சமூகமயமாதல் செயன்முறையில் கல்வி பெறும் முக்கியத்துவம்(சமுதாயத்தில் கல்வியின் முக்கியத்துவம்)
சமூகம் ஒரு பிறப்பு இறப்பு மூலமாக மரபணுக்களில் இருந்து அவர்கள் வாழும் சமூகத்தின் நெறிகள், பழக்கவழக்கங்கள், மதிப்புக்கள், பாத்திரங்களை என்பவற்றை கற்பிகின்றது இன்றைய நவீனச் சூழலில் சமூகத்தின் அசைவியக்கத்தை தூண்டும் முக்கிய காரணிகளில் தனிமனிதர்களது செயற்பாடும் ஒன்றாகும். தனிமனிதனும் சமூகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக நின்று அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார மாற்றங்களைத் தூண்டும் நிகழ்வு வரவேற்கத்தக்கது. தனிமனிதர்களின் நடத்தை, செயற்படும் விதம், வெளிப்படுத்தும் திறமை என்பவை சமூக அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும். தனிமனிதர்களின் விருத்தியும், முன்னேற்றமும், மாற்றமும், கொள்கைகளும், அறிவியலும் பிரதிபலிக்கும் இடம் சமூகம் ஆகும். எனவேதான் மனிதர்கள் தனித்து வாழ்வதை வீட்டு சமூகத்தில் நிலைத்து வாழத் தலைப்பட்டுள்ளனர்.
- பனை மரத்தின் பயன்கள்
- நான் விரும்பும் பெரியார் திருவள்ளுவர் கட்டுரை
- சந்திரயான் 3
- கிட்னி செயலிழப்பு காரணம்
- செப்பேடுகள் என்றால் என்ன?
சமூகமயமாதலானது மனித நடத்தையோடும் சமூக நடத்தையோடும் தொடர்புடைய ஒரு செயன்முறையாகும். எனவேதான் காலமாற்றத்திற்கு ஏற்ப புதிய பரிமாணங்களையும் பல புதிய விடயங்களையும் உள்வாங்கி கொள்கின்றது. சமூகமயமாதல் எண்ணக்கருவை பொருத்த மட்டில் ஒரு காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த விடயமானது நவீன சமூக மாற்றத்திற்கு ஏற்பவும் உலக மாற்றத்திற்கு ஏற்பவும் பிரிதொரு காலத்தில் தனது முக்கியத்துவத்தை இழந்து விடுகின்றது. ஆகையால் சமூகமயமாதல் என்றாள் என்ன?. என்பது தொடர்பாக வரையரையை முன்வைப்பது இயலாத ஒன்றாக உள்ளது.
இருப்பினும் சமூகமயமாதலை வரைவிலக்கணப்படுத்தும் போது ஒரு மனிதன் சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்கான சமூக, சமய, கலாசார், பண்பாட்டு, ஒழுக்ககோவைகள் மற்றும் சமூகவிழுமியங்கள் போன்ற விடயங்களைக் கற்று தானும் ஒரு சமூக அங்கத்தவளாக வாழ்வதற்கு தேவையான தொடர் தேர்ச்சியான கருமத்தொடராகவும் ஒரு மனிதன் சமூகத்தில் தனிப்பட்ட அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளவும் தான் வாழும் குழவிற்கு ஏற்ப இசைவாக்கம் அடையவும் ஒரு சந்ததியிலிருந்து இன்னொரு சந்ததிக்கு கலாசாரங்களை இடமாற்றம் செய்யவும் சமூகத்தின் உறுப்பினராக இருப்பதை அறிந்து புதிய உறுப்பினர்களை சமூகத்தில் இணைத்துக்கொண்டு செயற்படும் ஒரு சமூகத்திற்கும் தனிநபருக்கும் இடையிலான தொடர்பே சமூகமயமாதல் ஆகும்.
