துன்ஹிந்தா அருவி: இலங்கையின் அற்புத இயற்கை அழகியல்
பதுளை நகரிலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்தில் பதுளை மஹியங்கன பாதையில் உள்ளது. இலங்கையின் பதுளை மாவட்டத்தில் உள்ள துன்ஹிந்தா அருவி (Dunhinda Falls) அதன் அற்புதமான இயற்கை காட்சிகளால் சுற்றுலாப் பயணிகளையும், பிரதேச மக்களையும் ஈர்க்கும் இடமாக விளங்குகிறது. இந்த அருவி நீர் மொத்த உயரத்தில் இருந்து விழும் போது அதன் உருவாகும் பனித்துளி மாயகாட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது.
துன்ஹிந்தா அருவியின் சிறப்பம்சங்கள்
துன்ஹிந்தா அருவி சுமார் 64 மீட்டர் (210 அடி) உயரத்தில் இருந்து விழுகிறது. பார்ப்பதற்கு அழகாகவும் ஆபத்தாகவும் தெரியும் நானும் ஒருமுறை குடும்பத்தாருடன் சென்றிருந்தேன்.
துன்ஹிந்தா” என்பதற்கு “புகைபோன்ற நீர்த்துளிகள்” என்று அர்த்தம். அருவி விழும் போது அதன் நீர்த்துளிகள் பனிபோன்று காற்றில் பரவுவதால் இப்பெயர் கிடைத்தது.என்று சொல்லுவார்கள்
இது பதுளை நகரின் மையத்திலிருந்து 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அருவியை அடைவதற்கு கிட்டத்தட்ட 1 கிமீ சறுக்கலான நடைபாதை வழியாக செல்லவேண்டும். மிகவும் அவதானமாக செல்லவேண்டும் சறுக்கினால் கோவிந்தாதான்
அடர்ந்த காடுகள் மற்றும் பறவைகள் இப்பகுதியின் சிறப்பை கூட்டுகின்றன. குரங்குகள் பயணிகளின் சாப்பாட்டுக்காக காத்திருக்கும் கொடுக்காவிடின் பறித்துவிடும்
நீர்வீழ்ச்சியின் சாரல் மற்றும் பசுமையான சூழல் சுற்றுலாப் பயணிகளுக்கு அமைதியான அனுபவத்தை வழங்குகிறது.
துன்ஹிந்தா அருவி சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்லாமல், இயற்கை ஆர்வலர்களுக்கும், புகைப்படக் கலைஞர்களுக்கும் சிறந்த இடமாக உள்ளது. இதன் அமைதி மற்றும் இயற்கையின் தாத்பர்யத்தை காண விரும்புபவர்கள் இவ்விடத்தை தவறாமல் காண வேண்டும்.
முக்கிய குறிப்பு
- அருவியை பார்வையிடும் போது பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியம்.
- அருவியில் குளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்கவும்.
- அருவியை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்.
சிறந்த காலம்: மழைக்காலத்திற்குப் பிறகு (ஏப்ரல்-செப்டம்பர்) அருவி மிகவும் அழகாக இருக்கும்.
தவிர்க்க வேண்டிய காலம்: மழைக்காலம் (அக்டோபர்-மார்ச்). மழைக்காலத்தில் அருவியின் நீர் மட்டம் அதிகமாக இருக்கும், மேலும் செல்லும் வழி சேதமடையக்கூடும்.
துன்கிந்த நீர்வீழ்ச்சி மிகவும் அழகானது சேறுகள் சகதிகள் நிறைந்த அதன் பாதையின் ஊடாக சென்று பார்ப்பதற்கு பிரயோசனமானது. அந்த வழியில் உடலை புத்துணர்ச்சியாக்கவும் களைப்பாறவும் பல மருத்துவ குடிபான வியாபாரிகள் காணப்படுகின்றனர். தேனீர் ஏனைய சாப்பாட்டு உணவுகளினையும் பணம்கொடுத்தல் தருவார்கள் . பார்வையாளர்கள் நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்கு வழியின் முடிவிலே பாதுகாப்பான ஓர் மேடை அமைக்கப்பட்டுள்ளதால் துணிச்சல் மிக்கவர்களால் நீர்வீழ்ச்சியின் எதிர்ப்பக்கத்திற்கு சென்று அதன் மிகவும் அழகிய காட்சியினைக் காண முடியும்.
துன்ஹிந்தா அருவி தொடர்பான கேள்விகள் மற்றும் பதில்கள்
- கேள்வி: துன்ஹிந்தா அருவியின் உயரம் என்ன?
பதில்: 64 மீட்டர் (210 அடி). - கேள்வி: துன்ஹிந்தா என்ற பெயரின் அர்த்தம் என்ன?
பதில்: “புகைபோன்ற நீர்த்துளிகள்.” - கேள்வி: துன்ஹிந்தா அருவி எந்த மாவட்டத்தில் உள்ளது?
பதில்: பதுளை மாவட்டம். - கேள்வி: துன்ஹிந்தா அருவி செல்ல சிறந்த பருவ காலம் எது?
பதில்: மே முதல் செப்டம்பர். - கேள்வி: துன்ஹிந்தா அருவி எந்த ஆற்றின் பகுதியாக உருவாகியது?
பதில்: பதுளை குபிடிய ஆறு. - கேள்வி: துன்ஹிந்தா அருவியை அடைவதற்கான நடைபாதையின் நீளம் எவ்வளவு?
பதில்: சுமார் 1 கிலோமீட்டர். - கேள்வி: துன்ஹிந்தா அருவியின் சுற்றுப்புறத்தில் காணப்படும் முக்கிய இயற்கை அம்சங்கள் என்ன?
பதில்: அடர்ந்த காடுகள் மற்றும் பறவைகள். - கேள்வி: துன்ஹிந்தா அருவியின் புகழ்பெற்ற தனிச்சிறப்பு என்ன?
பதில்: அருவி விழும் போது உருவாகும் பனித்துளி. - கேள்வி: துன்ஹிந்தா அருவிக்கு அருகில் உள்ள நகரம் எது?
பதில்: பதுளை. - கேள்வி: துன்ஹிந்தா அருவியை சுற்றுலா பயணிகள் ஏன் அதிகம் பார்வையிடுகிறார்கள்?
பதில்: இயற்கை அழகு மற்றும் அமைதியான சூழலுக்காக.