட் குறோசர்ல ஜனாதிபதிட போட்டோவ ஒட்டிக்கி சுத்துவாங்க. நாட்டுல தேங்காட மரக்கறிட வில குறையும். நிறைய களப்புகள் கடலாக மாறி மீன் பிடி துறை வளர்ச்சியடையும்.
கரண்டுக்கும் உப்புக்கும் பஞ்சம் இருக்காது. எலுவாங்குளத்துக்கு விமான சேவை ஆரம்பமாகும். ஆனா என்ன ஜனாதிபதி அறிக்க விடுகுற நேரம்தான் அறிக்கைய ஒண்டுக்கு நாலு தரம் ப்ரூப் பாக்க வேண்டி வரும்.
அக்கரப்பத்தான் ஜனாதிபதியானால்…
எங்க போய் எதப் பேசியாவது நாட்ட டெவளப் பண்ண பாப்பான். ஐநா இல்ல ஜெனிவா கூட ஜனாதிபதிகிட்ட கேள்வி கேட்டு தொங்கல் எடுக்க ஏலாம போகும் எல்லாத்துக்கும் பதில் இருக்கும். கடன் கொடுத்த நாடு மட்டும் இல்ல ஐ.எம்.எப் கூட கதை தாங்கேலாம கடன தேவல்ல எண்டு சொல்லிடும். QS க்கு டிக்கிர அந்தஸ்து வழங்கப்படும்.
சம்மாந்துறையான் ஜனாதிபதியானால்…
விவசாயம் கால்நடை உற்பத்தி அதிகரிக்கும். தரிசு நிலம் இருக்காது எல்லா நிலமும் வயல் நிலமாக மாறும். அரிசிட, இறச்சிட வில குறையும். நாடாளுமன்றம் நல்ல ஜோக்கும் பகடியுமாக கலகலப்பா இருக்கும். அதால பார்ளிமெண்டுக்கு போகாம யாரும் கட்டடிக்க மாட்டாங்க.
அக்குறனையான் ஜனாதிபதியானால்…
லங்கா ஒரு குட்டி ஜப்பானாக மாறும். ஜப்பானுக்கு போக வீசா தேவப்படாது. நிறைய வாகனம் இறக்குமதியாகும். வாகன வரி குறஞ்சி அல்டோ கார் அம்பது ஆயிரத்துக்கு வந்து நிக்கிம். புஸ் பைசிகள் ஆயிரம் ரூவாக்கு மூணுனு விக்கப்படும். ரோட்டுல குப்பை இருக்காது… ஆனா என்ன அந்த ஆத்த தோண்டி அகலமாக்கி வெள்ளத்த நிப்பாட்டமாட்டாரு.
பேருவளையான் ஜனாதிபதியானால்…
மடகஸ்கார் போறது மாமி ஊட்டுக்கு போறமாதிரி இருக்கும். நாடு பூரா பத்தையாத்தான் இருக்கும். நாட்டுல செல்வம் பெருகும். வெள்ள சாறனும் அப்புள் தொப்பியும் தேசிய உடையாகும். நாட்டுல சாப்பாட்டுக்கு பஞ்சமிருக்காது கந்தூரி சாப்பாட்டுலேயே காலத்த கடத்தேலும்.
கிண்ணியாகாரன் ஜனாதிபதியானால்…
திருகோணமலை (சின்ன லண்டன்) தலை நகராகும். பேக்கரி ஐட்டம், சோட்டீஸ்ட் ஐட்டம், இறைச்சி எல்லாத்துடையும் விலை குறையும். மீன்பிடி அதிகரிச்சி கருவாட்டு ஏற்றுமதியில் லங்கா நம்பர் வன்னுக்கு வரும். மட்டி தேசிய உணவாகும். மாபிள் பீச் பூரா மாபிள் இருக்கும். சுற்றுலாத்துறை கொடிகட்டும். ஜனாதிபதியின் றின்ங் சின்ங் சன்ங் பேச்சால் கவரப்பட்டு சீனா கடன திரும்ப கேக்காது.
மாவனெல்ல ஹெம்மாதகமகாரன் ஜனாதிபதியானால்…
சுற்றுலாத்துறை விருத்தியடையும். உத்மன் கந்தைல இருந்து அம்புலுவாவைக்கி சிப்லைன் போடப்படும். வாசனைப் பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி அதிகரிக்கும். மாறாவ பாலம் கேபிள் பாலமாக மாறும். ஆனா என்ன அங்க பொம்புளயள் மட்டும்தான் ஜனாதிபதியா வருவாங்க
ஏறாவூரான் ஜனாதிபதியானால்…
ஜனாதிபதியானதுமே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இருபது ரூவா தாள் தடைசெய்யப்படும். எல்லா ஊருலயும் பொதுச் சந்தை, வர்த்தக சங்கங்கள் உருவாக்கப்படும். உள்நாட்டு உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப்படுவர். திறந்த பொருளாதாரக் கொள்கை இல்லாமலாக்கப்பட்டு வெளிநாட்டவருக்கு உள்நாட்டுல கடை போட அனுமதி மறுக்கப்படும்
நம்மட ஊரான் ஜனாதிபதியானால்…
ச்சே ச்சே… வாய்ப்பில்ல அப்புடி யாரையும் ஜனாதிபதியாக விடமாட்டானுகள்.
எல்லாம் சும்மா சிரிக்கத்தான் யாரும் சீரியசாக வேணாம்.
Sajeer Muhaideen
03/04/2023
super super
thankyou