குண்டலினி என்பது யோகா மற்றும் ஆன்மீகத்தில் குறிப்பிடப்படும் ஒரு சக்தியாகும். மேலும் படிக்கவும்
சமூகமயமாக்கம் என்பது சமூகவியல் சார்ந்த நோக்கில் தனிப்பட்டதொரு காரணியீனாலன்றி பல்வேறு காரணிகளின் பங்களிப்பின் மூலம் நிகழ்கின்றது. ஆனால் பரந்த நோக்கில் சமூகமயமாக்கல் என்பது கல்வியாகும். ஒருவர் தனிப்பட்ட அடையாளத்தைப் பெற்றுக்கொள்வதுடன் தம்மைச் சூழவுள்ள சமூகத்தின் நம்பிக்கையினையும் அச்சமூகத்தில் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை கற்கும் செயன்முறையாகும். மஸ்க்ரேவ் குறிப்பிடுகின்றார். இதனடிப்படையில் சமுகமயமாக்கல் என்பது கல்வியோடு தொடர்புடைய ஒரு செயன்முறையாகும். ஒரு மனிதன் சமூகத்தில் நம்பிக்கை, கலாசாரம். பெறுமானம், நடத்தை, சிந்தனை என்பவற்றை கற்பதன் மூலமே தமது கடமைகளை நிறைவேற்ற முடிகின்றது. தான் யார்? சமூகத்தில் தனக்குறிய இடம் என்பன பற்றிய புரிந்துணர்வும் உண்டாகின்றது.
சமூகவியல் ரீதியில் “சமூகமயமாக்கல் ஒரு செயல்முறையொன்றும், இச் செயல்முறை முக்கியமாகப் பாடசாலையைச் சார்ந்து காணப்படுகின்றது. என்றும் ஒழுங்குப்படுத்தப்பட்ட சகல கல்விச் செயற்பாடுகளும் முயற்சிகளும் அவற்றின் இலக்குகளும் கல்விச் செயற்பாடுகளை ஓர் உறுதியான திசையில் நெறிப்படுத்துகின்றன. அடிப்படையில் உயிரியல் பண்புகளைக் கொண்ட ஒருவர் ஆளுமைமிக்க சமுக உயிரியாக மாறுவதற்கு சமூகமயகாக்கள் செயல்முறை
அடிப்படையாகின்றது, இதன்மூலம் சமூகத்துக்கு வேண்டிய மனப்பாங்குகள், நடத்தைகளைக் கற்று சமூகப் பயனுள்ளவராக உருவாகின்றார். இத்துடன் என்ன விடயத்தை எந்த நேரத்தில் எப்படிச் செய்ய வேண்டும் எனவும் கற்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகின்றன. எனவே சமூகமயமாக்கல் செயன்முறையில் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவம் திறவுகோளாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. என்பது ஒரு
தனியாளின் ஆளுமையை வளர்த்தெடுத்து அதன் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு இட்டுச் சென்று. சமூகமானது அழியாமல் பாதுகாக்கும் கருவியாக கல்வி உள்ளது. தனியாளின் விருத்தி ஏற்படும் போதே சமுதாய விருத்தியும் ஏற்படுகின்றது. பிள்ளைகளை வளப்படுத்தி அவர்களை நற்பிரஜைகளாக சமூகத்தினுள் புகுத்த வேண்டிய பொறுப்பு பாடசாலையுடையதாகும். கல்வியினால் வாழ்க்கை முறைகள், செயற்பாடுகள் ஆகியன குறுகியகால இடைவெளியில் மாறிவிடுகின்றன. நாம் கற்றவற்றில் சில விடயங்கள் நமது வாழ்க்கைக்கு பயன்படாத அளவிற்கு, இன்றைய சமூகம் விரைவில் மாறிக்கொண்டு வருகின்றது. இதனால் மாறிவரும் விஞ்ஞான தொழிநுட்ப உலகிற்கு பொருத்தமான கல்வியை தொடர்ந்தும் மாணவர்கள் கற்கவேண்டி உள்ளது. இதற்கு பாடசாலையும். சமூகமும் இணைந்து தகுந்த சூழலை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் பாடசாலைகள், சிறுவர்களையும், இளைஞர்களையும் சமூகமயப்படுத்தும் முறைசார்ந்த நிறுவனங்களாக திகழ்கின்றன.
கல்வி நிலையங்கள் எவ்வழியோ சமூகமும் அவ்வழி என்பது நடப்பியலாகும். இங்கு சமூக இயல்புக்கு ஏற்றவாறு மாணவர்களை தயார்படுத்தவும். இசைவு மிக்கவர்களாக உருவாக்கவும் தேவையான பல செயற்பாடுகள் மேற்கொள்ளப்பபடுகின்றன. அவ்வகையில் சமூக உணர்வை வளர்த்தல், சமூக நடத்தைகளுடன் இசைவுபடுத்தல், சமூக கட்டுபாடுகளுக்கு கீழ்படியச் செய்தல், சமூக விழுமியங்களை புகட்டல், புதிய தொழிநுட்ப அறிவுக்கு இசைவுபட வைத்தல், சமூக தொடர்பாடலை வளமாக்கிக் கொள்ள உதவுதல் போன்றன அவற்றில் முக்கியமானவையாகும். சமூக உறவினை ‘கற்றல்’ என்ற கட்டமைப்புக்குள் கொண்டு வரும் பணியினை பாடசாலை செய்வதுடன் என்றுமே முதல் தர கல்வி நிறுவனமாகவும் இது தொழிற்படுகின்றது.
பாடசாலைகள் சமூகத்தின் கண்கள் என்று சொல்வார்கள். இதற்கு பல்வேறு அர்த்தங்கள் உள்ளன. ஒரு மனிதன் இன்னொரு மனிதனைப் பார்த்து அவனுடன் கதைக்க விரும்பினாலோ அல்லது பழக விரும்பினாலோ அவன் அந்த மனிதனின் கண்ணையே முதலில் நோக்குகின்றான். தன்னை அவன் பார்க்கும் போது தனது விடயத்தை அந்த மனிதனிடம் சொல்லிவிடுகின்றான், அது பேச்சாக இருக்கலாம். சைகையாக இருக்கலாம் அல்லது கண் சாடையாக இருக்கலாம். அல்லது அங்க அசைவுகள் மூலம் வெளிப்படுத்தப்படலாம். கண்கள் ஆக்கத்துக்கும் பயன்படுத்தப்படுகின்றன. அழிவுக்கும் அதே கண்கள் காரணமாக இருக்கின்றன. எனவே கண் என்பது மனித வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. இந்தக் கண்ணுக்கு ஒப்பாகத் தான் ஒரு சமுதாயத்தின் பாடசாலை விளங்குகின்றது. இந்தக் கண் மூலமே ஏனைய மனிதர்களையும் சமூகங்களையும் ஒரு பாடசாலை பார்க்கின்றது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் கண்ணை முதலில் நோக்குவது போன்று பிற மனிதர்களும் சமூகங்களும் இன்னொரு சமூகத்தை விளிக்க அந்த சமூகம் சார்ந்த பாடசாலைகளையே பார்த்து அந்த சமூகத்தை மறிப்பிடுகின்றது. அது
இன்று உலக அரங்கில் பழமையில் பெருமளவு ஊறியிருந்து நவீனமாக்கிக் கொள்ளும் செயன்முறைக்கு கல்வி பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது. இவை அனைத்தும் கல்வியின் சமூக செயலாகவே அமைகின்றன. சமூகத்தில் பல பிரச்சினைகளுக்கும் கல்வி விடை காணும் தன்மை கொண்டது. அதன்படி கல்வியில் மாணாக்கரை முழுமையான இயல்புடையவர்களாகஉருவாக்குவதே கல்வியின் தலையாய நோக்கமாகும். கல்வியும் சமூகமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன. என்பதை ஜே.எம்.கில்டர் என்பவர் முதன்முதலில் வெளிப்படுத்தினார். இதனை மையமாகக் கொண்டு தற்கால கல்வித்திட்டங்கள் அமைந்துள்ளன.
கல்வியினால் சமுதாயத்தை சிறப்பாக உருவாக்க முடியும். கல்வி மனித சமூகத்தை பக்குவப்படுத்தும் கருவியாகும். இளைய தலைமுறையினரை வழிநடத்துவதிலும் சமுதாயத்தில் தன்னுடைய பங்களிப்பினை செய்ய வைப்பதிலும் கல்வி முதன்மை இடத்தை பெறுகின்றது. இதனை ஜி.கே.செஸ்தேர்டோன் எனும் தத்துவ அறிஞரும் உறுதிப்படுத்துகின்றார். மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கு கல்வித்துறை அவசியமாகின்றது. விஞ்ஞான ரீதியான கல்வியின் உச்ச நிலையே தற்போதைய நவீன வசதிகள் கொண்ட உலகமாகும். அதன் இயல்புக்கேற்ப சமூகத் தேவைகளை நிறைவுசெய்வற்கு அனைத்து மனிதர்களுக்கும் கல்வி கருவியாக உள்ளது. அந்த வகையில் தல்வியானது சமூகத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அது சமூக அறியாமை இருளை நீக்குகின்றது. சமூகத்திலுள்ள மூட நம்பிக்கைகளை நீக்கி அறிவை வழங்கும் சாதனமாகக் காணப்படுகின்றது.
உலகில் மனிதன் தனியாகப் பிறப்பதுமில்லை தனியாக வாழ்வதுமில்லை. அனைவரும் ஒன்றினைந்து சமூகமாகவே வாழ்கின்றனர். எமது சமுதாயத்தினை நோக்கினால் பன்மைச்சமூகவே வாழ்கின்றனர். இப் பன்மைச்சமூகம் முறிவின்றி சுமுகமாக இயங்குவதற்கு கல்வி அவசியமாகின்றது. கற்பதனால் மனிதன் பண்பாடடைகின்றான், சாதி, மதபேதமின்றி ஒன்றினையத் தூண்டுவதே கல்வி, சமூகத்தையும் மனிதனையும் இணைக்கும் செயற்பாட்டில் அது பெறும் பங்கினை பெறுகின்றது. பொதுவாக சிந்திக்குமிடத்து இளந்தலைமுறையினரை முறையாக சமூகமயமாக்குவதே கல்வியின் பிரதான பணி எனக்கூறலாம்.
அத்துடன் கல்வியின் மூலமே ஒரு சமூகம் வேண்டி நிற்கின்ற விழுமியங்கள் உடலியற் திறன்கள் அறிவுசார் திறன்கள் என்பவற்றை பெற்றுக்கொடுக்கவும் முடியும். இதனையே டெலோர்ஸ் அறிக்கை பின்வருமாறு கூறுகின்றது. ‘இணைந்து வாழக்கற்றல். மற்றவர்களுடன் வாழக்கற்றல் என்பது மற்றவர்கள் பற்றிய புரிந்துணர்வின் விருத்தியைக் கருதும் பன்மைத்துவம் வேறுபாடுகளை மதித்தல் சமாதானத்தை விரும்புதல் என்பவற்றின் அடிப்படையில் இப்புரிந்துணர்வு ஏற்படுதல் வேண்டும். தனியாட்களும் சமுதாயங்களும் நாடுகளும் ஒருவரில் ஒருவர் தங்கி வாழ்பவர்கள் என்னும் கருத்து விருத்தி முக்கியமானது.”
சமூகமானது காலத்திற்கு காலம் வேறுபாடுகளையும் பல் மாற்றங்களையும் சந்தித்துக்கொண்டே இயங்குகின்றது. இவ்வாறான மாற்றங்களின் தன்மைகளை அதிகமாக உள்ளடக்கிய நிலையங்கள் கல்வி வழங்கும் நிறுவனங்களே. குடும்ப பின்னனியை மட்டுமே அடிப்படையாக கொண்டு பாடசாலையில் அனுமதிக்கப்படும் பிள்ளையானது பாடசாலையை விட்டு வெளியே செல்லும் போது நடத்தை மாற்றங்களை உள்வாங்கியவனாக சமூகத்திற்கு ஏற்றாட்போல் இசைவாக்கம் மிக்கவளாக சமூகத்தில் கால்தடம் பதிக்கிறான். இவ்வாறாக சமூகமயமாக்கலின் நோக்கில் கல்வியானது இன்றியமையாததாகும்.
சமூகத்தையும் மனிதனையும் இணைக்கும் செயற்பாட்டில் கல்வி பெரும் பங்கினைபெறுகிது. கற்பதனால் மனிதன் பண்பாடடைகின்றான். சாதி, மதபேதமின்றி ஒன்றிணையத் தூண்டுவது கல்வி, சமூகமயமாக்கலை ஏற்படுத்தும் தலைசிறந்த நிறுவனம் பாடசாலை ஆகும். பாடசாலை பல்வேறு வளங்களைக் கொண்டுள்ளது. மனிதவளம், பௌதீகவளம், நிறுவனவளம், தொழிநுட்ப வளம், என அனைத்தையும் பாடநூல் உள்ளடக்கியுள்ளது. இவ்வாறான வளங்கள் அனைத்தும் மாணவர்களின்
ஆளுமை விருத்தி, சமூகத் தொடர்புகளுக்கான இயலுமை உள்ளவர்களாக உருவாக்குவதனை மையமாக கொண்டிருப்பதனை இனங்காண முடியும். பாடசாலையானது குடும்பத்திற்கு அடுத்த படியாக மாணவர்களின் சமூகமயமாக்கல் செயற்பாட்டில் பிரதான நிறுனமாக அமைகின்றது,
ஏனெனில் அதிகமானவர்களுக்கு வீட்டு வாழ்க்கைக்கு பின்னர் மிகத் தாராளமான சமூகமயமாக்கல் முகவராக ஆசிரியர்கள் இருக்கின்றனர். சமூக மேம்பாடுகள் பற்றிய கல்வியை ஆசிரியர் வழங்குவதன் மூலம் கல்வியினூடாக மாணவர்கள் சமூகத்தினுள் இலகுவாக பிரவேசிக்க முடிகிறது. பிள்ளை பாடசாலைக் கற்றலில் தான் பெற்ற அறிவைக் கொண்டு சூழலில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. பாடசாலைக் கற்றலில் மாணவர்கள் அரசியல் தொடர்பான விடயங்களை கற்கும் போது அது தொடர்பான தெளிவு சமூகத்திற்கு சென்றடைகின்றது.
மேலும் கல்வியின் அடிப்படை அம்சமான பாடங்களின் ஊடாக சமூகவியல் அம்சங்கள் உள்ளடங்கி இருப்பதை அவதானிக்கலாம். வாழக்கைதேர்ச்சி குடியுரிமை கற்கை. வரலாறு, சமயம், சமூக கல்வி. விவசாயம், தொழிநுட்பவியல். செயன்முறை தொழிநுட்பம் போன்ற பாடவிதான உள்ளடக்கங்கள் சமூகத்தில் காணப்படும் ஒற்றுமை, விட்டுக்கொடுத்தல், அன்பு, அறப்பண்புகள். அயலவர்களின் முக்கியத்துவம், உதவி செய்தல், தொழில் உலகிற்கு தயாராகுதல் என பல் விடயங்கள் தன்னகத்தே கொண்டு பிள்ளைகளை சமூகமயமாக்கல் சூழலில் வழிசமைக்கின்றது. இவை அனைத்தினதும் இறுதி எல்லை சமூகமாகவே உள்ளது.
அத்துடன் பாடசாலையில் பல சமூக வகுப்பு மாணவர்கள் வருகைத்தருவார்கள். இவர்களுடன் ஒன்றுப்பட்டு செயற்படுவதனால் குறிப்பிட்ட மாணவன் சமூகத்தில் இவ்வாறான சமூக வகுப்புக்கள் காணப்படுகிறது என அறிந்துக்கொள்கிறான். மேலும் பாடசாலையில் கட்டுப்பாடுகளுக்கு கீழ்படிதல், நேரத்திற்கு வேலை செய்தல். நேரசூசி படி நடத்தல், நேர்த்தியாக இருத்தல், ஒன்றுப்பட்டு செயற்படல், தனக்கு வழங்கிய பொறுப்புகளை சரிவர செய்தல், அவ்வாறு செய்யாவிடின் தண்டனைகள் கிடைத்தல் போன்ற அம்சங்கள் கல்வி புகட்டுவதினூடாக இடம் பெறுகின்றது. இந்த நடவடிக்கையானது எதிர்காலத்தில் அவர்களின் தொழில்சார் நடவடிக்கைகளை திறம்பட கொண்டு செல்ல உறுதுனையாக அமைகிறது.
பல்வேறுப்பட்ட கலாசாரங்களை கொண்ட பிள்ளைகள் கல்வி கற்க வருகைதருவார்கள் அந்தச்சந்தர்பத்தில் வேறுப்பட்ட கலாசார சமுகத்தின் நடவடிக்கைகளை கற்றுக்கொள்வதுடன் சமூகத்திற்கு செல்லும் போது அக்கலாசாரத்தை பொருத்தமான முறையில் கையாளவும் செய்கிறான். இதன் போது கல்வியானது சமூகவியல் அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது எனலாம். இவ்வாறாக சமூகவியல் சார்ந்த எண்ணக்கருக்கள் கல்வியில் காணப்பட்டாலும் பல்வேறுப்பட்ட முரண்பாடுகள் மிக்க தன்மையையும் நாம் கல்வியில் அவதானிக்கலாம்.
இவ்வாறாக சமூகவியல் நோக்கில் கல்வியை அணுகும்போது கல்வி நடவடிக்கைகளில் பெரும்பாலான இடங்களில் சமூகமயமாக்கல் தன்மை காணப்பட்ட போதிலும் உள்ளார்ந்த ரீதியில் உற்று நோக்கும் போது பாடசாலையில் நடைப்பெறும் கல்வி நடவடிக்கையானது அனைவருக்கும் ஒரே விதமான சமூகமயமாக்கல் தன்மைகளை வழங்க வேண்டும், ஆனால் அவ்வாறு நடைப்பெறுவதில்லை. ஒவ்வொரு கல்வி நிலையங்களும் வெவ்வேறு விதமாக கல்வியை வழங்கும் போது வெவ்வேறு விதமான சமூகமயமாக்கல் தன்மைகளே கல்வியின் கற்றுகொடுக்கப்படுகின்றது. இதனால் சமூகத்தில் அனைவரும் சமம் என்ற கூற்று என்றுமே மூலம் வரப்போவதில்லை. மாறாக தற்போது காணப்படும் இதே சமூகமயமாக்கல் என்ற தொடர்ச்சியே எதிர்காலத்திலும் காணப்படும் என்பது நிதர்சனமான உண்மையே.
சமூகமும் கல்வியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றதாகும். இரண்டும் ஒன்றுடன் ஒன்று நெருங்கியதொடர்பினைக் கொண்டு காணப்படுகின்றமை கண்கூடு. சமூகத்தில் காணப்படும் நடத்தை, எண்ணம். இலக்கு என்பன நல்வியின் மூலமே தீர்மானிக்கப்படுகின்றது. அந்தவகையில் சமூக அபிவிருத்தியின் திறவுகோளே கல்வி, மாற்றமடையும் சமூகத்திற்கு ஏற்ப மாறுவதற்கும் எம்மை அதற்கேற்ப இசைவாக்கம் கொண்டவராக முகாமைத்துவம் செய்வதற்கும் கல்வியே அடிப்படையான எண்ணக்கருவாகும். எனவே வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப கல்வியை முழுமையாக பெற்று அதற்கேற்ப செயற்பட்டு சமூகத்தினை உயர்த்துவோமாக
மு.மதுஷானி
நான்காம் வருட சிறப்புக்கற்கை மாணவி கல்வி பிள்ளை நலத்துறை கிழக்குப் பல்கலைக்கழகம்
இலங்கை